தேனீ கொட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனீ கொட்டு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T63.4, X23
ஐ.சி.டி.-9989.5, E905.3
ம.பா.தD007299

தேனீ கொட்டு (Bee sting) என்பது தேனீ தனது கொடுக்கினால் மனிதர் அல்லது விலங்குகளைக் கொட்டுவது. கொட்டும் போது தேனீயின் கொடுக்கு மூலம் நச்சுப் பொருட்கள் மனித உடலுள் செலுத்தப்படுகின்றன. ஒரு தேனீ ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ கொட்டும் போது அது எச்சரிக்கை ஃபெரமோன்களை வெளியிடுகிறது. இதனால் மற்ற தேனீக்களும் ஃபெரமோன்களால் கவரப்பட்டு அங்கே வந்து கொட்ட ஆரம்பிக்கின்றன.

கூட்டுக்கு வெளியே மகரந்தச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேனீக்கள் பொதுவாக கொட்டுவதில்லை. கூட்டிற்கு அச்சுறுத்தல் வரும் போது மட்டுமே அவை கொட்டுகின்றன.

ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு இல்லாததால் அவை கொட்ட இயலாது. பெண் தேனீக்களே கொட்டும். இராணி தேனீ பொதுவாக கூட்டை விட்டு வெளியே வராது. ஆனால் அது பல முறை கொட்டும் வல்லமை பெற்றது. மற்ற தேனீக்கள் ஒருமுறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில் அவற்றின் கொடுக்கு எதிரியின் உடலில் சிக்கிக் கொள்ளும்.

மருத்துவம்[தொகு]

உடனடியாக கொடுக்கை அகற்ற வேண்டியது மிக மிக முக்கயமான ஒன்றாகும். இது நச்சு மேலும் உடலினுள் உட்செலுத்தப்படுவதைத் தடுக்கும். மருத்துவ உதவி உடனே நாடப்பட வேண்டும். தேனீ கொட்டுக்கு சில பாரம்பரிய வைத்தியமுறைகளும் முன்வைக்கபடுகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_கொட்டு&oldid=2745303" இலிருந்து மீள்விக்கப்பட்டது