மனித ஆல்புமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Albumin, Human.

மனித ஆல்புமின் (Human albumin ) என்பது மனிதரின் பிளாஸ்மாவில் உள்ள முதன்மைப் புரதம். இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொழுப்பு அமிலங்கள், வளரூக்கிகள் மற்றும் பல பொருட்களையும் சுமக்கும் புரதமாக ஆல்புமின் உள்ளது.

உடல்நலமுள்ள மனிதரில் 100 மில்லி லிட்டர் பிளாஸ்மாவில் 3.4 முதல் 3.4 கிராம் ஆல்புமின் இருக்கும். ஆல்புமினின் சவ்வூடு பரவல் அழுத்தம் காரணமாகவே இரத்தக் குழாய்களுக்குள் நீர் தக்கவைக்கப்படுகிறது. கல்லீரல் செயலிழக்கும் போது ஆல்புமின் உற்பத்தி நின்று போகிறது. எனவே இரத்தக் குழாய்களுக்குள் நீர் நிற்பதில்லை. புவியீர்ப்பு விசையின் காரணமாக இந்த நீர் கால்களில் வந்து சேர்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_ஆல்புமின்&oldid=3724628" இலிருந்து மீள்விக்கப்பட்டது