பயனர் பேச்சு:Jayarathina/தொகுப்பு01

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்துகள்![தொகு]

Jayarathina, தமிழ் விக்கியில் கிறித்தவ சமயம் குறித்தும் கத்தோலிக்க திருச்சபை குறித்தும் தாங்கள் இடுகின்ற கட்டுரைகள் நன்றாக உள்ளன. பாராட்டுகள்! ஆங்காங்கே புதிய சொல்லாக்கங்கள் செய்துள்ளீர்கள். எடுத்துக்காட்டாக, Blessed என்பதை அருளாளர் என்று பெயர்த்துள்ளீர்கள். பழைய வழக்கில் முத்திப்பேறு பெற்றவர் என்றிருந்தது. அதையும் விக்கியில் குறிப்பிடலாம். Servant of God இறை ஊழியர் என அமையலாம். இறைபணி என்பது வழிபாடு குறிக்கவும், திருப்பணி ஆற்றுவோரின் செயல்பாடு குறிக்கவும் அதிகம் பயன்படுகிறது. Mary Magdalene என்பது மர்தலேன் மரியாள் என்றுள்ளது. மகதலா மரியா என்று தமிழ் விவிலியத்தில் (1995) உள்ளதைக் கையாளலாம் (காண்க: மத்தேயு 28:1...). அன்னை தெரேசா கட்டுரையும் பாராட்டுக்குரியது. நேரம் கிடைக்கும்போது தங்கள் இடுகைகளுக்கு மெருகூட்டலாம் என எண்ணியுள்ளேன். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். வணக்கம்!--பவுல்-Paul 20:00, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

Y ஆயிற்று தங்களது ஊக்கத்திற்கு நன்றிகள் பல. தங்களின் அறிவுரைகளின் படியே செய்துள்ளேன்.-- ஜெயரத்தின மாதரசன் 05:46, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

புனிதர்[தொகு]

புனிதர் (saint), புனிதர் பட்டம் (sainthood) என்ற இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். இவையிரண்டும் ஆங்கிலத்தில் ஒரே பொருளுடையவை. தமிழில் ஏன் இரண்டு கட்டுரைகள். en:canonisation என்ற ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு புனிதர் பட்டம் கட்டுரையில் இணைப்புக் கொடுத்திருக்கிறீர்கள். சிக்கலாக இருக்கிறது. பவுல் அவர்கள் இது குறித்து உதவலாம்.--Kanags \உரையாடுக 11:12, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

புனிதர் என்னும் கட்டுரை புனிதமாக வாழ்ந்த நபர்களைப் பற்றியும். புனிதர் பட்டம் என்னும் கட்டுரை பட்டத்தை பற்றியும் இருக்குமாறு இருவேறுபட்ட கட்டுரைகளை துவங்கினேன். புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு, ஆங்கிலத்தில் Canonization என்றழைக்கப்படுகின்றது. அதற்கு இணையான சொல் தமிழில் இல்லாததால் புனிதர் பட்டம் என்னும் தலைப்பில் அதனை ஆரம்பித்தேன். தவறு இருப்பின் மன்னித்துவிடுங்கள். சரியான தலைப்பிட உதவுங்கள்- ஜெயரத்தின மாதரசன் 16:33, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆங்கிலத்தில் Graduate (noun) என்றும் Graduation என்றும் வருவதுபோல, saint, canonization என்னும் சொற்கள் உள்ளன. ஜெயரத்தின மாதரசன் கூறுவதுபோல, இரு இடுகைகள் செய்வது பொருத்தமே. புனிதர் என்பது இறைபக்தியிலும் பிறர்நலப்பணி புரிவதிலும் சிறந்து விளங்கியோரைக் குறிக்கும் சொல். அவ்வாறு சிறந்து விளங்கியோரை எல்லா மக்களின் முன்னிலையில் பிரகடனப்படுத்தி, அவர்கள் நாம் பின்பற்றத்தகுந்த முன்மாதிரியாக உள்ளனர் என்று உலகறிய எடுத்துரைக்கும் செயல்/நிகழ்வு புனிதர் பட்டமளிப்பு (canonization) எனப்படுகிறது. எனவே, புனிதர் என்றும், புனிதர் பட்டமளிப்பு என்றும் இரு இடுகைகள் இருப்பது சிறப்பு. ஆங்கில விக்கியிலும் பிற மொழி விக்கிகளிலும் இதைக் காணலாம்.--பவுல்-Paul 17:12, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
அப்படியானால் புனிதர் பட்டம் என்ற தலைப்பை புனிதர் பட்டமளிப்பு என மாற்றி விடலாமா?--Kanags \உரையாடுக 21:17, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
  • ஆம், புனிதர் பட்டமளிப்பு என்றால் பொருத்தமாக இருக்கும்.--பவுல்-Paul 23:48, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
  • Y ஆயிற்று இதை நானும் ஏற்கிறேன். நன்றி திரு. பவுல், நன்றி திரு. Kanags --ஜெயரத்தின மாதரசன் 03:58, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கி உள்ளினைப்புகள்[தொகு]

வணக்கம் ஜெயரத்தின மாதரசன். கிறித்தவம் தொடர்பான உங்கள் கட்டுரைகள் அருமை. ஒரு சிறு திருத்தம். கட்டுரைகளின் உப தலைப்புகளில் விக்கி உள்ளினைப்புகள் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களின் புதிய ஏற்பாடு கட்டுரையில் இதை திருத்தியுள்ளேன். பார்க்கவும். நன்றி. --அராபத்* عرفات 18:25, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

திரு. அராபத் அவர்களே, தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. இனிமேல் இவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். -- ஜெயரத்தின மாதரசன் 19:15, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

பாராட்டுகள்[தொகு]

  • ஜெயரத்தின மாதரசன், பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு, பாஸ்கா புகழுரை போன்ற கட்டுரைகளுக்கு மேலதிக தகவல்கள் சேர்த்தும் மெருகூட்டியும் மேம்படுத்தியதைக் கண்டேன். பாராட்டுகள்.--பவுல்-Paul 05:25, 22 ஏப்ரல் 2011 (UTC)
தங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.--ஜெயரத்தின மாதரசன் 16:54, 22 ஏப்ரல் 2011 (UTC)

முதற்பக்க அறிமுகம்[தொகு]

ஜெயரத்தின மாதரசன்,
முதற்பக்கத்தில் காட்சிபடுத்த உங்களைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்பை பின்வரும் பக்கத்தில் இட வேண்டுகிறேன்.
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெயரத்தின மாதரசன்--சோடாபாட்டில்உரையாடுக 10:21, 15 மே 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று சொன்னபடி செய்துள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 20:26, 15 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி ஜெயரத்தின. மே 29 அன்று முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் காட்சிப்படுத்தப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:17, 20 மே 2011 (UTC)[பதிலளி]
படிமம்:Blush.png நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:53, 20 மே 2011 (UTC)[பதிலளி]
முதல் பக்கத்தில் இட்டுள்ளேன். இன்னும் இரு வாரங்களுக்கு முதற்பக்கத்தில் இருக்கும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:45, 29 மே 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:19, 29 மே 2011 (UTC)[பதிலளி]

வார்ப்புரு, பகுப்பு[தொகு]

மாதரசன், உங்கள் பயனர் வெளியில் உள்ள தேவையற்ற கட்டுரைகளை நீக்கியிருக்கிறேன். பகுப்புகளை மாற்ற வேண்டுமானால் தனித்தனியே அக்கட்டுரைகளில் மாற்றம் செய்ய வேண்டும். அவற்றையும் மாற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:32, 19 மே 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா - --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:28, 19 மே 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

  • உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள் ஜெயரத்தின மாதரசன். --P.M.Puniyameen 14:02, 29 மே 2011 (UTC)[பதிலளி]
படிமம்:Blush.png உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:16, 29 மே 2011 (UTC)[பதிலளி]
  • ஜெயரத்தின மாதரசன், முதற் பக்க அறிமுகத்தில் தாங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டேன். பாராட்டுகள்! கிறித்தவம் வலைவாசல் உருவாக்குவதிலும் கிறித்தவம் தொடர்பான பல கட்டுரைகள் தொகுப்பதிலும் ஆர்வம் காட்டிவருகிறீர்கள். தங்கள் பணி மேலும் சிறக்க உளமார வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 00:20, 30 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி, திரு. பவுல் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:38, 30 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி, திரு. கனகரத்தினம் சிறீதரன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:40, 30 மே 2011 (UTC)[பதிலளி]
திரு. தேனி.எம்.சுப்பிரமணி அவர்களே, தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:54, 30 மே 2011 (UTC)[பதிலளி]
திரு. சஞ்சீவி சிவகுமார் அவர்களே, தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:54, 30 மே 2011 (UTC)[பதிலளி]
  • உங்கள் முதற்பக்க அறிமுகம் நோக்கினேன். கிறித்தவம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு இன்னுமொரு தூணாக விளங்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.--செந்தி//உரையாடுக// 20:26, 30 மே 2011 (UTC)[பதிலளி]
ஐயையோ... தூணேல்லாம் கிடையாதுங்க.. யாராவது கேட்டுட போறாங்க. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:27, 31 மே 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
உங்கள் பயனர் பக்கம் மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். :) எனது பாராட்டுகள். வடிவமைப்புகள் தொடர்பான ஐயங்கள் இருப்பின் உங்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றுள்ளேன். :) வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:46, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஐயா, தங்களின் பதக்கத்திற்கு மிக்க நன்றி. ஆனாலும், இவ்வடிவமைப்பு என்னால் உருவாக்கப்பட்டது அல்ல. ஆகவே இதற்கு நான் தகுதி உள்ளவனா என்பது தெரியவில்லை. ஆங்கில விக்கியின் en:User:Antandrus என்பவருக்காக, en:User:Phaedriel-ஆல் இது சில ஆண்டுகளுக்கு முன்பு உறுவாக்கப்பட்டது. இவர்களின் அனுமதியின் பேரிலேயே இதை எனக்கேற்றார் போல நான் பயன்படுத்தி உள்ளேன். ஆனாலும் வடிவமைப்பில் ஏதேனும் ஐயங்கள் இருப்பின் என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்ய உறுதியளிக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:08, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]

பயனர் வெளிக் கட்டுரை[தொகு]

திருத்தந்தை பத்தாம் பயஸ் பற்றிய கட்டுரை உங்கள் பயனர் வெளியில் நீண்ட காலமாக உள்ளது. அக்கட்டுரையில் மொழிபெயர்க்காத பகுதிகளை நீக்கி விட்டு சரியான கட்டுரைத் தலைப்புக்கு நகர்த்துவது நல்லது.--Kanags \உரையாடுக 06:33, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று அப்படியே செய்துள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:22, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]