அண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்டர் என்போர் சங்க கால நாட்டுமக்களில் ஆயர்(இடையர்) குடியை சேர்ந்த மக்கள் ஆவர். குதிரைமீது சென்று ஆனிரைகளை மேய்த்தவர்கள்.


  • அண்டர் குடிமக்கள் சிறந்த குதிரை வீரர்கள்.[1]
  • அண்டர் எருதுகளைக் கயிற்றில் பிணைத்து ஓட்டிச் செல்வர்.[2]
  • நள்ளி நாட்டுக் காடுகளில் அண்டர் குடிமக்கள் வாழ்ந்தனர். குதிரை மீது ஏறி ஆனிரை மேய்ப்பது இவர்கள் தொழில். இவர்கள் வழங்கும் நெய் மிகச் சிறந்தது.[3]
  • மாஅல் யமுனைத் துறையில் அண்டர் மகளிர் ஆடைக்காக மரத்தை மிதித்துக் கிளைகளை வளைத்துத் தந்தான்.[4]
  • அண்டர்மகன் குறுவழுதியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கால்வல் புரவி அண்டர் ஓட்டி – பதிற்றுப்பத்து 88
  2. அண்டர் கயிறு அரி எருது - குறுந்தொகை 117
  3. குறுந்தொகை 210
  4. தொழுநை வார்மணல் அகன்துறை
    அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
    மரம் செல மிதித்த மாஅல் - அகம் 59-5

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டர்&oldid=3020361" இலிருந்து மீள்விக்கப்பட்டது