திருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம் என்பது திருக்குறள் நெறிகளையும், தமிழின் சிறப்பையும் விளக்கிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களால் 1949 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற ஒரு தமிழ் அமைப்பாகும். தமிழறிஞர் தி.து.சுந்தரம் என்பவரால் நடத்தப் பெற்று வரும் இந்நிறுவனம் மூலம் திருக்குறள் நெறிபரப்பும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் 6001 நிகழ்வுகள் நடத்தப் பெற்றுள்ளன.[சான்று தேவை]