பேச்சு:பந்து-குச்சி ஒப்புரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

living model - போல்மர், non-living model - போல்மம் என்ற சொற்களை இராம.கி பரிந்துரைத்திருந்தார். இச்சொற்கள் இலகுவாக இருப்பது போல் தோன்றுகிறது.--ரவி 16:42, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

போல்மர் (living model) என்பது ஒருசிறிதும் பொருந்துவதாக எனக்குப் படவில்லை. போல்மம் என்பது பொருந்துவது போல தோன்றினாலும் நிறைவு தரவில்லை. போன்மை என்பதில் இருந்து போன்மம் என்று சொல் ஆக்கலாம். விளக்க ஒப்புரு (நிலை ஒப்புரு - static model) என்பதும் இயக்க ஒப்புரு (simulation, modeling, dynamic modeling) என்பதும் பொருந்துவதாக உணர்கிறேன். Iso என்று தொடங்கும் பல சொற்களுக்கு ஒப்பு, ஒத்து, ஒரே, ஓர் முதலான முன்னொட்டுகள் பொருந்தும் என்பதால், ஒப்புரு என்பது isomer என்னும் சொற்பொருளுடன் முரண்படுவது போல் தோன்றலாம். Isomer என்பதை ஒத்துரு எனலாம், ஒற்றுரு எனலாம். ஆனால் போன்மம் என்பது இங்கு ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. "போல்" என்பதே ஒருவகையான சாரியை போன்ற உரிச்சொல்லாக இருப்பதால் இந்த நிறைவின்மையா என்பது விளங்கவில்லை. போலி என்னும் சொல் இருப்பதால் இவ்வகைச் சொற்கள் ஆக்கலாம் என்பது உணரமுடிகின்றது. சில இடங்களில் போன்மம், போலி என்னும் சொற்களை ஆளலாம். Physical model, solid model, working model போன்ற இடங்களில் போன்மம் என்பது பொருந்துமா? இயங்கியல் போன்மம்?? இயங்கியல் ஒப்புரு?? இயற்பியல் போன்மம்?? இயற்பியல் ஒப்புரு?? வேதியியல் ஒப்புரு?? வேதியியல் போன்மம்? பணவியல் ஒப்புரு, பணவியல் போன்மம் (financial model) ?? கட்டட ஒப்புரு, கட்டடப் போன்மம்??--செல்வா 17:15, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
model என்னும் சொல்லுக்காக இல்லாவிட்டாலும், ஒப்புமை--> ஒப்புமம். செய்தி, உறுதி, அறுதி என்பது போல ஒப்புதி என்றும் சொல் ஆக்கலாம் (ஒப்புமை உடையது என்னும் பொருளில்) என்று நினைக்கிறேன். Model (அழகு நங்கையர், ஆணழகர்) முதலானோரை ஒப்பனையர் எனலாம். ஒப்பனை என்றால் அழகு செய்தல் (உள்ளத்துள் அழகுணர்ச்சியுடன் ஒப்புமாறு செய்தல் ஒப்பனை- இது தற்கால மேற்குலக ஒப்பனையர் உலகில் செல்லுமா என்பது அவரவர் உளப்பாங்கைப் பொருத்ததோ??!! ). --செல்வா 17:28, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

அவர் ஒரு நடிகர், model என்று சொல்வது போல் "அவர் ஒரு போல்மர்" என்று சொல்வதும் இலகுவாக வாயில் நுழைவது போல இருந்ததால் சொன்னேன். ஒப்பனையர் போன்ற சொற்கள் பேச்சுப் புழக்கத்துக்கு வருமா என்று தெரியவில்லை :( --ரவி 20:21, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

ஒரு நடிகரை ஒரு போல்மர் என்றால் என்ன பொருள், ரவி? யாரைப் போல் இருக்கிறார்? வழிகாட்டி என்னும் பொருளில் எப்படி வரும்? முன்னெடுத்துக்காட்டாக இருப்பவர் என்னும் பொருளில் வரவேண்டும் என்று நினைத்தால், கட்டாயம் போல்மர் என்பது பொருந்தாது என்பது என் கருத்து. கோயம்புத்தூரில் ஒப்பனைக்காரன் வீதி என்று ஒரு வீதி உண்டு. மக்கள் ஒப்பனக்கார வீதி என்று பேச்சுவழக்கில் நன்றாகத்தானே கூறுகிறார்கள். நான் ஒப்பனையர் என்றது பெரும்பாலும் அழகுநங்கையர், ஆணழகர் என்று போற்றும் உடலழகு பெற்ற உடையழகு, அணியழகு மிளிர நடந்து உலா வரும் "முன்னணியர்"களைக் குறிப்பிடவே எழுதினேன். role model என்னும் பொருளில் அல்ல. போல்மர் என்னும் சொல் எங்கும் பொருந்துவதாக எனக்குப் படவில்லை. போன்மம் என்னும் சொல் ஓரளவிற்குப் பொருந்தும் ஆனாலும் நிறைவு தருவதாக தோன்றவில்லை. --செல்வா 21:02, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

விளம்பரப் படங்களில் modelஆக நடிப்பவர்களைக் குறித்தே சொன்னேன். --ரவி 21:39, 4 ஆகஸ்ட் 2008 (UTC)