அல்பேயுவின் மகன் யாக்கோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பேயுவின் மகனான
புனித யாக்கோபு
அல்பேயுவின் மகன் யாக்கோபுவின் சிலை, மாஃப்ரா அரண்மனை ஆலயம், போர்த்துகல்
திருத்தூதர்
பிறப்புதகவலில்லை
இறப்புதகவலில்லை
எகிப்து அல்லது எருசலேம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை
திருவிழா1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்),
மே 3 (கத்தோலிக்கம்),
9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைதச்சர்களின் இரம்பம்; கம்பளி; புத்தகம்
பாதுகாவல்மருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை[1]

அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு (Ἰάκωβος, பண்டைய கிரேக்கத்தில் Iakōbos) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.

விவிலியத்தில்[தொகு]

இவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார்.[2] செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.

மாற்கு நற்செய்தியில்[தொகு]

அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு[தொகு]

மாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்[3].

மாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு[தொகு]

மாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.

மத்தேயு நற்செய்தியில்[தொகு]

அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு[தொகு]

பேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோத்ரர் யோவான் ஆகியோர் இயேசு கிறித்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர்[4]. இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார்[5]. ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார்[6]. மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் [7].

மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு[தொகு]

மத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக்காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் :

  • யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக[8],
  • செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்[9],
  • அல்பேயுவின் மகனாகவும்.

உறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார்[8]. கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார்[10]. மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல "சின்ன" என்னும் அடை மொழி இல்லமல் குறிக்கின்றார்[11].

பாரம்பரியம்[தொகு]


புனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறித்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நால் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.

இவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைபணி ஆற்றும் போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.[12]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Catholic Forum Patron Saints Index: James the Lesser". Archived from the original on 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
  2. மத்தேயு 10:3, மாற்கு 3:18, லூக்கா 6:12-16 மற்றும் திருத்தூதர் பணிகள் 1:13.
  3. மாற்கு 3:16-19
  4. மத்தேயு 4:18-22
  5. மத்தேயு 9:9-13
  6. மத்தேயு 9:9
  7. மத்தேயு 10:3
  8. 8.0 8.1 மத்தேயு 13:55
  9. மத்தேயு 10:2
  10. மத்தேயு 26:37
  11. மத்தேயு 27:56
  12. Philip Schaff, History of the Apostolic Church: with a General Introduction to Church History, page 389 (New York: Charles Scribner, 1853). Citing Nikephoros, Historia Ecclesiastica II:40.