பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாண்டிருப்பு திரோபதை அம்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிழக்கு இலங்கையின் தென்பால் கல்முனைக்கு அருகில் பாண்டிருப்பு கிராமத்தில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆகமம் சாராத முறையிலான பூசைகளைக் கொன்ட இவ்வாலயம் பாண்டவர்களையும் அவர்தம் பத்தினி பாஞ்சாலியையும் பக்திபரவசத்துடன் வழிபடும் மரபைக் கொண்டது.

வரலாறு[தொகு]

15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட இந்தியாவின் கொங்கு நகரில் இருந்து வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் தாதன் எனும் முனி இலங்கைக்கு வந்தார். இவர் மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் முக்கியப்படுத்தி அதன் நிகழ்வுகளை சடங்காக நடித்துக்காட்டி வந்தார்.[1]. இவர் மட்டக்களப்பின் தென்கோடியில் இருந்த நாகர்முனைக் கோவிலில் தங்கியிருந்து சமயபோதனை செய்வதை அறிந்துகொண்ட அந்நாளைய மட்டக்களப்புக்கான திக்கதிபரான எதிர்மன்னசிங்கன் (கி.பி 1539 - கி.பி-1583) [2]அவரைச் சந்தித்து விபரமறிந்து வரவேற்றான். தாதனின் வேண்டுகோளின்படி பாண்டிருப்புக் கிராமத்தின் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நிறைந்த இடத்தை விட்ணு பாண்டவர் ஆகியோருக்கு ஆலயம் அமைக்க வழிசெய்தான்.

பூசைமுறை[தொகு]

18 நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப் போரினதும் மகாபாரதத்தினதும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை நடைபெறும். இறுதி மூன்று தினங்களும் முறையே அருச்சுனன் பாசுபதம் பெறுதல்(தவநிலை) மற்றும் தீமிதிப்பு என்பன நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வீரகேசரி, இலங்கை நாளிதழ்,2012 செப்டெம்பர்,19 பக்.4
  2. எவ். எக்ஸ்.சீ. நடராசா,மட்டக்களப்பு மான்மியம்,1962