எம். ஒய். இக்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஒய். இக்பால்
M. Y. Eqbal
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
பதவியில்
24 திசம்பர் 2012 – 12 பெப்ரவரி 2016
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
பதவியில்
11 சூன் 2010 – 3 பெப்ரவரி 2013
முன்னையவர்எச். எல். கோகிலே
பின்னவர்ஆர். கே. அகர்வால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-02-13)13 பெப்ரவரி 1951
இறப்பு7 மே 2021(2021-05-07) (அகவை 70)

எம். ஒய். இக்பால் (M. Y. Eqbal, பெப்ரவரி 13, 1951 – மே 7, 2021) சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1][2]

இளமையும் கல்வியும்[தொகு]

இக்பால் 1951ஆம் ஆண்டு பெப்ரவரி 13 அன்று பிறந்தவர். இராஞ்சிப் பல்கலைக்கழகத்திலிருந்து 1970இல் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1974ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதலாவதாகத் தேர்வுபெற்று தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றவர்.

பணிவாழ்வு[தொகு]

1975ஆம் ஆண்டில் இராஞ்சியில் வழக்கறிஞராக பணி துவங்கி குடிமையியல் வழக்குகளில் ஈடுபட்டார். 1986ஆம் ஆண்டில் இராஞ்சியிலிருந்து செயல்பட்ட பட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்காடத் தொடங்கினார். 1990இல் இதே நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1993ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞராக பதவி உயர்வு பெற்றார். இந்தக் காலகட்டத்தில் குடிமையியல், குற்றவியல் மற்றும் அரசியலைப்புச் சட்டங்களிலும் வருமான வரி வழக்குகளிலும் வழக்காடி வந்தார். பல வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மின்சார வாரியம், வீட்டுவசதி வாரியம், பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசுத்துறை நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் நிறுவன வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில் மே 9 அன்னு பட்னா உயர் நீதிமன்றத்தில் நிலையான நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 14, 2000இல் சார்க்கண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சூன் 11, 2010 முதல் டிசம்பர் 2012 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

இவரது சகோதரர் இராஞ்சி கீழ் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுகின்றார்.

மறைவு[தொகு]

நீதிபதி இக்பால் கோவிடு-19 பெருந்தொற்றால் பீடிக்கப்பட்டு 2021 மே 7 இல் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chief Justice". Madras High Court. பார்க்கப்பட்ட நாள் 6 September 2011.
  2. Murali, Krishnan. "Justice MY Eqbal retires; Vacancies in Supreme Court rise to 6", Bar & Bench (February 13, 2016).
  3. Former Supreme Court judge, Justice MY Eqbal passes away, Bar & Bench, 7 May 2021

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஒய்._இக்பால்&oldid=3841987" இலிருந்து மீள்விக்கப்பட்டது