பேச்சு:டேட்டிங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழாக்கம் தேவை[தொகு]

இதற்கு தமிழ்வழக்கு ? வினோத்ラージャン 17:39, 24 மே 2008 (UTC)[பதிலளி]

Dating என்பதன் தமிழாக்கம் என்ன ? βινόδ  வினோத் 11:08, 7 பெப்ரவரி 2008 (UTC)

தேதித்தல், திகதித்தல், line விடுதல், நூல் விடுதல், correct செய்தல், bracket போடுதல் - இவற்றில் எது நற்றமிழ் ;) --ரவி 13:43, 7 பெப்ரவரி 2008 (UTC)

தேதித்தல், திகதித்தல், What do they mean ? I haven't heard, or Atleast we dont use these terms among our peers βινόδ  வினோத் 14:12, 7 பெப்ரவரி 2008 (UTC)

வினோத்,  ;) குறி போட்டிருக்கிறதப் பாருங்க. தேதித்தல், திகதித்தல் எல்லாம் சொதப்பலான நேரடி மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்காட்டா போட்டது தான் ;)--ரவி 15:14, 7 பெப்ரவரி 2008 (UTC)


தோழி, காதலி[தொகு]

பெண் நண்பர், ஆண் நண்பர் என்பவை - girl friend, boy friend என்பவற்றின் நேரடித் தமிழாக்கம் போல் உறுத்துகிறதே? இன்னொன்று boy, girl என்பவை வயதில் இளைய பையன், பொண்ணு போன்ற சொற்களைக் குறிப்பவை. ஆண், பெண் என்பவை - man, woman, male, female என்று புரிந்து கொள்ளப்பட்டு பொருள் குன்றும் :) தோழி, காதலி என்று நம்மிடம் இருக்கும் இரு சொற்களும் தெளிவான உறவுநிலைகளை எடுத்துரைக்கின்றன. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட girl friend உறவை எப்படிச் சொல்வது?--ரவி 13:46, 7 பெப்ரவரி 2008 (UTC)

Like I didn't have any idea abt translating. So I tranlsated it word by word. I know it looks awkward. But I had no other go. What about காதலதோழி ? :-(

Take a look at the dating Article too. I couln't find any words to translate them into english. So I transliterated the word. Please suggest any appropriate terms fo that too

I think Selva can help in this regard :-)(This Guy has Tamilized words for everything!). But Asking a prof abt this would be embarassing I guess 121.246.12.6614:06, 7 பெப்ரவரி 2008 (UTC) βινόδ  வினோத் 14:10, 7 பெப்ரவரி 2008 (UTC)

வினோத், இப்போதைக்கு ஆண் நண்பர், பெண் நண்பர் என்றே இருக்கட்டும். குறை சொல்வதற்காக கருத்து சொல்லவில்லை. சும்மா என் கருத்துக்களைப் பகிர்ந்து வைக்கலாம் என்று. முழுமையான சொற்களை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தால் பல கட்டுரைகளை எழுதவே முடியாது. தற்போது, நீங்கள் இந்தக் கட்டுரையைத் தொடங்கப் போக இது போன்ற உரையாடல்கள் வழி ஏதாவது தெளிவு பிறக்கும். அதனால், தொடக்கத்தில் ஆங்கிலச் சொற்கள், நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்களைக் கொண்டே கட்டுரைகளைத் தொடங்கலாம். அறிவியல், தொழில்நுட்பத் துறை கட்டுரைகளைப் போன்று எல்லா இடங்களிலும் சொற்களைத் தயங்காமல் தமிழாக்க முடிவதில்லை. dating போன்ற தலைப்புகளில் நாமே பெயர் சூட்டுவதை விட இதற்குத் தக்க சொற்கள் ஏதும் இலக்கியத்தில் உள்ளனவா, பசங்களிடம் புழங்குகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், நகைக்கக்கூடிய தமிழாக்கங்களாக வாய்ப்பு உண்டு--ரவி 15:14, 7 பெப்ரவரி 2008 (UTC)

dating ~ courting = குலாவுதல்[1] குலவுச்சந்திப்பு என கொள்ளலாமா? இதைக்காட்டிலும் சற்றே அத்துமீறுதலை சருவுதல் என்கின்றனர்.[2] ;) -- சுந்தர் \பேச்சு 16:26, 7 பெப்ரவரி 2008 (UTC)

date (noun refering the girl, boy and the practice), date (verb), dating - இது மூணுக்கும் பொருந்தும் சொல் வேணுமே? dating என்கிற சொல்லை மறந்து தமிழ்ச் சூழலில் மட்டும் பார்த்தா குலாவுறது நல்லாத் தான் இருக்கு ;) --ரவி 18:01, 7 பெப்ரவரி 2008 (UTC)

டேட்டிங் என்றொரு கட்டுரை உள்ளது. இக்கட்டுரையின் உள்ளடங்களை அதில் சேர்த்து விட்டு வழிமாற்றி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:11, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், நீங்கள் சுட்டிய டேட்டிங் என்ற கட்டுரையைப் பார்த்தேன். அக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தை அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்து இடப்பட்டுள்ளது. அத்துடன் தலைப்பு குறித்து பொருளும் குறிக்கப்படவில்லை. பேச்சுப் பக்கத்திலும் ஆரோக்கியமான ஒன்றும் இல்லை.

அத்துடன் கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்களிலும் பிழையுள்ளது. எடுத்துக்காட்டாக:

  • //இரட்டை டேட்(Double date): இரு தம்பதியினர் டேட் செய்தல்.// இக்கூற்றின் படி "தம்பதியர்" எனும் சொல் ஏற்கெனவே இல்லற வாழ்வில் இணைந்த இருவரைக் குறிக்கும். தனது எதிர்காலத் துணையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிகழும் அல்லது பார்க்கும் "பொருத்தம் பார்த்தல்' இன் போது எவ்வாறு இச்சொல்லை பயன்படுத்தலாம்?

அத்துடன் ஆங்கிலத்தில் "டேட்" என குறிக்கப்பட்டுள்ளதற்கான பொருள் சரியாக விளக்கப்பட வில்லை. வெறுமனே "டேட்" என்று ஒலிப்பெயர்ப்பு செய்துவிடுவதால் அதன் பொருள் எந்த வகையிலும் எவருக்கும் கிட்ட வாய்ப்பில்லை. இதுப்போன்ற காரணங்களால் இக்கட்டுரையை அக்கட்டுரையுடன் இணைப்பது பொருத்தமற்றதாகவே உள்ளது.

இக்கட்டுரையில் இன்னும் சான்றுகள் வெளியிணைப்புகள் சகிதம் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. ஏனைய பயனரின் கருத்துக்கமைய முடிவெடுக்கலாம் --HK Arun 07:35, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அருண், இணைப்பு எனில் அக்கட்டுரையில் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை. ஏதேனும் தேறியதென்றால் அதை மட்டும் எடுத்துக் கொண்டு பிறவற்றை நீக்கி விடலாம். ஒரே பொருளைப் பற்றி இரு கட்டுரைகள் இருக்க வேண்டாம் என்பது தான் இணைப்பதன் நோக்கம். அதனை அப்படியே நீக்கி விட முடியாது, இரண்டன் வரலாற்றுப் பக்கங்களையும் இணைக்க வேண்டும் (பதிப்புரிமக் காரணங்களுக்காக). அதிலிருந்து ஏதேனும் தேறுமா என்று பாருங்கள். இணைத்த பின்னர் தலைப்பையும் இக்கட்டுரையின் தலைப்பிற்கே மாற்றி விடலாம்.
மேலும் date என்பதை நீங்கள் திருமண / உறவு ஏற்படலுக்கு முந்தைய ஒரு செயலாகவே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். dating என்பது ”பொருத்தம் பார்த்தல்” மட்டுமல்ல. அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, பொருந்திய தம்பதியர் பின் சேர்ந்து வெளி செல்வதும் dating தான். (கணவனும் மனைவியும் சேர்ந்து செல்வதும் டேட்டிங் தான்). double date என்பதில் திருமணமான இரு தம்பதியர் சேர்ந்து செல்வதையும் குறிக்கும். இக்காரணங்களால் தான் இரு கட்டுரைகளையும் இணைக்கப் பரிந்துரைத்துள்ளேன். Dating is not just a mating ritual/process, it is the act of two or more people going out, which is generally (but not always) associated with mating. Married couples going out together is also known as "couples dating". In a double date, it is not unusual to find one or both the couples to be already married (or in a relationship). This article as it currently stands, restricts itself to the "mating" part of the dating and the older article too is limited as it does not talk about the legal/cultural issues. A n article about "Dating" has to include everything and thus the suggestion for merger. நீங்கள் இந்த கட்டுரையை முடித்த பின்னர் நானே இரண்டிலிருந்து தகுந்தவற்றை எடுத்து இதே தலைப்பில் (தமிழ்த் தலைப்பே சிறந்தது) இணைத்து விடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 07:49, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சரி அவ்வாறே செய்துவிடுங்கள் --HK Arun 08:19, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தலைப்புப் பொருத்தம் இல்லை[தொகு]

  • dating என்பதற்கு பொருத்தம் பார்த்தல் என்ற சரியாகப் படவில்லை. நிச்சக்கப்பட்ட திருமணங்களின் பொருளையே இங்கு சுட்டி நிற்கிறது. டேட்டிங் செய்து திருமணம் செய்யாமல் இணைந்தோ இணையாமலோ வாழலாம். dating என்பது ஒரு வினைச்சொல், date என்பது பெயர்ச்சொல். இரண்டாகவும் பொருள் தரும் படி ஒரு சொல் தேவை.
  • களவு என்ற பொருள் தர வேண்டும். ஆனால் அந்தச் சொல் இங்கு பொருந்தாது.

--Natkeeran 02:48, 22 ஏப்ரல் 2011 (UTC)

தமிழர் பண்பாட்டில் பொருத்தம் பார்த்தல்[தொகு]

தமிழர் பண்பாட்டில் ஒரு ஆண் ஒரு பெண் துணையையோ அல்லது ஒரு பெண் ஆண் துணையையோ தாமாகவே தேடிக்கொள்வதை பெரும்பாலும் தமிழர் சமுதாயக் கட்டமைப்புகள் அனுமதிப்பதில்லை. அத்துடன் தமிழர் பண்பாட்டை பொருத்தமட்டில் தனகேற்ற துணையை தானே தேடிக்கொள்ளல் என்பதும், தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை எப்படியானவராக இருக்க வேண்டும் என தனக்கு தானே நேரடி நேர்முகத் தேர்வைப் போன்று பொருத்தம் பார்த்தல் என்பதும் ஏற்புடைய விடயங்களும் அல்ல. அதேவேளை இணைந்து வாழப்போகும் இரண்டு பேருக்குமான பொருத்தத்தை பெற்றோர் அல்லது மூன்றாமவர் ஊடாகவே முடிவெடுக்கப்படுகின்றன. அவ்வாறான பொருத்தம் பார்த்தல் என்பது குணயியல்பு பொருத்தம், விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையிலான பொருத்தம் என்று அல்லாமால், சாதகக் குறிப்புகள் ஊடாகவே "பொருத்தம் பார்த்தல்" நடைப்பெருகின்றன. சாதகத்தின் பொருத்தம் சரியில்லை என்றால், வேறு சாதகம் தேடத்தொடங்கிவிடுவர். பொருத்தமான சாதகம் கிடைக்கும் வரை இந்த தேடல் தொடரும். இதே மாதிரியான ஒரு செயல்பாடு இந்த மேற்கத்திய பொருத்தம் பார்த்தல் முறையிலும் உள்ளது.

இந்தப் பொதுப்படுத்தல் சரியாக வராது. சாதகம் பார்ப்பது என்பது சில தமிழ் இந்துக்கள் கடைப்பிடிப்பது. புகலிடத்திலும், நகரங்களிலும் டேட்டிங் வழமையே பெருகி வருகிறதெனலாம். --Natkeeran 02:57, 22 ஏப்ரல் 2011 (UTC)

பண்பாடு, பழக்கவழக்கம் என்பன நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப அல்லது குறிப்பிட்ட சமுதாயப் பின்னனிக்கு ஏற்ப ஏற்பட்டபவைதான். அதேபோன்றே வாழும் இடம், சூழல் மாறும் போதும் இவைகளும் மாறிவிடுகின்றன. தற்போதைய புகலிட பழக்க வழக்கங்களின் மாற்றமும் அவ்வாறான மாற்றங்களையே கொண்டுள்ளன. (வேறுபாடு சிலர் உடனடியாகவும், சில கொஞ்சம் கொஞ்சமாகவும் மாறுகின்றனர், ஆனால் மாற்றம் கட்டாயம் நிகழ்கிறது.) இந்த காணொளியை பார்க்கவும்: Part 2 --HK Arun 03:56, 22 ஏப்ரல் 2011 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=courting&display=utf8&table=fabricius
  2. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=courtship&display=utf8&table=winslow
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டேட்டிங்&oldid=815657" இலிருந்து மீள்விக்கப்பட்டது