பேச்சு:நிலக்கரி அமைச்சகம், இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில விக்கியில் பயன்படுத்தும் வழக்கத்தின் படியே நிலக்கரி அமைச்சகம் (இந்தியா) என்ற பெயரை மீண்டும் பக்கமுகவரியாக்க நினைக்கிறேன். நிலக்கரி அமைச்சகம், இந்தியா என்பது ஒரு இடத்திற்கு பொருந்தும். அமைச்சகங்கள் முகவரி எல்லாம் சீராக இருக்கலாம் என நினைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 06:18, 19 மே 2012 (UTC)[பதிலளி]

ஆமாம், ஒரு சீராக இருப்பது நல்லது. மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 07:24, 19 மே 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கி பெயரிடல் மரபைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஒரு தலைப்பைப் பற்றிய தெளிவுபடுத்தலை மட்டும் அடைப்புக்குறிக்குள் தரலாம் என்றே புரிந்து வைத்துள்ளேன். எடுத்துக்காட்டுக்கு, சூரியன் (திரைப்படம்), விடிவெள்ளி (நூல்) என்பது போல். ஆனால், அமைச்சக வலைத்தளத்திலேயே இந்திய அரசு, நிலக்கரி அமைச்சகம் என்று தந்துள்ளது. இதுவே முழுமையான பெயர் என்று கருதுகிறேன். எனவே, நிலக்கரி அமைச்சகம், இந்தியா என்று சொல்வதில் தவறில்லையே?--இரவி (பேச்சு) 07:42, 19 மே 2012 (UTC)[பதிலளி]