பேச்சு:கேணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். கேணி என்பது வேறு, கிணறு என்பது வேறு. கேணி என்பது அன்றாட வாழ்வில் நீரை பெற்றுக்கொள்வதற்காக விவசாய நிலங்களில், கோவில்களில் அகலமாக தோண்டப்படும் ஒரு கிடங்கு, பள்ளம், அல்லது துரவு, என்று அழைக்கப்படுவது கேணி ஆகும்.

ஆமாம் சிவம், இரண்டும் வெவ்வேறு.--Kanags \உரையாடுக 11:13, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் உள்ளவற்றையும் கிணறு என்றுதான் அழைக்கிறோம். இரண்டுக்குமான துல்லிய வேறுபாட்டைத் தெளிவுபடுத்த முடியுமா?--Booradleyp (பேச்சு) 15:22, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
Small pond
+1 படத்தில் உள்ளது ஊற்று, சிறு குட்டை என்பது போல தமிழகத்தில் அழைக்கபடுகிறது (இது போலவே இக்கட்டுரையில் உள்ள படமும் உள்ளது). மேலும் இதுவரை நான் கேணி என்பதும் கிணறு என்பதும் ஒன்று என்றே நினைத்து வந்தேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:43, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். கேணியின் துள்ளியமான பதில்கள். கேணி என்பது ஒரு மக்கள் தேவைக்கு ஏற்ப நீர் உள்ள கிடங்கு, பள்ளம், துரவு, குழி என்பதாகும், அதேவேளை இப்படி பட்ட கேணிகள் செய்வதுக்கு பொருளாதார வசத்திகள் தேவை இல்லை. ஆனால் இதில் பெறப்படும் நீரை இலங்கையில் யாரும் குடிநீராக பாவிப்பது இல்லை. காரணம் இந்த பரந்த நிலப்பரப்பில் தொண்டபட்டதனால் , இங்குள்ள நீர் சுத்தமாக இருக்காது. என்பதே பொதுக் காரணமாக உள்ளது.--Sivam29 (பேச்சு) 16:11, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி. உங்களது விளக்கத்திலிருந்து முறையான கட்டுமானம் கொண்டது கிணறு, தேவைக்கேற்ப ஆங்காகேங்கே தோண்டிக் கொள்ளப்படும் நீர்ப்பள்ளம் கேணி எனப் புரிகிறது. எனினும் தமிழ்நாட்டு வழக்கில் இத்தகைய நீர்ப்பள்ளங்களைச் சிறு குட்டை எனப்படுகிறது என நினைக்கிறேன். கேணி என்பது நீங்கள் குறிப்பிடும் பொருளில் தமிழ்நாட்டிலும் வழங்கப்படுகிறதா என்பது எனக்கு உறுதியாகக் தெரியவில்லை. பிற தமிழ்நாட்டுப் பயனர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:45, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
கேணி என்ற சொல் பொதுவாக ஆலயங்களில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளையே குறிப்பிடுவர். அது கிணறு அல்ல என்பது நிச்சயம். குளம் அல்லது குட்டை என்று கூறலாமா? விக்சனரி பார்க்க.--Kanags \உரையாடுக 21:21, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சரவணப் பொய்கை என அழைக்கப்படுகிறது. பொதுவாக கோவில்களில் உள்ளவை கோவில் குளங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. விக்சனரியில் கேணி என்பதற்குக் கிணறு என்றும் பொருள் தரப்பட்டுள்ளது.--Booradleyp (பேச்சு) 23:34, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கேணி என்பது கிணறுதான். விவசாய நிலத்தில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் பயன்பாடு வேறுபடலாமாயினும் இரு பெயர்களும் சமமே.--பாஹிம் (பேச்சு) 23:58, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கேணி என்பது கிணறு என்பதைப் பலர் தப்பாகக் கருதுகின்றனர் என்று விக்சனரியில் ஆதாரத்துடன் தரப்பட்டிருக்கிறது கவனிக்கவில்லை போலும். ஈழத்தில் எவரும் கிணற்றைக் கேணி எனக் கூறுவதில்லை. கோவில்கள், மற்றும் வேளாண்மை நிலங்களில் உள்ள குளங்களே கேணி எனப்படுகிறது. எனவே இக்கட்டுரையை மேற்குறிப்பிட்ட தளத்தில் உள்ள ஆதாரங்களோடு விரிவு படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:30, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
திருவல்லிக்கேணி என்ற வழக்குப்பெயரையும் கவனிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே நீரைத் தேக்கி வைக்கப் பயன்படும் பள்ளங்களைக் கிடங்கு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மதுரை மாவட்டத்தில் வெகு அரிதாகக் கேணி எனக் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரும்பாலும் கிணறு, குளம், ஊருணி, கண்மாய் போன்ற சொற்கள்தான் அங்கு வழக்கில் உள்ளது. இதைப் பற்றி எனக்கு உறுதியான கருத்து எதுவும் இல்லை, தகவலுக்காகக் குறிப்பிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:38, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
கனக்ஸ்! நீங்கள் தந்திருக்கும் இணைப்பில் எதையும் பார்க்க முடியவில்லையே? எனது புரிதலும் கிணறு என்பது முறையான கட்டுமானம் கொண்ட நீர்நிலை. கோவில்கள், மற்றும் வேளாண்மை நிலங்களில் உள்ள சிறிய குளங்களே கேணி. அதுவே ஓரளவு பெரியதாகவும், கட்டுமானத்துடனோ, அல்லாமலோ இருக்கும்போது அது குளம்.--கலை (பேச்சு) 10:23, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தென்றல் இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து கட்டுரையை முழுமையாகப் படிக்கலாம்.--Kanags \உரையாடுக 10:26, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊர்களில் வேளாண் நிலத்தில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுகளையும் கேணி என்றே அழைக்கிறோம். இவை முறையாக கட்டப்பட்டவை. சொல்லப்போனால், பெரும்பாலும் கேணி என்றே அழைக்கிறோம். வீட்டுப் பயன்பாட்டுக்கு நீர் இறைப்பவற்றை மட்டும் கிணறு என்கிறோம். தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற குறளை நோக்கினால், கேணி என்பது தோண்டத் தோண்ட ஊறும் ஊற்று போன்றது என்று பொருள் வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட கிணறைக் குறிப்பதாகத் தெரியவில்லை. --இரவி (பேச்சு) 08:41, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேணி&oldid=2595456" இலிருந்து மீள்விக்கப்பட்டது