பேச்சு:கோட்பிரீட் லைப்னிட்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரியின் தலைப்பு கோட்விரீட் லைப்னிட்ஸ் என்று இருத்தல் வேண்டும். அவருடைய செருமானியப் பெயர் Gottfried Leibniz என்பதாகும். (1) நடுவில் உள்ள வில்ஹெல்ம் என்னும் பெயர் தலைப்பில் தேவை இல்லை, (2) செருமன் மொழி ஒலிப்புப் படி முதல் பெயர் கோட்விரீட் (Goat-freet என்பதுபோல ஒலிக்க வேண்டும்), (3) குடும்பப் பெயர் அல்லது கடைசிப் பெயர், லை'ப்னிட்ஸ் என்று ஒலிக்க வேண்டும். செர்மனில் Lei என்றுவந்தால் லை என்றும், Lie என்று வந்தால் லீ என்றும் ஒலிக்க வேண்டும். (4) ஆங்கிலம் போல அல்லாமல், செர்மன் மொழியில் ஒலிப்பொழுக்கம் உண்டு. (5) கடைசி எழுத்தாகிய z ஐ ts என்பது போல ஒலிக்க வேண்டும். தலைப்பை கோட்விரீட் லைப்னிட்ஸ் அல்லது கோட்பிரீட் லைப்னிட்ஸ் என்று மாற்றலாமா?--செல்வா 16:22, 17 ஜூலை 2007 (UTC)

எனக்கு செருமானிய ஒலிப்பு முறைகளில் பழக்கம் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மாற்றிவிடலாம். Mayooranathan 20:10, 17 ஜூலை 2007 (UTC)
நன்றி மயூரநாதன்.--செல்வா 22:03, 17 ஜூலை 2007 (UTC)
  • 10 ஆண்டுகள் கழித்து வந்து பார்க்கின்றேன். இக்கட்டுரை இன்னும் விரிவாக வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. இவரின் பெயரை இலைபுநிட்சு (அல்லது இலைபுனிட்சு) என எழுதுவது பொருத்தமுடையதாக இருக்கும். சிலர் இலீபுநிட்சு (இலீபுனிட்சு) என்றும் சொல்வார்கள். மேலே நான் உரைத்த கருத்திலிருந்து இக்கருத்து சற்றே மாறுபட்டது. தமிழெழுத்துகளில் மட்டும் அமைந்த எளிமையான பெயர்வடிவம் நீண்டு நிலைக்கும். ஸ்எனச்சொல்லி நிறுத்த முடியாது. எனவே கட்டுரையின் தலைப்பையும் மாற்றலாம்.--செல்வா (பேச்சு) 21:46, 24 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]