பேச்சு:தோடம்பழம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோடம்பழம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நரந்தம்பழமும் தோடம்பழமும் ஒன்றா? எந்த சொல் வழக்கில் இருக்கிறது. --Natkeeran 22:06, 21 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நாரத்தம் பழம் என்ற பெயரில் பழம் உள்ளது. இலங்கையில் தோடம்பழம் என்று குறிக்கப்படுவது பச்சை நிறமாக இருக்கும். நரந்தம்பழம் என்பது குறித்துக் கேள்விப்படவில்லை.--Kanags \பேச்சு 00:17, 22 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இரண்டும் வெவ்வேறு பழவகைகள். இனக்குழுமம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தோடம்பழத்தில் பலவகைகள் இருப்பது போலவே நாரந்தம் பழத்தில் பலவகைகள் உள்ளன,--HK Arun 09:28, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கமலா ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழம் என்பதற்கு [பெரும்பாலும் பிரிக்கும் போது 6,5 சுளைகள் இருப்பதால் இப்பெயரென்பர்]ஆங்.விக்கிப்பீடியாவிலிருந்து இங்கு வர இணைப்புள்ளது. இவை இரண்டும் ஒன்றா? இன்னரந்தம் என்றும் ஆரஞ்சு பழத்தை அழைப்பரா?தமிழகத்தில் கமலாஆரஞ்சு என்று உண்டு. அதன் உயிரியல் பெயர் அறிய ஆவல்.--த* உழவன் 07:07, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நாரத்தம்பழம் என்பது Grapefruit என்றே நினைக்கிறேன். ஜேர்மனியில் இதன்(Grapefruit) நிறம் மஞ்சள். தோடம்பழத்தை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். உள்ளே செந்நிறமாக, Rose நிறமாக, வெளிர்மஞ்சள் நிறமாக என்று அதன் வகைக்கேற்ப இருக்கும். பழம் தோடம்பழச் சுளைகள் போலவே இருக்கும். புளிப்புச்சுவை கொண்டது. மெல்லிய கசப்புச் சுவையும் சாப்பிட்ட பின் வாயில் இருக்கும். இதன் அதீத புளிப்புக் காரணமாக இதைத் தோடம்பழம் சாப்பிடுவது போல யாரும் சாப்பிடுவதில்லை. இதன் சாறைப் பிழிந்தெடுத்தோ அன்றிக் கரண்டியால் அழுத்தி எடுத்தோ பருகுவார்கள். கலியம் அதிகமாகக் கொண்ட பழங்களில் இது ஒன்று என்று கருதப்படுவதால் ஜேர்மனியர் இதை விரும்பி உண்கிறார்கள். இலங்கையில் இதன் நிறம் வெண்பச்சையாக இருந்த ஞாபகம். தோடம்பழத்தை விட இரட்டிப்பு பெரிதாக இருக்கும். --Chandravathanaa 14:40, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]


இது ஆரஞ்சுப்பழத்துக்கான தமிழ் சொல்லா, அல்லது சந்திரவதனா சுட்டியபடி Grapefruit ?? --Natkeeran 03:10, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நாரத்தை வேறு grapefruit வேறு. இரண்டும் ஒன்றல்ல. நாரத்தைக்கான சொல்லை மறந்து விட்டேன். அது இந்தோனேசியாவின் பாலித் தீவிலும் கிடைக்கிறது. அதற்கான சரியான ஆங்கிலச் சொல்லைத் தேடிப் பார்க்க வேண்டும்.--பாஹிம் 03:19, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முக்கியமான பழம். பயனர்கள் தங்கள் கருத்தை இறுதி செய்தால் தலைப்பை மாற்றலாம். --இரவி (பேச்சு) 11:22, 2 ஏப்ரல் 2012 (UTC)


நாரத்தை: தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற பயன்பாடுள்ளது. ஆனால் அது ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்காது. இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அல்ல அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.

ஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.

சாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.

கமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.

சில இணைப்புகள்

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:40, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்த இணைப்பைப் பாருங்கள். சாத்துக்குடி பற்றி இங்கு சில தகவல் கூறப்பட்டுள்ளது. சாத்து என்பது வணிகர்களை குறிப்பதாகவும், சாத்துக்குடி என்பது வணிகர்களின் குடியிருப்பை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. சாத்துக்குடி என்ற சொல் வணிகர்கள் கொண்டு வந்த பழவகையாகக்கூட இருக்கலாம். சாத்துக்குடி நாரத்தம் பழம் என்பதை சுருக்கி வழக்கில் சாத்துக்குடி என மாறியதோ என்னவோ தெரியவில்லை! --இராஜ்குமார் (பேச்சு) 08:11, 14 மே 2013 (UTC)[பதிலளி]
ஆங்கில அகராதியில் பார்த்தீர்கள் என்றால் ஆரஞ்சு என்ற சொல் நாரத்தம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது என கூறப்படுகிறது. கீழே உள்ள சொற்பிறப்பியல் பகுதியை பாருங்கள். இவ்வகையான அனைத்து பழவகைக்கும் நாரத்தம் என்பதே அடிப்படையான சொல்லா என தோன்றுகிறது.

செம்மஞ்சள் நாரத்தம்பழம் / தோடம்பழம் = Orange
நாரத்தங்காய் = May be grapefruit or someother thing
சாத்துக்குடி நாரத்தம்பழம் = sour orange or Bitter orange
கமலா நாரத்தம்பழம் / குடை நாரத்தம்பழம் = Kamala Orange

இது போன்று பெயரிடலாமா ? --இராஜ்குமார் (பேச்சு) 08:21, 14 மே 2013 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம்[தொகு]

நாரத்தை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் தோடம்பழம் என்பது ஆரஞ்சுப்பழம் (Orange) இன் தமிழ்ச்சொல். ஆரஞ்சுப்பழம் என்பது தமிழ்ச் சொல்லல்ல என்றே நினைக்கின்றேன். ஆனால் இந்தக் கட்டுரை குறிப்பது தோடம்பழத்தை (Orange) அல்ல என்பதனாலும், பலரும் நாரத்தையும் தோடம்பழமும் ஒன்றல்ல எனக் கூறியிருப்பதனாலும், இதன் பெயரை மாற்றுவதே சரியென நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 06:51, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மற்றக் கட்டுரையின் உள்ளடக்கம்[தொகு]

தோடை மரம் ஆனது, எலுமிச்சை மரத்தை போன்றதுதான் , ஆனால் இதன் முள்கள்,இலைகள் சற்று பெரிதாகவே காணப்படும். இதன் தோடம்பழம் நல்ல சுவையாக இருக்கும் அதே வேளை கோவில் பூசைகளிலும் இந்த பழத்தை அதிகம் பயன் படுத்துவார்கள். தோடை மரம் பல நிறங்களில் பழம் இருந்தாலும் யாழ்ப்பாணத்து தோடை மரங்களின் பழங்கள் பச்சை நிறத்தை உடையன.

நாரந்தை எனப்படுவது தோடை இனத்தை சேர்ந்ததுதான், ஆனால் இந்த மரத்தில் தோடை மரத்தை விட அதிகமான முள்கள் உள்ளன, அதே வேளை நாரந்தை பழங்கள் தோடம் பழத்தை விட சற்று சிறியனவாக இருக்கும்,செம்மஞ்சள், பச்சை நிறத்தை கொண்டது, இதன் சுவை புளிப்புத்தன்மை அதிகமாக இருக்கும், இந்த நாரந்தம் பழத்தை யாரும் பழமாக சாப்பிடுவது இல்லை. இப் பழம் கோடை காலத்தில் மட்டும் தான் கிடைக்கும் அதனால் மக்கள் கோடை காலத்து வெக்கை காலம் என்பதால் இதை புளிந்து சாறை மட்டும் எடுத்து சர்க்கரை அல்லது சீனி போட்டு குடிப்பார்கள். இதற்க்கு தமிழ் நாட்டில் வேறு ஒரு பெயரும் உண்டு சென்னை வீதிகளில் இந்த பழத்தை புளிந்து சாறாக விற்பதை காணலாம். இதற்க்கு தமிழ் நாட்டில் சாத்துக்குடி என பெயர் இருக்கலாம் என்று நினைக்கின்றேன். இம் மரமானது எலுமிச்சை, தோடை மரங்களை விட சற்று பெரியது என்றே சொல்லலாம். அத்தோடு நாரந்தை ஆனது அதிகளவான காய் கைக்க கூடியது மரம் ஒன்றாகும்.--Sivam29 (பேச்சு) 15:33, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சொற்பிறப்பியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "J. P. Fabricius Tamil and English Dictionary". Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972 via Univ. of Chicago's Digital Dictionaries of South Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-21.
  2. Harper, Douglas. "orange". Online Etymology Dictionary.

பார்க்க : List of English words of Tamil origin --இராஜ்குமார் (பேச்சு) 11:43, 13 மே 2013 (UTC)[பதிலளி]

வழிமாற்று[தொகு]

ஆரஞ்சுப் பழம் என்பதே பெருவழக்கு
ஆரஞ்சுப் பழம் என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைவதே சிறப்பு.
வழிமாற்றம் செய்யும்படி வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:56, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

உரையாடலைக் காணவில்லை[தொகு]

இந்தப் பக்கத்தில் நேற்று சில கருத்துக்கள் இட்டிருந்தேன். அதற்கு Anton பதிலும் கொடுத்திருந்தார். ஆனால் அவற்றை இப்போ காணவில்லையே? :( --கலை (பேச்சு) 21:29, 13 மே 2013 (UTC)[பதிலளி]

உரையாடலைக் கண்டு பிடித்துவிட்டேன். அது பேச்சு:ஆரஞ்சுப் பழம் என்ற பக்கத்தில் இருந்தது. அந்த உரையாடலையும் இங்கே இணைத்து விட்டு அந்தப் பக்கத்தை நீக்கியுள்ளேன்.--கலை (பேச்சு) 21:57, 13 மே 2013 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளும் இனம் பற்றியா பேரினம் பற்றியா பேரினம் பற்றியா என்று குழப்பமாக உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 05:03, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

குழப்பம்[தொகு]

எந்த இரு கட்டுரைகள்பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள்?

எனக்கும் இதில் பல குழப்பங்கள் உண்டு.

  1. ஆரஞ்சுப்பழம் என்பது கட்டுரையின் தலைப்பு. ஆனால், "ஆரஞ்சு சிடரஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம். என்று கட்டுரை ஆரம்பிக்கின்றது. அப்படியானால், இது Orange க்குரிய கட்டுரையா? அதாவது Citrus ​sinensis எனப்படும் இனத்திற்கு உரியதாயின், கட்டுரையின் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். காரணம் அங்கே வெவ்வேறு இனங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Orange என்னும்போது அது ஒரு நிறத்தையும் குறிப்பதால், கட்டுரை Orange (fruit) என்றே இருக்கின்றது. தமிழில் நமக்கு அந்தக் குழப்பம் இல்லை. Orange colour ஐ செம்மஞ்சள் நிறம் என்கின்றோம். அதேவேளை, ஏற்கனவே இதற்கு, அதாவது Orange (fruit) க்கு, தோடம்பழம், என்று ஒரு கட்டுரை ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அது தோடை என்ற கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரை Orange (fruit) ஐக் குறிப்பதாயின், இந்தக் கட்டுரையை, தகுந்த மாற்றங்களுடன், தோடை என்ற கட்டுரையுடன் இணைக்கலாம்.
  2. அல்லது இது Citrus எனப்படும் பேரினத்திற்க்கான கட்டுரையா? அப்படியானால் இது Citrus கட்டுரைக்கானதாகக் கொள்ளலாமா? அவ்வாறாயின், கட்டுரையின் தலைப்பு மாற்றப்பட வேண்டும். தமிழ் விக்சனரியில் Citrus க்கு ஆரஞ்சுவகை; கிச்சிலி; நாரத்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தப் பெயர் மிகப் பொருத்தமானது எனப் பார்த்து, தலைப்பு மாற்றப்பட்டு, Citrus கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம்.
  3. மரங்கள் பட்டியல் பக்கத்தில் நாரத்தை Citrus aurantium என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும், அது Bitter Orange என்பதையும், தமிழில் அந்தக் கட்டுரை நரந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டுகின்றேன். ஆனால் தமிழ் விக்சனரியில் Bitter Orange க்கு சரியான தமிழ் தரப்படவில்லை. எனவே நாரத்தை அல்லது நரந்தம் என்பது Bitter Orange எனலாம். அதேவேளை நரந்தம்பழம் கட்டுரை நரந்தம் என்பதற்கு வழிமாற்றம் செய்யப்படாமல், தோடைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஏன் என்று புரியவில்லை.
  4. இந்தக் கட்டுரையின் முதல் வரி தவிர ஏனையவை பழம்பற்றியே குறிப்பிடுகின்றது. இது Citrus Fruit க்கான கட்டுரையாயின், அதனை Citrus க்கான தலைப்பையே தெரிவு செய்து, அதிலேயே பழங்களைப்பற்றியும் குறிப்பிடலாம். ஆங்கில விக்கியிலும் Citrus fruit கட்டுரை Citrus கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  5. Orange என்பதற்கு தோடை சரியான தலைப்பே என நினைக்கின்றேன். ஆனால் Citrus க்கு என்ன தலைப்பைக் கொடுக்கலாம் என அறிய விரும்புகின்றேன்.

கருத்துக்களைத் தந்தால், தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். --கலை (பேச்சு) 11:38, 12 மே 2013 (UTC)[பதிலளி]

இங்கிருந்து தோடைக்கு வழிமாற்றுக் கொடுக்கலாம். Citrus Citrus பேரினம் என்பதால் தனிக் கட்டுரை ஆரம்பிக்கலாம். அதன் தலைப்பு தோடை (பேரினம்) அல்லது கிச்சிலி என இருக்கலாமா? --Anton (பேச்சு) 11:52, 12 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோடம்பழம்&oldid=1894303" இலிருந்து மீள்விக்கப்பட்டது