பேச்சு:பேசாத அன்னம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

பேசாத அன்னம் என்பது மாந்தநோக்கில் உள்ளது. கூவாத, அகவாத போன்ற சொற்களில் பொருத்தமானதை ஆளலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:33, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆட்சேபனையில்லை. பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டதால் அதற்கேற்ப மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 07:47, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஊமை என்ற சொல் மாந்தர்களுக்குத் தற்போது தவிர்க்கப்படுகிறது..பிற உயிரினங்களுக்குமா ?--மணியன் (பேச்சு) 07:49, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நல்ல கேள்வி. எனக்கென்னவோ அவ்வாறு விலங்குகளுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லையோ எனத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 07:58, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
அன்னம் என்றே இத்தரவில்[1] குறிப்பிடப்பட்டுள்ளது; Whooper swan, Black swan போன்ற பிற அன்னங்களுக்கு பெயரடைகளை இடலாம். கூடுதல் தகவல்: குறைந்தது ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு இப்பறவை 2022 சனவரியில் தான் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 16:49, 12 சனவரி 2022 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 220:1 (பின்சேர்க்கை). பி. என். எச். எஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேசாத_அன்னம்&oldid=3371038" இலிருந்து மீள்விக்கப்பட்டது