தமிழ் வளர்த்த மேலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயன்மொழி பேசும் மேலைநாடுகளிலிலுந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ப்பயிர் செழிக்க நீர்ப்பாய்ச்சியும், உரமிட்டும் தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

  • ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) - தமிழ் இலக்கண நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதினார்.
  • ஆண்ட்ரனோவ் (ரஷ்யர்) - உலக வரலாற்று நூலில் தமிழைச் சிறப்பித்தவர்.
  • ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
  • ஆஸ்சிங்கடந்(து) (அமெரிக்கா) - கந்தபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சைவ நெறியை மேலைநாடுகளில் வளர்த்தவர்.
  • இராட்லர் - தமிழ்-ஆங்கிலம் அகராதி வெளியிட்டவர்
  • இராபர்ட் தே நோபிலி (இத்தாலி) - தமிழ் பேச்சுமொழி இலக்கணம் இலக்கணம் தந்தவர். பல உரைநடை நூல்களைத் தொகுத்தவர்ய
  • எல்லிஸ் துரை - திருக்குறள் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தங்கக் காசில் வள்ளுவர் உருவத்தைப் பொறித்தவர்.
  • என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்) - புன்னைக்காயல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கண நூல் தொகுத்தவர். தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய முதன்முதலில் குரல் கொடுத்தவர்.
  • கவார்ட்ஸ் - தஞ்சை சரபோஜி மன்னர் உதவியுடன் தஞ்சையிலும், திருச்சியிலும் தமிழ் வளர்த்தவர்.
  • கிரண்ட்லர் - தமிழ் மருந்துகள் என்னும் நூல் எழுதியவர்.
  • கிரீன் - தமிழின் செம்மொழித் தன்மையை மெய்ப்பித்தவர்.
  • கிளார்க் அடிகளார் - தீர்க்க தரிசன விளக்கம், போதகர் ஒழுக்கம் ஆகிய தமிழ்நூல்கள் எழுதியவர்.
  • சல்டசே - தரங்கம்பாடியில் தமிழ் வளர்த்தவர்.
  • சார்லஸ் கிராஸ் (ஜெர்மனி) - ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழை ஆங்கிலத்தில் பரப்பியவர்.
  • சீகன் பால்கு (ஜெர்மனி) - நீதிவெண்பா, கொன்றைவேந்தன் முதலான பல நூல்களை செருமானிய மொழியில் மொழிபெயர்த்துத் தந்தவர். விவிலியத்தைத் தமிழாக்கம் செய்தவர். தமிழ்-இலத்தீன் அகராதி உருவாக்கியவர். தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவித் தமிழ் நூல்களைக் குறைந்த செலவில் பதிப்பித்துத் தந்தவர்.
  • பிரெஸ்த்தாப்டு - தமிழ்-ஆங்கிலம் அகராதி உருவாக்கத்தில் உதவியவர்.
  • பிலிப்பால்டு - முத்தமிழ் இலக்கண நூலை முதலில் வடிவமைத்தவர்.
  • மிரான் வின்கலோ (அமெரிக்கா) - கிரேக்கம், இலத்தீன், போன்ற பழமையான மொழிகளை விடத் தமிழே 'செம்மொழி' எனப் 19ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டியவர். தமிழ் வழக்குச்சொல் அகராதி வெளிக்கொணர்ந்தவர்.
  • லெவிஸ்பால்ட்டிங் - தமிழில் இசைப்பாடல்கள் இயற்றியவர். மறைநூல்கள் எழுதியவர்.
  • வீரமாமுனிவர் - இன்று நாம் பயன்படுத்தும் எ, ஏ, ஒ, ஓ, ர, எழுத்துக்களை வேறுபடுத்தி எழுதிக் காட்டியவர்.
  • ஜோகன் பிலிப் பேப்ரீசியஸ் (ஜெர்மனி) - விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். தமிழ்-ஆங்கிலம் அகராதி உருவாக்கியவர்.
  • ஹென்றிபவர் - (ரஷ்யர்) - சிந்தாமணி நூலை அச்சிட்டார். விவிலியத்தைத் தமிழ்ப்படுத்தினார்.

கருவிநூல்[தொகு]

  • ஊற்று என்னும் இதழில், பெங்களூர், இராமச்சந்திரபுரம், எஸ்.ஆர்.பழனி தொகுத்தளித்த செய்தியாக 'நித்திலக்குவியல்' எண் 51, முத்து எண் 8, ஆகஸ்ட்டு 2012 இதழில் வெளிவந்த செய்தி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வளர்த்த_மேலையர்&oldid=3794857" இலிருந்து மீள்விக்கப்பட்டது