பயனர் பேச்சு:Aswn/தொகுப்பு01

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வாருங்கள், Aswn/தொகுப்பு01! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Aswn/தொகுப்பு01, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Aswn/தொகுப்பு01, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:23, 22 ஏப்ரல் 2011 (UTC)

வருக[தொகு]

வணக்கம் Aswn,

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்கள் பங்களிப்புகளைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் பல கட்டுரைகளை உருவாக்கி வரும் தங்கள் பணி பாராட்டுக்குரியது. அவற்றில் பிற பயனர்கள் சில வகை மாற்றங்களை செய்து மேம்படுத்தி உள்ளார்கள். அம்மாற்றங்களை கவனித்து தங்களது எதிர்கால கட்டுரைகளில் பின்பற்ற வேண்டுகிறேன். அவற்றுள் சில:

  1. புள்ளிகளாக தகவலகளைத் தருவதற்கு பதில் உரையாக எழுதுங்கள் (புல்லட் பாய்ண்ட் போல் சுருக்கமாக போடுவதற்கு பதில், நீட்டி வாக்கியங்களாக எழுதுதல்)
  2. லைன் பிரேக் - <br /> குறைவாக பயன்படுத்துங்கள். தகவலகள் அடுத்தடுத்த வரிகள் வரவேண்டுமென்று இல்லை. தொடர்ச்சியாக வாக்கியங்களாகவே வரலாம்
  3. அலெக்சாண்டர் சவீனொவ் மற்றும் அலெக்சாண்டர் புஷ்னின் கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ள சிறு மாற்றங்களை கவனிக்க வேண்டுகிறேன்.

நடை குறித்தும் பிற விஷயங்கள் குறித்தும் சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:25, 23 ஏப்ரல் 2011 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்புப் பொறி[தொகு]

Aswn,

கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். அக்கருவி இன்னும் செம்மைப்படவில்லை, பொதுவில் பயன்படுத்தும் அளவுக்கு உகந்ததில்லை என்பது விக்கி சமூகத்தின் கருத்து. கூகுள் கருவி செம்மைப்பட இன்னும் பல நாள் ஆகும். இப்போதிருக்கும் பதிப்பு பீட்டா பதிப்பு கூட இல்லை. அதற்கும் முந்தையது. முன்பு அக்கருவி கொண்டு கூகுள் குழுவினர் கட்டுரைகள் மொழிபெயர்த்த திட்டம் தற்போது இக்காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டுரைகளும் வருங்காலத்தில் படிப்படியாக மாற்றப்பட்டு/நீக்கப்பட்டு விடும். இனி அதனைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகள் நீக்கப்படலாம். எனவே கூகுள் கருவியை இங்கு பயன்படுத்த வேண்டாம் என கெட்டுக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 03:15, 29 ஏப்ரல் 2011 (UTC)

அஸ்வின், நீங்கள் கூகுள் கருவி மூலம் சில கட்டுரைகளை மொழிபெயர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் தவறில்லை. ஆனாலும், மொழிபெயர்ப்புக் கருவி நூறு வீதம் ஒரு கட்டுரையை மொழிபெயர்க்காது. நீங்கள் மொழிபெயர்த்த கட்டுரையை மேலும் செப்பனிட வேண்டும். சில பகுதிகள் செவ்வனே மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன. உ+ம்: ஜெப்ப்ரே டூபின் கட்டுரையைப் பாருங்கள். இக்கட்டுரையில் மேலும் சில பகுதிகள் தகுந்த முறையில் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. ஆங்கில விக்கியில் இருந்து அனைத்தையும் மொழிபெயர்க்கக்கூடாது. எமது தமிழ் விக்கிக்கேற்ப செப்பனிட வேண்டும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இவ்வாறு செப்பனிடப்படாமல் தேங்கி நிற்கின்றன. ஆயிரத்தில் ஒன்றாக உங்கள் கட்டுரைகளையும் சேர்க்காதீர்கள். உங்கள் கட்டுரைகளைச் செப்பமிடும் பணியையும் நீங்களே செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.--Kanags \உரையாடுக 01:29, 1 மே 2011 (UTC)[பதிலளி]

பலே![தொகு]

அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில்உரையாடுக 03:29, 10 மே 2011 (UTC) [பதிலளி]

-நன்றி சோடாபாட்டில் --Aswn 12:18, 10 மே 2011 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

அஸ்வின், பகுப்பாக்கத்தில் ஈடுபடுவதற்கு என் பாராட்டுகள். இரண்டு டிப்ஸ் -

1) பொதுவாக பகுப்பு பெயர்களில் அடைப்புகளில் விளக்கம் தரத் தேவையில்லை. எ.கா ”இந்தியாவிலுள்ள மாநகரங்கள் (மாநிலங்கள்படி)‎;” என்பதில் “மாநிலங்களின்படி” என்று தனியே தெளிவுபடுத்தத் தேவையில்லை. இதன் மாநில வாரியான உட்பகுப்புகளே போதுமானவை.

2)Hotcat கருவியை பயன்படுத்தினால் எளிதாக பகுப்புகளை சேர்க்க இயலும். (என் விருப்பத் தேர்வுகள் > கருவிகள் என்ற பக்கத்தில் hotcat தெரிவு உள்ளது. அந்த பெட்டியைத் தேர்வு செய்து சேமித்தால், hotcat பயன்படுத்தலாம்). en:Wikipedia:HotCat என்ற பக்கத்தில் அறிமுகம் உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 03:58, 11 மே 2011 (UTC)[பதிலளி]

தங்களின் டிப்ஸ்களுக்கு நன்றி hotcatடினை இனி பயன்படுத்துகிறேன் --அஸ்வின் 14:00, 11 மே 2011 (UTC)[பதிலளி]
இன்னொரு விசயம் - மேல்நிலை பகுப்புகளை மீண்டும் சேர்க்கத் தேவையில்லை. எ.கா. “இந்திய தலைநகரங்கள்” என்னும் பகுப்பு “இந்திய ஊர்கள்” பகுப்பில் உள்ளது. இந்திய ஊர்கள் பகுப்பு “இந்திய புவியியலில்” உள்ளது; “இந்தியப் புவியியல்” ”இந்தியா”வில் உள்ளது என்றால். இந்திய தலைநகரங்கள் முன்னரே “இந்தியா” பகுப்பில் சேர்ந்துள்ளதாகக் கணக்கு. மீண்டும் இந்தியாவைச் சேர்த்தத் தேவையில்லை. இது ஒரு மர அமைப்பு (tree structure) போன்று
இந்தியா -> இந்தியப் புவியியல் -> இந்திய ஊர்களும் நகரங்களும் -> இந்தியத் தலைநகரங்கள்.
என்ற அமைப்பில் கீழே உள்ள மூன்றில் எப்பக்கத்தைச் சேர்த்தாலும் அது தானாக இந்தியாவின் கீழ் வந்து விடும்--சோடாபாட்டில்உரையாடுக 14:08, 11 மே 2011 (UTC)[பதிலளி]
சரி --அஸ்வின் 14:12, 11 மே 2011 (UTC)[பதிலளி]
தேவையில்லாத பகுப்புகள் அல்லது பக்கங்களை உருவாக்கிவிட்டால்; அல்லது உள்ள பக்கங்களை நீக்கிவிடலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் அவற்றில் {{delete}} என்ற வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நிருவாகிகள் பின் அவற்றை நீக்கி விடுவார்கள்--சோடாபாட்டில்உரையாடுக 03:38, 12 மே 2011 (UTC)[பதிலளி]
வணக்கம் அஸ்வின், கிமு ஆண்டுகள் தொடர்பான பகுப்புகள் உருவாக்கும் போது சுருக்கமாக, உ+ம்: பகுப்பு:கிமு 599 பிறப்புகள் என்றவாறு உருவாக்குங்கள். பகுப்பு:599 கி.மு. பிறப்புகள் என்பது தேவையற்றது. கிமு ஆண்டுகளின் தலைப்பும் கிமு 599 என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:49, 14 மே 2011 (UTC)[பதிலளி]
என் தவறை திருத்தியமைக்கு நன்றி. --அஸ்வின் 07:08, 14 மே 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

விக்கிப்புயல் பதக்கம்
புதிய பங்களிப்பாளரான நீங்கள் விக்கிச் சமூகத்தை உடனடியாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். எனவேதான், மிகவும் அத்தியாவசியமான பணிகளுள் ஒன்றான பகுப்பாக்கத்தைக் கையில் எடுத்துள்ளீர்கள் போலும். அருமையான முயற்சி அஸ்வின். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். உங்களைப் பற்றி மேலும் விபரங்களைப் பயனர் பக்கத்தில் தரலாமே! தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்!!!

சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:13, 19 மே 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]


மிக்க நன்றி --அஸ்வின் 07:19, 19 மே 2011 (UTC)[பதிலளி]

சிகாகோ பெருந்தீ[தொகு]

நீங்கள் உருவாக்கிய சிகாகோ பெருந்தீ கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தில் சிறப்புப் படம் பகுதியில் மே 29, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.

13:45, 29 மே 2011 (UTC)

--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 29 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில் --அஸ்வின் 13:45, 29 மே 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகள்[தொகு]

அசுவின், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பல திருத்தப்பட வேண்டும். அவற்றில் சிவப்பு இணைப்புகளில் உள்ள பகுப்புகளை உருவாக்காதீர்கள். அவற்றில் பல தமிழ் விக்கியில் அவ்வளவு தேவைப்படாது. அவற்றில் பல நீக்கப்பட வேண்டியவை. தேவையில்லாதவற்றை நீங்களே அழித்து விடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 01:42, 13 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
தமிழ் விக்கிப் பக்கங்களில் பெருமளவில் தேவையற்றவைகளை களையும் உங்கள் புயல்வேகப் பங்களிப்பினை பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குகிறைன். மணியன் 02:49, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி --அஸ்வின் 07:18, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் -- மாகிர் 04:47, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

தானியங்கி, சிறு தொகுப்புகள்[தொகு]

அஸ்வின், நீங்கள் செய்யும் சில பணிகள் தானியங்கி மூலமாக எளிதாக செய்யலாம். உங்களுக்கு முடியுமென்றால் en:Wikipedia:Autowikibrowser சென்று தரவிறக்கி முயற்சித்து பாருங்கள். மேலும் சிறிய தொகுப்புகளை சேமிக்கும்போது, இது ஒரு சிறு தொகுப்பு எனும் செக்பாக்சை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நன்றி -- மாகிர் 04:47, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

முயற்சி செய்கிறேன். நன்றி --அஸ்வின் 07:21, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
அஸ்வின், தமிழ் விக்கியில் awb இயக்க தனி அனுமதி தேவையில்லை (ஆங்கில விக்கியில் அனுமதி வேண்டும்). தரவிரக்கி பயன்படுத்துங்கள். பயன்படுத்துவது எளிதே, சீக்கிரம் கற்று விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 08:11, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி --அஸ்வின் 08:14, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
கலக்கிறீங்க :-). ஒரே ஒரு விசயம் “orphan" தொடுப்பு இடும் வழக்கம் தமிழ் விக்கியில் கிடையாது - ஆங்கில விக்கிக்கு உரியது. எனவே அந்த ஆப்சனை மட்டும் எடுத்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:41, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்[தொகு]

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:15, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள்[தொகு]

வணக்கம் அசுவின், வார்ப்புரு ஒன்றில் நீங்கள் செய்திருந்த மாற்றங்கள் சிலவற்றை மீள்வித்திருக்கிறேன். பார்க்க: [1]. வார்ப்புருக்களில் ஆங்கில, மற்றும் பிற மொழிக் கட்டுரைகளுக்கு இணைப்புக் கொடுக்க வேண்டாம். தமிழில் கட்டுரைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சிவப்பு இணைப்புகள் இருக்கலாம். பின்னர் கட்டுரைகள் உருவாக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 01:05, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:45, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா[தொகு]


தலைப்பிடல்[தொகு]

இரண்டு பெயர்கள் ஒரே தலைப்பில் இட முடியாது. உ+ம்: அகாடெமி விருதுகள் (ஆசுக்கர் விருது) என்ற தலைப்பு சரியானதல்ல. இந்த இரண்டு தலைப்புகளில் எதனை முதன்மைப் படுத்தப் போகிறீர்கள் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். அதனைத் தலைப்பாக இட்டு மற்றயதை வழி மாற்ற வேண்டும். மேலும் தலைப்பு ஒருமையில் இருப்பது நல்லது. அகாடெமி விருது என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:40, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]

வருக[தொகு]

மீண்டும் விக்கிப்பணிக்குத் திரும்பியது கண்டு மகிழ்ச்சி. தேர்வுகள் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சனிக்கிழமை (9-7-11) IITயில் நடைபெற உள்ள விக்கிப்பீடியா குறித்தான அறிமுக நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:51, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

நிச்சயமாக கலந்துகொள்வேன் :) --அஸ்வின் உரையாடுக... 16:19, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]
கலந்துகொண்டதற்கு நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:16, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர் அறிமுகம்[தொகு]

விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் சிறப்புடையதாக இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். தாங்கள் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் குறிப்புகளை படத்துடன் சேர்த்திட வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:15, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி, தேனி.எம்.சுப்பிரமணி.. பின்னர் சேர்த்து விடுகிறேன். --அஸ்வின் 14:46, 5 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அஸ்வின் - இந்த சிவப்பிணைப்பில் சேர்த்து விடுங்கள் (ஒரு படம் இருந்தால் நன்றாக இருக்கும் :-)).--சோடாபாட்டில்உரையாடுக 06:16, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
அஸ்வின், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களை அறிமுகப்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். எனவே அறிமுகத்தை விரைவில் தாருங்கள் என மீண்டும் நச்சரிக்கிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:11, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நன்றி அஸ்வின். உங்கள் அறிமுகத்தை முதல் பக்கத்தில் சேர்த்துள்ளேன். அடுத்த இரண்டு வாரங்கள் முதல் பக்கத்தில் இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:31, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:55, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி சோடாபாட்டில் மற்றும் தேனி.எம்.சுப்பிரமணி..

எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. :-) --அஸ்வின் 12:51, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

அஸ்வின், தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். மிகவும் அத்தியாவசியமான பணிகளுள் ஒன்றான பகுப்பாக்கத்தைக் கையில் எடுத்து மேற்கொண்டு வருகின்றீர்கள் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு அவசியமான பணி தங்களுடையது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் --P.M.Puniyameen 12:10, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
+1 --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:54, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அறிமுகம் கண்டு அகமகிழ்ந்தேன்.படிப்பிற்கும் இடையே உங்களைப்போன்ற மாணவர்கள் தமிழ் விக்கியில் துடிப்பாக செயலாற்றுவது மிகவும் உற்சாகமளிக்கிறது. தங்கள் பணி தொடர வாழ்த்துகள் !!--மணியன் 14:53, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சூர்யபிரகாசு.ச.அ. மற்றும் மணியன் :) --அஸ்வின் 13:15, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகள்[தொகு]

அஸ்வின், பத்தாண்டுகளுக்கான பகுப்புகளில் decade header வார்ப்புரு இணைக்கும் உங்கள் முயற்சி நன்று.--Kanags \உரையாடுக 01:08, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நன்றி Kanags --அஸ்வின் 01:14, 6 ஆகத்து 2011 (UTC).[பதிலளி]

அஸ்வின், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் உள்ள சிவப்பு இணைப்பு பகுப்புகளை உருவாக்க முனைய வேண்டாம். இக்கட்டுரைகள் அனைத்தும் திருத்தப்பட வேண்டும். பகுப்புகளும் பல தேவையற்றவை.--Kanags \உரையாடுக 02:53, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]


Hi Aswn,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதக்கம்[தொகு]

சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
கொஞ்சம் தாமதமாக இதை வழங்குகிறேன். உங்கள் பகுப்பு + வார்ப்புரு துப்புரவுப் பணிகளால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சோடாபாட்டில்உரையாடுக 04:41, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிகவும் நன்றி!! :) சோடாபாட்டில்உரையாடுக. --அஸ்வின் 23:18, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

AswnBot[தொகு]

அஸ்வின், சில நாட்கள் உங்கள் தானியங்கியை இயக்கிப் பார்த்து சரியாக வேலை செய்வது உறுதிப்படுத்திய பின்னர் தானியங்கி அணுக்கத்துக்கு விண்ணப்பியுங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 01:21, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
AswnBot என்ற பயனர் கணக்கில் உங்கள் தானியங்கியை இயக்குங்கள்.--Kanags \உரையாடுக 01:51, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
AswnBot என்று புகுபதிகை செய்வதிற்கு பதிலாக Aswn என்று செய்துவிட்டேன். மன்னிக்கவும்.இனி அத்தவறை செய்ய மாட்டேன்.நன்றி --அஸ்வின் 01:59, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
பகுப்பு விக்கியிடை இணைப்புகள் என்பது ஒரு அருமையான முயற்சி அஸ்வின். உங்கள் தானியங்கி வெற்றிகரமாக இயங்க என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 04:16, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. சோடாபாட்டில் --அஸ்வின் 13:18, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

Command Prompt-இல் தமிழ் வார்த்தைகளை அச்சிடுவது எப்படி? உதவவும் --அஸ்வின் 13:18, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இது பற்றிய டச்சு விக்கிப்பீடியர் ஜெரார்டின் பதிவு--சோடாபாட்டில்உரையாடுக 05:34, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

படிமங்களின் காப்புரிமை[தொகு]

படிமம்:பி. கக்கன்.jpg, படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg, படிமம்:TVS iyyengar.jpg ஆகிய படிமங்களில் அனுமதி என்ற பெயரில் ஏற்கனவே நான் அந்த படிமத்தின் காப்புரிமையை வழங்கியுள்ளேன். மேலும் இறந்த தலைவர்களின் படிமங்கள் நியாய பயன்பாட்டு காரணங்களின் கீழ் இவ்வாறு பதிவேற்றப்படலாம் என நினைக்கின்றேன். ஆனால் நீங்கள் உருவாக்கிய அந்த தானியங்கி படிமத்தின் காப்புரிமையை கேட்கிறது. இப்பொழுது நான் எந்த விதமான காப்புரிமையை வழங்குவது. --ஸ்ரீதர் /பேசுக 02:44, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆமாம், நியாயப் பயன்பாடு வார்ப்புரு சேர்ப்பதில் தவறில்லை. அத்துடன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணத்தையும் சேருங்கள்.--Kanags \உரையாடுக 02:49, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அஸ்வின், வார்ப்புருக்கள், மற்றும் பகுப்புகளுக்கு பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் என்ற காரணம் பொருந்தாது என நினைக்கிறேன். பொதுவாகக் கட்டுரைகளுக்கே இது பொருந்தும். எனவே வார்ப்புருக்கள், மற்றும் பகுப்புகளை நீக்க வெறுமனே delete வார்ப்புருவை இணைத்தால் போதும்.--Kanags \உரையாடுக 02:29, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு நிமிடம்![தொகு]

நான் அவ்வார்ப்புருக்களைச் சீரமைத்துக் கொண்டிருக்கிறேன். ஓர் அரைமணி நேரம் கழித்து அவற்றில் கைவைக்கவும் அஸ்வின். :) ஒரு சின்ன வேலைதான். :) உங்கள் ஆர்வத்தையும் வேகத்தையும் கண்டு நான் வியக்கேன். ;) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக... 13:45, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கட்டுரைகளைப் பிரித்தல்[தொகு]

அஸ்வின்,

கூகுள் கட்டுரைகளில் இருந்து உள்ளடக்கங்களைப் பிரித்து தனிக்கட்டுரை உருவாக்கினால், இரு வேலைகளைக் கூடுதலாகச் செய்ய வேண்டுகிறேன்.

  1. புதிய கட்டுரையிலும் {{google}} என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். கூகுள் உள்ளடக்கம் என்று அடையாளம் காண உதவும்
  2. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் எந்தைக் கட்டுரையிலுருந்து எடுக்கப்பட்டது என்று இட்டு விடுங்கள் - இது பதிப்புரிமை காரணத்துக்காக. எங்கிருந்து வந்தவை என்று குறித்து வைக்க.--சோடாபாட்டில்உரையாடுக 13:49, 23 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஏற்கனவே பல விக்கியிடை தானியங்கிகள் உள்ளனவே? உங்கள் AswnBot தானியங்கியின் பணி எவ்வாறு மாறுபட்டு இருக்கும் என்று அதன் பயனர் பக்கத்தில் விளக்க முடியுமா? - --இரவி 15:10, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aswn/தொகுப்பு01&oldid=1008670" இலிருந்து மீள்விக்கப்பட்டது