லப்பிரச்கொப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையூடுருவிநோக்கி
இடையீடு
ICD-9-CM54.21
MeSHD010535
OPS-301 code:1-694

பையூடுருவி நோக்கி (laparoscopy, லாப்பரசுக்கொப்பி, பண்டைய கிரேக்கம்: λαπάρα, லப்பாரா) என்பது ஒரு நவீன தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை முறையாகும். இந்த லப்பிரசுக்கொப்பி சத்திரசிகிச்சைச் சிக்கல்கல்கள் எதுவும் இல்லாது எல்லோராலும் விரும்பப்படுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான சிகிச்சை வகையாகும். ஏனெனில் இவ்வகை சத்திரசிகிச்சையின் போது வயிற்றில் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. அதேபோல் வைத்தியசாலையில் நாட்கணக்கில் தங்க வேண்டியதுமில்லை. குறிப்பாக இந்த சிகிச்சை முறையில் பெண்நோயியலில் உள்ள நோய்கள் எல்லாவற்றிற்கும் தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பெரிய காய தழும்புகைளை ஏற்படுத்தும் திறந்து செய்யப்படும் பாரம்பரிய சத்திரசிகிச்சைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

லப்பிரசுக்கொப்பி சத்திரசிகிச்சை முறை[தொகு]

இந்த முறை சத்திரசிகிச்சையின் போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளியை முழுமையாக மயக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர் அவரது தொப்புல் பகுதியை சிறியதொரு துளை போட்டு அதற்கூடாக ஒரு சிறிய குளாய் போன்ற புகைப்படக்கருவியை உட்செலுத்தி பின்னர் அதிலிருந்து இணைப்புகள் எற்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் வயிற்றின் நிலவரத்தை பார்க்க முடியும். தொலைக்காட்சியில் வயிற்றுள் தெரியும் படத்தை மையமாக வைத்து, உருவப்படமும் ஏனைய உபகரணங்களையும் உட்செலுத்தி மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளை செய்யக்கோடியதாக உள்ளது. இதற்கான நேரம் சத்திரசிகிச்சை வகையை பொறுத்து 15 நிமிடத்திலிருந்து 45 வரை வேறுபடும். சிகிச்சை முடிவடைந்து உணர்வு திரும்பிய பின் கூடுதலானவர்கள் அதே நாளில் வீடு திரும்பக்கூடியதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லப்பிரச்கொப்பி&oldid=3590553" இலிருந்து மீள்விக்கப்பட்டது