விக்கிப்பீடியா பேச்சு:மாதிரி முதற்பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

I'm O.K with this model. But just a few questions.

  • do we really need 2 சிறப்புக் கட்டுரைகள்
  • there is no link to sandbox in the main page. we need to have one there.

--Harikishore 09:02, 6 ஏப் 2005 (UTC)

  • Harikishore I have added sandbox link as you have suggested.Until we come up with more quality stuff to fill the main page (as done in english language wikipedia), I think we can fill the place with intro to one or more featured articles. Sundar and santhoshguru share the opinion that more content for readers should be present in main page. In that case we can create a link to page like "editor's corner" and place it at a prominent place. Then, we have to think about more type of content to fill in the first page.I request everyone to make appropriate changes in the same model main page. or you can create page like model main page version 2 and improvise on this model main page's format--ரவி (பேச்சு) 12:59, 6 ஏப் 2005 (UTC)
  • Considering the suggestions that more material should be presented for the reader, I have re-designed the model main page.The contributor's section has been moved as a prominent link to the bottom.The same link is also present in the intro section at the top. Considering that tamil wikipedia is still at initial stages needing more content contribution, I have retained the links for help and sandbox in the intro.
  • Since we don't have much content like english language wikipedia (like factfiles, do you know, trivia etc.,) I thought of giving small introductions to new articles.This would direct readers to new content and also help contributors to look into them and expand it.
  • In the பங்களிப்பாளர் கவனத்திற்கு page we can detailed description of article that need to be translated, created, expanded etc.,
  • Right now, the other languages list still occupies a huge portion of the page.If ok for everyone, we can remove it and just give links for other languages in the navigation pane. (it is done like that in german wikipedia).Then the main page will look crisp and attractive.
  • Also, please go to the விக்கிபீடியா:பக்க வகைகளின் கட்டமைப்பு and include your suggestions for categorization so that the main categories suggested at the model main page can be finalised and defined.
  • Once the layout is ok for everyone, we can decide how we gonna select the content for first page.
  • Please post your comments here for all the points I have highlighted here.Thanks--ரவி (பேச்சு) 04:19, 7 ஏப் 2005 (UTC)

Current changes[தொகு]

The other language links and the sister project links are given prominently at the bottom. link for statistics page is given from the number of articles count.Now the page is crisp and attractive yet giving all info. and the about wikipedia is already there in the template skin at the bottom.so no need to give one more link for it. Please post your comments regarding this design--ரவி (பேச்சு) 18:50, 8 ஏப் 2005 (UTC)

அண்மைய மாற்றங்கள்[தொகு]

முதற் பக்க பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து நடந்த உரையாடல்களை அடுத்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  • ஸ்ரீநிவாசனின் ஆலோசனைக்கு ஏற்ப பிற மொழி விக்கிபீடியாக்கள் மற்றும் பிற விக்கிமீடியா திட்டங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
  • சிவகுமாரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த வாரக்கூட்டு முயற்சி கட்டுரை முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது. முதற் பக்கத்தில் காட்சிக்கு வைக்கப்படும் கட்டுரைகள் அதிகமான பார்வை எண்ணிக்கை பெறுவதால், இதன் மூலம் கூட்டு முயற்சிக்கட்டுரைக்கும் மேம்பட்ட பங்களிப்பு கிடைக்கும் என நம்பலாம். ஆனால், அதிகம் வளர்ச்சிக்கு அடையாத இம்மாதிரி கட்டுரைகளை காட்சிக்கு வைப்பதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம்.
  • விக்கிபீடியா அறிமுக உரை எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
  • நன்கொடைகள் வழங்கக்கோரும் அறிவிப்பு அடியில் சேர்க்கப்பட்டுள்ளது. விக்கிமீடியாவுக்கு நிதி திரட்ட நம்மால் ஆனதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
  • இங்கு சிறப்புக்கட்டுரைகள் உருவாகும் வேகம் மிதமாக உள்ளதை கருத்தில் கொண்டு ஒரே ஒரு சிறப்புக்கட்டுரை மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
  • பொதுக்கலந்துரையாடல் பக்கத்திற்கான இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களில் அனைவருக்கும் உடன்பாடு என்றால் இம்மாற்றங்களை இன்னும் இரு தினங்களுக்கு பின் செயல்படுத்தலாம்.--ரவி (பேச்சு) 11:18, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சிவகுமாரின் அலோசனை மற்றும் புதிய கட்டுரை தெரிவு நன்று.
ஸ்ரீநிவாசனின் அவர்களின் அலோசனைக்கான பின்னணியை தருவீர்களா. ஆங்கில விக்கிபீடியாவில் பிற விக்கிதிட்டங்களையும் முன்நிலை படுத்துவதற்க்கு காரணம் பல் இனத்தவரும் ஆங்கில விக்கிபீடியாவை வாசிப்பதால் என நினைக்கின்றேன். அதாவது, கீழ் பகுதியை முன்னர் இருந்தது போல் 3 தொடுப்புக்கள் மூலம் எளிமை படுத்தலாமே. தனிப்பட்ட கருத்துத்தான்.
--Natkeeran 11:47, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நற்கீரன், என்னுடைய தனிப்பட்ட கருத்தும் உங்கள் கருத்துக்கு ஒத்தது தான். இது தொடர்பாக ஸ்ரீநிவாசனின் வாதமும் ஏற்புடையதாக இருந்ததால், இந்த மாற்றத்தையும் செயற்படுத்தினேன். எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கு காணலாம்--ரவி (பேச்சு) 12:17, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஒரு சிறு கருத்து. சிறப்புக் கட்டுரையையும், செய்தித் துணுக்குகளையும், கூட்டுமுயற்சிக் கட்டுரையையும் தனித்தனி வார்ப்புருக்களில் வைப்பது பொருள் தரும். ஒருமுறை அப்போது மொழிபெயர்க்கப்படாத ஐக்கிய இராச்சியம் கட்டுரை முதற்பக்கத்தில் செய்தி பகுதியில் இருந்தது. அதைக் கண்ட தமிழ் தெரியாத ஒரு அனுபவம் மிக்க பயனர் வெறும் வார்ப்புரு தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் உள்ள ஒரு கட்டுரை எப்படி சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டு முதற் பக்கத்திலும் வந்தது என்று கேள்வி எழுப்பினார். இது ஒரு சிறிய நிகழ்வு தான் என்றாலும் தவிர்க்கப்படக் கூடியது.
மற்றபடி கூட்டு முயற்சிக் கட்டுரை என்று கட்டுரையின் துவக்கத்திலேயே அறிவிக்கப்படுவதால் முழுமையடையாத கட்டுரையை முதற்பக்கத்தில் போடுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 12:02, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சுந்தர், வார்ப்புரு:mainpagefeatureஐ வார்ப்புரு:Mainpagebody என்று பெயர் மாற்றிவிட்டால் மேற்கண்ட குழப்பம் வராது. இல்லை, வார்ப்புரு:முதற் பக்க உள்ளடக்கம் என்று தமிழிலேயே பெயர் வெத்து விட்டால் தமிழ் தெரியாத யாரும் தவறாகப்புரிந்து கொள்ள மாட்டார்கள். இல்லை, நீங்கள் சொன்னது போல் தனித்தனி வார்ப்புருக்களை உருவாக்கி முதற் பக்க வார்ப்புருவுக்குள் இணைக்கலாம். அப்படி தான் ஆங்கில விக்கியில் செய்திருக்கிறார்கள். அது எனக்கு ஏகப்பட்ட nested loop போலத்தோன்றியதால் தவிர்த்துவிட்டேன். அப்புறம், அந்த கருத்து ஐக்கிய இராச்சியக்கடுரைக்கு கூறப்பட்டதல்ல. அல்பர்ட் ஐன்ஸ்டீன் கட்டுரைக்கு கூறப்பட்டது.--ரவி (பேச்சு) 12:17, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

விளக்கங்களுக்கு நன்றி, இரவி. -- Sundar \பேச்சு 12:27, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

முன்பு ஒருமுறை மயூரநாதன் விக்கிபீடியாவில் படிக்க வருபவர்கள், பங்களிப்பவர்கள் என்று இரு வகையினர் இருப்பதையும், படிக்க வருபவர்களே அதிகம் என்பதையும், படிக்க வருபவர்களை மனதில் கொண்டே முதற்பக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஆம், பார்க்க வருபவர்களில் அதிகபட்சம் 2-3% பேர் தான் பங்களிக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் கூட்டு முயற்சி கட்டுரை போன்றவற்றை முதற்பக்கத்தில் சேர்ப்பது 'விக்கிபீடியா work in progress' போன்றதொரு தோற்றத்தை அளிப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் இருப்பதனைத்தையும் இங்கு காப்பியடிக்க வேண்டியதில்லை தான், ஆனால் அதை ஒருமுறை பார்ததால், en:Main Page படிக்க வருவோரையும்,en:Wikipedia:Community_Portal பங்களிக்க வருவோரையும் மனதில் வைத்து வடிவமைக்க பட்டிருப்பதை காணலாம். இது போல் இங்கும் sidebarல் இருக்கும் Wikipedia:சமுதாய வலைவாசல் ப்க்கத்தை மேம்பதுத்தி கூட்டு கட்டுரையையின் இணைப்பை அங்கு கொடுக்கலாம். இதை பரிசீலக்கவும், மற்றபடி இது பற்றி எனக்கு strong கருத்து ஒன்றும் இல்லை. அடுத்து, அனைத்து மொழி விக்கிபீடியாக்களுக்கும் இணைப்பு இருக்கவேண்டும் என்பதை விட இந்திய மொழிகளும் முக்கிய உலக மொழிகளும் முதற்பக்கத்தின் sidebarல் இருக்க வேண்டும் என்பதே என் வாதம். 50000, 10000, 1000 கட்டுரைக்கு மேற்பட்டு உள்ள அனைத்து மொழி பீடியாக்களுக்கும் இணைப்பு தருவது பக்க எளிமையை குறைக்கிறது என்பது உண்மையே. அதற்கு பதில் இப்போதுள்ள முதற்பக்கத்தின் sidebarல் உள்ள மொழிகளை அப்படியே தொடரலாம் என்பது என் கருத்து. ஆனால் பிற திட்டங்களின் இணைப்பு இருக்க வேண்டியது அவசியம் அப்போது தான் விக்கி சோர்ஸில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் விக்சனரி, விக்கிபுக்ஸ் போன்றவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். -ஸ்ரீநிவாசன் 14:23, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஸ்ரீநிவாசன், கூட்டு முயற்சிக்கட்டுரை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே சமுதாய வலை வாசலில் இருக்கிறது. ஆனால், அதை எத்தனை பேர் பார்ப்பார்கள், எத்தனை பேரை பங்களிக்கத்தூண்டும் என்பது கேள்விக்குறியது. நாம் முதற் பக்கத்தில் கூட்டு முயற்சிக் கட்டுரையை காட்சிப்படுத்தாவிட்டாலும் தமிழ் விக்கிபீடியா இன்னும் வளர் பருவத்தில் தான் உள்ளது என்பது எளிதில் கண்டுகொள்ளத்தக்கது தான். இன்னும் அதிக பங்களிப்பாளர்களை ஈர்க்க இது ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் கூட்டு முயற்சிக்கட்டுரையை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன். வழமையாக பங்களிக்கும் பல பயனர்கள் வந்த பின் இது போன்ற விடயங்களை சமுதாய வலை வாசலுக்கு நகர்த்திக்கொள்ளலாம். அது வரை இது இங்கு நீடிக்கட்டும் என நினைக்கிறேன். அப்புறம், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்ற உறுதியுடன் அடுத்த மாற்றத்தில் பிற மொழி விக்கிபீடியாவுக்கான வார்ப்புருவை நீக்கி முன்பு போல் எளிய இணைப்பை மட்டும் தந்து விடுகிறேன்.--ரவி (பேச்சு) 14:39, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ஆம் ரவி, கூட்டு முயற்சி கட்டுரையின் இணைப்பை முதற்பக்கத்தில் தருவது பற்றி நீங்கள் கூறியதில் நியாயம் உள்ளது. பயனர்களின் எண்ணிக்கை பெருகும் போது இதை சமுதாய வலைவாசலுக்கு நகர்த்திக்கொள்ளலாம். பிற மொழி விக்கிபீடியா இணைப்புகளை பொறுத்த வரை இப்போதுள்ள முதற்பக்கத்திில உள்ளது போல் வார்ப்புருவுக்கு இணைப்பை கொடுத்துவிட்டு எளிமையான இணைப்புகளை சைட்பாரில் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல் பிற திட்டங்களின் இணைப்புகள் இருப்பதே நல்லது. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள், சென்னையை அடையாளப்படுத்தும் லேண்ட்மார்க்காக பொதுவாக சென்ட்ரல் நிலையமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான முதற்பக்கத்தில் இக்கட்டுரை இடம்பெறும் போது செ.மா கட்டடத்தை விட சென்ட்ரல் கட்டிடத்தின் படிமம் இடம்பெறுவதே பொருத்தம் என நான் கருதுகிறேன். மற்றவர்கள் இக்கருத்தை எதிர்க்காத பட்சத்தில் இவ்வாறு செய்ய வேண்டிக்கொள்கிறேன். -ஸ்ரீநிவாசன் 05:42, 16 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்து படி முதல் பக்க மாற்றங்களை செய்துவிடுகிறேன், ஸ்ரீநிவாசன். ரயில் நிலைய புகைப்படத்தையே போட்டு விடலாம்.--ரவி (பேச்சு) 11:23, 16 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சென்னை கட்டுரைக்கு முதல் பக்கத்திலிருந்து தொடர்பு(link) இல்லை. தமிழர் கட்டுரையில் உள்ளது. முதற்பக்கத்திலிருந்தே தொடர்பு (link ) கொடுத்தால் நன்றாக இருக்கும். -Sivakumar 11:31, 16 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சிவகுமார், நீங்கள் சுட்டிக்காட்டிய கவனக்குறை பிழையை நீக்கி விட்டேன். எல்லோரின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு முதற் பக்கத்தை இற்றைப்படுத்தி விட்டேன். --ரவி (பேச்சு) 12:08, 16 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

முதற்பக்க மறு வடிவமைப்பு[தொகு]

முதற் பக்கத்தில் செய்திகளும், தெரியுமாவும் இடம்பெற ரவி அவர்களின் பரிந்துரையை நான் ஆமோதிக்கிறேன். மேலும் முதற் பக்கத்தில் பாதிக்குமேல் ஆக்கிரமித்திருக்கும் விக்கிபீடியா பற்றிய முன்னுரையும், பிரிவுகள் பற்றிய சாளரமும் சிறியதாக ஆங்கில முதற் பக்கத்தில் இருப்பது போல மாற்றப்பட வேண்டுமென நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா தலத்தை தேடி வருபவரகள் விக்கிபீடியா பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களாகவே இருப்பர். ஆகயினால் முன்னுரையை சிறிதாக்கியோ கிழே நகர்த்தியோ முதற்பக்க கட்டுரைகளை மேலும் பிரதானமாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

பாலாஜி. 14:59, 19 அக்டோபர் 2006 (UTC)

முதற்பக்க மறு வடிவமைப்பு பற்றி அண்மையில் பயனர்:பாலாஜி ஆலோசனைகள் தந்திருந்தார். அதை ஒட்டி உங்கள் வடிவமைப்புகள், கருத்துக்களை இங்கு தரலாம். தமிழர்களிடம், தமிழ் விக்கிபீடியா, விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, விக்கிபீடியா அறிமுகக் குறிப்பை இதற்கு மேல் சுருக்க வேண்டாம் என்பது என் கருத்து. பிற விக்கிமீடியா திட்டங்களுக்கான இணைப்பை சுருக்குவதன் மூலம், பக்கத்தை இன்னும் சிறிதாக்ககலாம். முதற் பக்கம் அளவில் சிறிதாகவும் உள்ளடக்கத்தில் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது.

இது போக முதற்பக்கத்தில் பிற உள்ளடக்கங்களை இணைப்பதற்கான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. ஊடகக் கோப்புகளை காட்சிப்படுத்தலாம் என்று முன்னர் ஒரு முறை பரிந்துரைத்திருந்தேன். ஆனால், தொடர்ந்து காட்சிப்படுத்த போதுமான கோப்புகள் இல்லை. சிறப்புப் படிமங்களை காட்சிப்படுத்துவதிலும் இதே பிரச்சினை உண்டு.. முதற்பக்கக் கட்டுரைகளை அடிக்கடி மாற்றுவதன் மூலம் repeat பயனர்களை வர வைக்க முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன். நற்கீரன், போன முறை செய்திக்கட்டுரைகள் ஏதும் இல்லாததால், முழுக்க உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளை தந்தேன். தற்பொழுது முழுக்க செய்திக்கட்டுரைகளை கொண்டு இற்றைபடுத்தியுள்ளேன். இந்தப் பகுதிகளை வசதிக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம் தானே?--ரவி 10:41, 22 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


ரவி, செய்திகளை சேர்ப்பது நன்று என்றே எனக்கும் தோன்றுகின்றது. எனினும் தமிழ் விக்கிபீடியா பற்றி தெரியாதவர்களே அதிகம் என்பது என் கணிப்பு, எனவே சாளரத்தை சுருக்குவது நல்லதாக தெரியவில்லை. --Natkeeran 15:09, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

புதிய மாற்றங்கள்[தொகு]

தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு, நீங்கள் கீழே ஒருவரியில் தந்திருக்கும் இணைப்புக்கள் இலகுவில் கண்ணில் படாது. ஆகவே, சகோதர பக்கங்களின் முந்தைய வடிவமே பொருந்தும் என்று நினைக்கின்றேன். குறிப்பாக நாங்கள் அவற்றை வளத்தெடுக்கும் நோக்கு இருப்பதால்.

உடனடியாக கட்டுரையை ஆரம்பிக்க தேவையான விளக்கங்களை ஒரு பக்கத்தில் தருவது நன்று. இங்கு கிளிக் செய்து அங்கு கிளிக் செய்து கொண்டுருக்க புதுப்பயனர்கள் வீச்சு இழந்துவிடுவார்கள்.

இவை என்கருத்துக்கள் மட்டுமே. பிறபயனரின் கருத்தும் அறிந்து முடிவெடுக்க. நன்றி. --Natkeeran 14:45, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், முதற்பக்க வடிவமைப்பு பற்றி பல முறை உரையாடும்போது பிற திட்டங்களுக்கான இணைப்பு குறித்த கேள்வி திரும்பத் திரும்ப எழுகிறது. என் பார்வையில், முதற் பக்கம் அளவில் சிறியதாகவும், உடனே பதிவிறக்கத் தக்கதாகவும், அடிக்கடி மாறும் உள்ளடக்கம் கொண்டதாகவும், வடிவமைப்பு எளிதாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். கூகுள் முதற் பக்கத்தை ஒரு முன்மாதிரியாக கொள்ளலாம். பிற திட்டங்களுக்கான இணைப்பில் படிமங்களும் சேர்ந்து முதற்பக்கத்தில் பெரிய இடத்தை அடைப்பது போன்று தோன்றுகிறது. அதனாலேயே நகர்த்தி உள்ளேன். தவிர, இன்னும் சில உள்ளடக்கங்களையும் சேர்க்கும் உத்தேசம் உள்ளது (எடுத்துக்காட்டுக்கு - ஊடகக் கோப்புகள், சிறப்புப் படிமங்கள், பயனர் தெரிவுக் கட்டுரைகள்..)..பக்கம் மீக நீண்டு விடக் கூடாது என்பது என் கவலை. முதற் பக்கத்தில் இணைப்புகள் சிலவே உள்ளதால் பிற திட்டங்கள் இணைப்பு நிச்சயம் கண்ணில் படும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இல்லை, படிமங்களைத் தூக்கி விட்டு அனைத்து திட்டங்களுக்கான இணைப்பையும் எழுத்தில் ஒரே வரியில் தரலாம்.--ரவி 15:35, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

குறைந்த பட்சம், தமிழில் தற்போது இருக்கும் திட்டங்களுக்காவது படிமங்களுடன் இணைப்புக்களை தாருங்கள். படிமங்களின் எடையை குறைக்க பார்க்கவும். நன்றி. --Natkeeran 15:39, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]