சர்வதேச இசை வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வதேச இசை வகைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. மெல்லிசை (melody)
  2. பாலிபோனி (polyphony)
  3. ஹார்மனி (harmony)

மெல்லிசையில் ஒற்றை சுவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் ஒரு முறையை அனுசரித்து வரும். பாலிபோனி இசையில் ஒரு முறையை தழுவி அமைக்கப்பட்டுள்ள பல கீதங்கள் ஒரே தருணத்தில் வாசிக்கப்படும். ஹார்மனிக்கல் இசையில் சுவரத்தொகுதிகள் அல்லது சுவர அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் வரும். அதாவது ஒரு சுவரத்தை வாசிக்கும் போதே அதன் இணை, நட்பு சுவரங்கள் கூடவே வாசிக்கப்படும்.

இந்தியா முதலிய கீழ்நாட்டுப் பகுதிகளில் மெல்லிசையைக் கேட்கலாம். ஐரோப்பிய நாகரிகம் பரவியுள்ள மற்றைய தேசங்களிலும் பாலிபோனி, ஹார்மனிக்கல் இசையைக் கேட்கலாம்.

இந்திய இசையை ராக சங்கீதம் எனக்கூறுவர். ராக சங்கீதத்திலுள்ள நுண்மையான சுருதிகள், கமகங்கள் முதலிய இசைத் தத்துவங்களை மேற்கத்திய இசையில் காணமுடியாது.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வதேச_இசை_வகைகள்&oldid=1654412" இலிருந்து மீள்விக்கப்பட்டது