வில்பிரட் தீசிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்பிரட் தீசிசர்
பிறப்பு3 சூன் 1910
அடிஸ் அபாபா
இறப்பு24 ஆகத்து 2003 (அகவை 93)
இலண்டன்
படித்த இடங்கள்
  • Magdalen College
பணிதேடலாய்வாளர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர், traveler
குடும்பம்Dermot Vigors Thesiger, Roderic Miles Doughty Thesiger, Brian Peirson Doughty-Wylie
விருதுகள்Knight Commander of the Order of the British Empire, Distinguished Service Order, Founder’s Medal, Burton Memorial Medal

வில்பிரட் தீசிசர் சி.பி.ஈ, டி,.எசு.ஓ (Wilfred Thesiger) (3 சூன், 1910 – ஆகத்து 24, 2003)ஒரு பிரித்தானிய நாடுகாண் பயணியும், பயண எழுத்தாளரும் ஆவார். இவர் எத்தியோப்பியாவின் தலை நகரமான அடிசு அபாபாவில் பிறந்தார். இவரது தந்தை வில்பிரட் கில்பர்ட் தீசிசர் ஒரு ராசதந்திரி, நடிகரான ஏர்ணெச்ட் தீசிசர் இவரது ஒன்றுவிட்ட சகோதரர். இந்தியாவின் வைசுராயாக இருந்த பிரடெரிக் தீசிசர் இவரது இவரது தந்தையின் சகோதரர்.

இளமைக்காலம்[தொகு]

தீசிசர், ஏட்டன் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஆக்சுபோர்டில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1930௧933 வரை ஆக்சுபோர்டின் குத்துச் சண்டைக் குழுவில் இருந்தார். 1933 ஆம் ஆண்டில் அக் குழுவுக்கு இவரே தலைவரானார். 1930 ஆம் ஆண்டில் எதியோப்பியப் பேரரசர் ஏலி செலாசியின் முடிசூட்டுவிழாவுக்குத் தனிப்பட்ட அழைப்பின்பேரில் ஆப்பிரிக்கா வந்தார். 1933 ஆம் ஆண்டில் அவாசு ஆற்றின் பாதை குறித்து ஆராய்வதற்காக அரச புவியியல் கழகத்தினால் நிதி அளிக்கப்பட்ட பயணத் திட்டமொன்றில் சேர்ந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு வந்தார். இப்பயணத்தின்போது இவர் ஔசா சுல்தானகத்துக்குள் நுழைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றதுடன், அப்பே ஏரிக்கும் சென்றார்.

1935 ஆம் ஆண்டில் தீசிசர், தர்பூர், மேல் நைல் பகுதி ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த சூடான் அரசியல் சேவையில் இணைந்தார். இவர் சூடான் பாதுகாப்புப் படை, சிறப்பு வான்படை ஆகியவற்றில் சேர்ந்து மேசர் தரத்துடன், பல பாலைவனப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற கிழக்கு ஆப்பிரிக்கப் படைநடவடிக்கைகளில், கிடியன் படையுடன் சேர்ந்து எதியோப்பியாவில் போரிட்டார். அப்போது அகிபார் என்னும் இடத்தையும் அங்கிருந்த 2500 இத்தாலியப் படையினருடன் கூடிய படை முகாமையும் கைப்பற்றியமைக்காக டி.எசு.ஓ எனப்படும் சிறப்புச் சேவை ஒழுங்கு விருதும் இவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர், வடக்கு ஆப்பிரிக்கப் படை நடவடிக்கைகளில், தொலைதூரப் பாலைவனக் குழுவில் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்பிரட்_தீசிசர்&oldid=2733856" இலிருந்து மீள்விக்கப்பட்டது