பேச்சு:நீங்களும் எழுதலாம் (சிற்றிதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் நீங்களும் எழுதலாம் சஞ்சிகையில் எழுதியுள்ள கவிஞர்களின் பெயர்பட்டியலை திரட்டி சேர்த்ததற்குக் காரணம் இலங்கையில் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அநேக கவிஞர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் ஆகும். இவ்வாறு பட்டியலிடுவது விக்கிநடைமுறைகளுக்கு பொருத்தமானதா என்பதை என்னால் தீர்மானிக்க முடியாதுள்ளது. இப்பட்டியலை இணைத்ததினூடாக எதிர்காலத்தில் இவர்கள் பற்றிய குறிப்புகளை விக்கியில் எமது பயனர்களால் திரட்டி சேர்க்க முடியும் எனக் கருதுகின்றேன். விக்கிநடைமுறைகளுக்குப் பொருத்தமானதாக இல்லாவிடின் பட்டியலை நீக்கிவிடவும். --P.M.Puniyameen 04:39, 25 மார்ச் 2011 (UTC)

அப்படி ஒரு விக்கி நடைமுறை இருப்பதாகத் தெரியவில்லை. தகவல் தருவதில் "குறை ஒன்றும் இல்லை".--Kanags \உரையாடுக 04:50, 25 மார்ச் 2011 (UTC)
இது எனது தனிப்பட்ட கருத்து. கவிஞர் என்ற அடைமொழியை ஒருவர் தனதாக்கிக் கொள்வதற்கான வரையரைகள்(குறைந்த பட்சம் ஒரு கவிதை எழுதுவதை விட) எங்குமே இருப்பதாக நான் அறியவில்லை. ஆயினும் முதல் கவிதயை எழுத எத்தணிக்கும் போதே கவிஞர் என அடைமொழிப்படுத்துவது ஒரு வகையில் ஊக்குவிப்பாயிருந்தாலும் சற்று மலினப்படுத்திவிடுமோ என்ற அச்சமும் எழுவதாகிறது. இது வெறும் கருத்து மட்டுமே.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:02, 25 மார்ச் 2011 (UTC)

தங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே சிவகுமார். இருப்பினும் ஒரு பொதுப்படையான ஆய்வின் கீழ் வரும்போது அவர் எத்தனை கவிதைகளை எழுதினார் என்று கண்டுபிடிப்பது ஆய்வாளர்களுக்கு கடினமாகிவிடுகின்றது. தனிப்பட்ட முறையில் ஒரு கவிஞனை ஆராயும்போது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் கவனம் செலுத்தலாம். அடுத்து இலங்கையை பொறுத்தவரை ஒருசில கவிதைகளை எழுதியவர்கள்கூட பெரிய கவிஞர்களாக தேசிய பத்திரிகைகளில் கூட இனங்காட்டப்படுகின்றனர். இலங்கையில் பிரதேச ரீதியாக அதிகளவில் சஞ்சிகைகள் வெளிவருவதினால் தரம்பிடித்துக் கொள்வது கடினமான காரியமாக உள்ளது. எவ்வாறாயினும் தங்கள் கருத்து கவனத்திற்கொள்ளத்தக்கதே. --P.M.Puniyameen 06:45, 25 மார்ச் 2011 (UTC)