வஞ்சித் தாழிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஞ்சித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இதில் உள்ள நான்கு அடிகளும் குறளடிகளாக (இரண்டு சீர் அடி) அமைந்திருக்கும்; ஓரெ எதுகை பெற்றிருக்கும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும்.

எடுத்துக்காட்டு 1

பிணியென்று பெயராமே
துணிநின்று தவஞ்செய்வீர்!
அணிமன்றில் உமைபாகன்
மணிமன்று பணிவீரே!

எடுத்துக்காட்டு 2

பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர்

எளியவர்க் கிரங்காமல்
ஒளியராய் உறவாழ்வார்
துளியிலா விசும்பென்ன
வெளியரால் இளிவுண்பர்

உழவர்தம் உழைப்புண்டு
விழவராய் மிகவாழ்வார்
இழவராம் இவரென்னக்
கிழவரால் இழிவுண்பர்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சித்_தாழிசை&oldid=967146" இலிருந்து மீள்விக்கப்பட்டது