பேச்சு:தில்சன் கொலை நிகழ்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை விக்கியில் வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. மேலும் சில ஆதாரங்களுடன் இதனை முழுமையான கட்டுரையாக்கலாம்.--Kanags \உரையாடுக 21:08, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

நான் வேறுபடுகிறேன். இது ஓர் வழமையான சட்டம் ஒழங்குப் பிரச்சினையே. அரசியல் தாக்கமோ சமூக தாக்கமோ இல்லை. இது விக்கி செய்திக்கே உகந்தது. --மணியன் 23:01, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
ஆம் இது ஒரு செய்தியே. தற்போதைய நிலவரப்படி இதனால் நீடித்த தாக்கம் எதுவும் எழவில்லை. ஒரு கொலை நடந்தது, குற்றவாளியை தண்டிக்க மக்கள் போராடினர், சில நாட்கள் கழித்து ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற நிலை தான் தற்போது உள்ளது. எனவே இது செய்திகளுக்குத் தான் பொருத்தமாக இருக்கும். இதனால் நீடித்த விளைவுகள் - சட்ட மாற்றம், இராணுவ குடியிருப்பு விதிகள் / ஆயுத விதிகள், இராணுவம்-தம்ழ்நாட்டு சமூக உறவில் மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் “தில்சன் கொலை நிகழ்வு” என்ற தலைப்பில் கட்டுரை உருவாக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:49, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]
இலங்கையில் நபர்களை இராணுவம் சுடுவது வழமை. அவை செய்தியாகக் கூட இடம்பெறுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படி இல்லை. கட்டனக் குரல்கள் பல மூலைகளில் இருந்து ஒலித்துள்ளன. சட்டச் சிக்கல் தொடர்கிறது. கட்டுரை இருப்பது தகுமே. --Natkeeran 18:28, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]


சுட்டது இராணுவம் இல்லை. ஓய்வு பெற்ற இராணுவத்தினர். தனி நபர். இது இராணுவம் எதிர் பொதுமக்கள் என்று காணப்படவில்லை. வழமையான கொலை நிகழ்வு. கொலை நிகழ்வுகள் நீடித்த தாக்கம், அல்லது மாற்றங்கள் ஏற்படுத்தினால் மட்டும் கட்டுரையாகக் கொள்வது சரியாக இருக்கும். குற்றத்தை மூடி மறைக்க முயற்சி, அரசு வற்புறுத்தல் என நான்கு நாட்கள் செய்திகள் இருந்தன. ஒருவ்ர் கைது செய்யப்பட்டவுடன் செய்திகள் நின்றுவிட்டன. இது போல நிகழ்வு (ஒரு குற்றம், மூடி மறைத்தல், போராட்டம், பின் நடவடிக்கை) என்பது தமிழ்நாட்டில் வழக்கமான ஒன்றே. --சோடாபாட்டில்உரையாடுக 18:37, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
வழமையான கொலை நிகழ்வு இல்லை. ஐக்கிய அமெரிக்காவில் ஒரு கறுப்பர் காவல்துறையால் தவறாக தண்டிக்கப்பட்டால் அது வழமையான நிகழ்வு இல்லை. இங்கும் சேரி வாழ் ஒருவர் அவ்வாறு தவறாக கொலைச்செய்யப்பட்டு இருக்கிறார். --Natkeeran 18:42, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
அமெரிக்காவில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் ஒரு கறுப்பர் ஒருவரைச் சுட்டால் வழமையான நிகழ்வே. அது போலவே இதுவும் - சுட்டது இராணுவமல்ல. சுடப்பட்ட இடம் ஒரு இராணுவக் குடியிருப்பு, restricted area கூட அல்ல. நகரின் மற்ற குடியிருப்புப் பகுதிகளைப் போலத் தான் இதுவும். இது இராணுவம் எதிர் பொதுமக்கள் என்ற விசயமே அல்ல. சேரி வாழ் மக்கள் (பிற பகுதி வாழ் மக்களைப் போலவே) பலர் கொலை செய்யப்படுகின்றனர். அது போலத் தான் இதுவும். --சோடாபாட்டில்உரையாடுக 18:50, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
இந்த நிகழ்வு ஓர் வழமையான முதிய பொறுமையிழந்த முன்னாள் வீரர் செய்த குற்றமேயன்றி இதில் வர்க்க போராட்டத்தின் இழைகளோ சாதி தொடர்பு குற்றங்களோ இல்லை. இராணுவக் குடியிருப்பில் இந்தக் குற்றம் நடந்ததென்பதைத் தவிர படைத்துறைக்கும் இதற்கும் வேறு தொடர்புமில்லை. எனவேதான் இது விக்கிச் செய்திகளில் இருந்தால் போதுமானது என நான் கருதுகிறேன். அப்படி விக்கியில் இருப்பது தேவை எனக் கருதினாலும் தில்சன் WP:Notabilityஇன் கீழ் வராது. சோபா குறிப்பிட்டதைப் போல தலைப்பை தில்சன் கொலை நிகழ்வு என மாற்றலாம். --மணியன் 09:24, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]