கிறித்தவ நம்பிக்கை அறிக்கை (பட்டியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ சமயம் தொடங்கியதிலிருந்து குறிப்பாக முதல் சில நூற்றாண்டுகளில் சில நம்பிக்கை அறிக்கைகளை உருவாக்கித் தந்துள்ளது. கிறித்தவர்கள் எதை நம்பி ஏற்கின்றார்கள் என்பதை நிர்ணயிக்கின்ற உரைகல் போல இந்நம்பிக்கை அறிக்கைகள் இருந்துவந்துள்ளன. இவை மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகளால் ஏற்கப்பட்டுள்ளன. முக்கிய நம்பிக்கை அறிக்கைகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது[1]:

நம்பிக்கை அறிக்கைகள்[தொகு]

நம்பிக்கை அறிக்கை உருவாக்கப்பட்ட ஆண்டு ஏற்போர் மூலப் பெயர் குறிப்புகள் உரைக்கூற்று இணைப்பு
திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை 200-900 கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைப் பிரிவுகளும் Lat.: Symbolum Apostolorum or Symbolum Apostolicum இந்நம்பிக்கை அறிக்கை தோன்றியது பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை".
நிசேயா நம்பிக்கை அறிக்கை 325 இயேசு கிறித்து தெய்வீகப் பண்பைக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படைக்கப்பட்டவரே என்று கற்பித்த ஆரியுஸ் என்பவரின் கொள்கை தவறு என்று முதலாம் நிசேயா பொதுச்சங்கம் (கிபி 325) அறிவித்தது. தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுள் பற்றிய உண்மையை நம்பிக்கை அறிக்கையாக இப்பொதுச்சங்கம் வரையறுத்தது.[2]
நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை 381 கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைப் பிரிவுகளும் நிசேயா நம்பிக்கை அறிக்கை விரிவாக்கப்பட்டு மீள்பார்வை இடப்பட்ட பாடம் இது. இயேசுவின் இறைத்தன்மையை முழுமையாக ஏற்காத ஆரியுசுக்கு மறுப்பாக எழுந்த மற்றொரு தப்பறைக் கொள்கை அப்போல்லினாரிஸ் என்பவரால் போதிக்கப்பட்டது. இயேசுவுக்கு மனித உள்ளம் கிடையாது, இறை உள்ளம் மட்டுமே உண்டு என்று போதித்த அப்போல்லினாரிசின் கொள்கைக்கு நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை பதில் அளிக்கிறது. இந்நம்பிக்கை அறிக்கையில் "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகின்றார்" என வரும் சொற்றொடரில் "மகனிடமிருந்தும்" என்னும் சொல் மேலைத் திருச்சபையால் சேர்க்கப்பட்டது என்று கூறி கீழைத் திருச்சபை குறைகூறியது. இதனால் கிறித்தவம் இரண்டாகப் பிளவுபட்டது. "நிசேயா நம்பிக்கை அறிக்கை".
கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை 451 கால்செதோனியா பொதுச்சங்கம்
அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை 500 கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைப் பிரிவுகளும் Lat.: Quicumque vult "அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை".

References[தொகு]

  1. கிறித்தவ நம்பிக்கை அறிக்கைகள் பட்டியல்
  2. The Council of Nicaea: Purposes and Themes நீசேயா பொதுச்சங்கம் வழங்கும் போதனை