பேச்சு:இடர் மேலாண்மை (நிதி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Hedge Financing என்பதை இடர் மேலாண்மை என்பது பொருன்ந்தவில்லையே. சந்தையில் ஏதிர்பாராமல் நிகழக்கூடிய ஏற்ற இறக்கங்களில் இருந்து காப்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் தானே. உங்களுக்கு இடர் என்னும் சொல் பிடித்திருந்தால், இடர்காப்பு, இடர்தணிப்பு, இடர்குறைப்பு, இடர்தடுப்பு,.. என்பது போன்ற ஏதேனும் ஒரு சொல்லை இட்டால் பொருள் பொருத்தமாய்ய் இருக்கும். ஏன் மேலாண்மை? என்ன பொருளில் பயன்படுத்துகின்றீர்கள்? Hedge என்பது வெறும் வேலி, தடுப்பு போன்றதுதான். இங்கே கனடாவிலே, வேலி போல வைத்திருக்கும் புதர்கள், அல்லது எந்தப் புதர்ச்செடியையும் வெட்டும் சிறு இயந்திர வெட்டிக்கு Hedge cutter என்கிறார்கள். இங்கே முதலீடு பற்றிய உறவாட்டங்களிலும், இடர்தடுப்பு, இடர் குறைப்பு என்பது கருத்தல்லவா? ஆகவே வெறும் இடர் என்பதற்கு மாறாக இன்னொரு சிறு சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலாண்மை என்பதை Financial management என்னும் பொருளில் ஆள்கின்றீர்களா? இதனைப் பணவாண்மை, நிதியாண்மை, நிதியோச்சல் (ஓச்சுதல்= செலுத்துதல், சிறப்புற நடத்துதல்) எனலாம். Hedging என்பதை இடர்தணிப்பாண்மை (நிதி), இடர்குறைப்பாண்மை என்பது போல சொல்லலாம்.--செல்வா 17:19, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

தலைப்ப்பை இடர்தணிப்பு மேலாண்மை என மாற்றலாமா? --செல்வா 14:34, 20 ஆகஸ்ட் 2010 (UTC)