பேச்சு:இளையராஜாவின் திருவாசகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளையராஜாவின் திருவாசகம் என்னும் தலைப்பைக்காட்டிலும் 'இளையராஜா இசையமைத்த திருவாசகம்' என்பதே சரியாக இருக்கும்.

விஜயஷண்முகம், தங்கள் கருத்து சரியே.--Kanags 05:13, 29 செப்டெம்பர் 2006 (UTC)
இளையராஜாவின் திருவாசகம் என்பது அவ்விசைத்தொகுப்பின் அதிகாரப்பூர்வப் பெயர் என்று நினைக்கிறேன். அதனால், அது சரியான கட்டுரைத் தலைப்பு தான்--ரவி 07:47, 29 செப்டெம்பர் 2006 (UTC)

அப்படியானால் இளையராஜாவின் திருவாசகம் (குறுந்தட்டு) எனத் தலைப்பு இருக்க வேண்டும். இளையராஜாவின் திருவாசகம் என்ற தலைப்பு தவறான அர்த்தத்தைத் தருகிறது. முருகனின் அப்பா யார் என்று வாரியார் கேட்க சிவாஜி என்றானாம் ஒரு சிறுவன்:)).--Kanags 08:22, 29 செப்டெம்பர் 2006 (UTC)

இளையராஜாவின் திருவாசகம் (இசைத்தொகுப்பு) என்று வேண்டுமானால் பெயர் வைக்கலாம். ஏனென்றால், குறுந்தட்டு தவிர இன்னும் பிற வழிகள் மூலமும் இதைக் கேட்கலாம். பெயரை மாற்ற நீங்கள் கூறிய காரணம் வேடிக்கையாகவும் உண்மையாகவும் உள்ளது :)--ரவி 08:35, 29 செப்டெம்பர் 2006 (UTC)