பேச்சு:கதிரியக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிரியக்கம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கதிரியக்கம் (Radioactivity), கதிரியிக்கவியல் (Radiology) ஆகிய இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும் அல்லவா? ஆங்கில விக்கியிலும் இவ்வாறே உள்ளது. வழிமாற்றை நீக்கலாமா?--இரவி (பேச்சு) 12:06, 7 மார்ச் 2012 (UTC)

நன்றி இரவி, நீக்கியிருக்கிறேன். புதிதாக எழுதுவோம்.--Kanags \உரையாடுக 20:16, 7 மார்ச் 2012 (UTC)
கதிரியக்கம் Radioactivity என்றும் கதிரியக்கவியல் அதைக் குறித்த துறை என்றும் இது இயற்பியலில் இருக்கும் என்றும் நான் எண்ணுகிறேன். எனவே வழிமாற்றில் தவறில்லாததாகவே உணர்கிறேன். குறிப்பிடப்பட்டுள்ள Radiologyக்கு கதிர்கொள் மருத்துவம் அல்லது கதிர்வீச்சு மருத்துவம் என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும். மருத்துவப் பகுப்பில் வரும்.--மணியன் (பேச்சு) 02:57, 8 மார்ச் 2012 (UTC)
Radiologyக்கு ஊடுகதிரியக்கவியல் பொருந்தும் எனக் கருதுகிறேன். கதிர்கொள் மருத்துவம் அல்லது கதிர்வீச்சு மருத்துவம் போன்றவை en:Radiation therapy (radiotherapy) என்பதைக் குறிக்கின்றது. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:57, 9 மார்ச் 2012 (UTC)

ஊடுகதிர் என்பது x-கதிரைக் குறிக்கப் பயன்படுகிறது. Radiologists use an array of imaging technologies (such as x-ray radiography, ultrasound, computed tomography (CT), nuclear medicine, positron emission tomography (PET) and magnetic resonance imaging (MRI) to diagnose or treat diseases என்று ஆங்கில விக்கிப்பீடியா கூறினாலும், இச்சொல்லின் மூலம் ஊடுகதிர் பயன்பாட்டில் இருந்து வருவது தான். எனவே, ஊடுகதிரியல், கதிரியல் (radio + logy = கதிர் + இயல்) என்பது பொருத்தமாக இருக்குமா?

கதிரியக்கம்- கதிர் வீச்சு[தொகு]

முதற்பக்கத்தில் கதிரியக்கவியல் என்ற கட்டுரையை உருவாக்கக் கோரப்பட்டுள்ளது. கதிரியக்கம், கதிர் வீச்சு இரண்டு கட்டுரைகளும் ஒரே கருத்துள்ளவையா. இவற்றை ஒன்றிணைத்து இதனை கதிரியக்கவியல் தலைப்பிற்குள் சேர்ர்க்கலாமா?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:00, 9 மார்ச் 2012 (UTC)

கதிரியக்கம் (radioactivity), கதிர்வீச்சு (radiation), மேலே சுட்டியுள்ள மருத்துவத் துறை சார் கதிரியல் ஆகியவை அனைத்துத் தனித்தனியாக இருப்பதே தகுந்ததாகத் தோன்றுகிறது--இரவி (பேச்சு) 22:09, 9 மார்ச் 2012 (UTC)
ஊடுகதிரியல் இன்னும் சிறப்பாக இருக்கின்றது. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:21, 9 மார்ச் 2012 (UTC)

எல்லா மின்காந்த அலைகளும் எதாவது ஊடகத்தில் ஊடுருவும் பண்புடையனவே.கதிர்ஐசோடோப்பு அல்லது கதிர் ஓரிடத்தான் என்பதுபோல் கதிரியல் என்று குறித்தாலே போதுமானது எனக் கருதுகிறேன்.

கதிரியல்------------------------Radiology

கதிர்மருத்துவம் - ------------radiotherapy

நோயறிகதிரியல்----------------diagnastic radiology

கதிரியல் மருத்துவர்------------radiologist

கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்-radiation oncologist

கதிர்வீச்சு ----------             radiation
கதிரியக்கம் ---------------  radioactivity
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கதிரியக்கம்&oldid=2300618" இலிருந்து மீள்விக்கப்பட்டது