தெருப் பாடகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெருப் பாடகர் என்பவர் தமது பாடல் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள அமைப்பின் கொள்கைகளைக் கொண்டு செல்லும் நோக்கத்திலோ தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாடிக் கொண்டிருப்பவர்களைக் குறிக்கும். இப்பாடகர்களில் சிலர் தங்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக தெருக்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் பாடல்களைப் பாடி பொருள் ஈட்டுவதுமுண்டு.

இந்தியாவில்[தொகு]

பெரும்பாலும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் இத்தொழிலைச் செய்கின்றனர். இவர்கள் தனியாகவோ, தன் துணையுடன் இணைந்தோ, தனது உறவினர்களுடன் இணைந்தோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ பாடுகிறார்கள். சிலர் இசையின்றி பாடலை மட்டும் பாடுவர். பெரும்பாலானோர் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசையுடன் பாடலைப் பாடுகின்றனர். பெரும்பாலும் திரையிசைப் பாடல்களையும், மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பக்திப் பாடல்களையும் பாடுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், தொடர்வண்டிகள் மற்றும் சந்தைகளில் இப்பாடகர்கள் தமது பாடும் தொழிலைச் செய்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெருப்_பாடகர்&oldid=1068934" இலிருந்து மீள்விக்கப்பட்டது