பின்னோக்குப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னோக்குப் பொறியியல் (Reverse Engineering, RE) என்பது ஒரு கருவி, பொருள் அல்லது அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு, இயக்கம், செயல்பாடு ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டு அதன் தொழில்நுட்ப அடிப்படை கருத்துக்களை கண்டுபிடிக்கும் செயலாக்கம் ஆகும். அது, ஏதாவது ஒன்றை (எ.டு. ஒரு இயந்திரம், எலக்ட்ரானிக் கூறு அல்லது மென்பொருள்) எடுத்து, பராமரிப்பில் அதன் செயல்பாட்டினை பகுத்தறிதல் அல்லது அதன் எந்த பூர்வாங்க பாகத்தையும் பயன்படுத்தாமல், அந்த பொருள் செய்யும் அதே வேலையைச்செய்யும் புதிய கருவியை உருவாக்க முயற்சித்தல், என்பதாகும்.

வியாபார அல்லது இராணுவ இலாபத்திற்காக வன்பொருளை ஆய்ந்தறிதலில் இருந்து, பின்னோக்குப் பொறியியல் தோன்றியுள்ளது.[1] பூர்வாங்கப் பொருள் உற்பத்தியில் பின்பற்றப்பட்ட யுக்திகள் தெரியாமலேயே பொருள் உற்பத்திக்கான வழிமுறைகளைக் கண்டறிதல் இதன் நோக்கமாகும். இதே முறைகள், தொழிற்சாலை அல்லது இராணுவம் தவிர மற்ற சட்டபூர்வ மென்பொருள் அமைப்புகளில், தவறான, முழுமைபெறாத அல்லது கிடைக்கப்பெறாத ஆவணங்களுக்குப்பதிலாகப் பயன்படுத்த, தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[2]

தூண்டுதல்[தொகு]

பின்னோக்குப் பொறியியலுக்கான காரணங்கள்:

  • இடைசெயல் தன்மை
  • இழந்த ஆவணம்: ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் ஆவணம் இழக்கப்பட்டதாலோ அல்லது எழுதிவைக்கப்படாததாலோ, உருவாக்கிய நபர் கிடைக்கப்பெறாததாலோ பின்னோக்குப் பொறியியல்முறை செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த சுற்றுகள் பெரும்பாலும் வழக்கழிந்த, உரிமை அமைப்புகளில்லேயே உருவாக்கப்படுகின்றன, அதாவது ஒரு செயமசத்தை புதிய தொழில்நுட்பத்தில் கொண்டமைப்பதற்கான ஒரே வழி, தற்போதுள்ள சிப்பை பின்னோக்குப் பொறியியல் முறைக்கு உட்படுத்தி பின்பு அதனை மறு வடிவமைப்பு செய்வதே ஆகும்.
  • தயாரிப்புப் பகுப்பாய்வு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் எவ்வாறு வேலை செய்கிறது, அதில் என்னென்ன உட்பொருள்கள் உள்ளன என்பனவற்றைக் கண்டறிய மற்றும் சாத்தியமுள்ள காப்புரிமை மீறலைக் கண்டறிய
  • டிஜிட்டல் புதுப்பிப்பு/திருத்தம். ஒரு பொருளின் டிஜிட்டல் பதிப்பை (உ.ம். CAD மாதிரி) இருக்கும் நிலைக்குப்பொருந்துமாறு புதுப்பிக்க
  • பாதுகாப்புத் தணிக்கை
  • இராணுவ அல்லது வியாபார ஒற்றறிதல் பகைவர் அல்லது போட்டியாளர், மூலமுன்மாதிரியைத் திருடி மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் மூலமுன்மாதிரியை அழித்தல் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்.
  • நகல் பாதுகாப்பு, இணைப்புக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கான சூழ்ச்சி ஆகியவற்றைக்களைதல்.
  • உரிமம் பெறாத/அங்கீகரிக்கப்படாத பிரதிகளை உருவாக்குதல்
  • கல்விசார்ந்த/கற்றல் நோக்கங்கள்.
  • ஆர்வம்
  • போட்டி மிக்க தொழில்நுட்ப நுண்ணறிவு (உங்களது போட்டியாளர் என்ன செய்கிறார் என்று சொல்கிறாரோ அதைப்போல் செய்கிறாரா என்பதை புரிந்துகொள்ளுதல்)
  • கற்றல்: மற்றவரின் தவறுகளிலிருந்து கற்றல். மற்றவர் தவறு செய்து திருத்தியதையே செய்யாமல் இருப்பதற்கு.

இயந்திரங்களின் பின்னோக்குப் பொறியியல்[தொகு]

கணினி சார்ந்த அமைப்புகள் (CAD)பிரசித்தி பெற்றுள்ளதால், CAD, CAM, CAE அல்லது மற்ற மென்பொருளில் 3Dல் பயன்படுத்த, தற்போதுள்ள 3Dன் பாகத்தின் உண்மையான மாதிரியை உருவாக்க பின்னோக்குப் பொறியியல் ஒரு ஒப்பேற்றும் முறையாக உள்ளது.[3] ஒரு பொருளை அளந்து, பின்பு அதனை 3D மாதிரியாக மாற்றி அமைக்கும் பணியை பின்னோக்குப் பொறியியல் முறை மேற்கொள்ளுகிறது. CMMகள், லேசர் ஸ்கேனர்கள், கட்டமைப்புடன் கூடிய ஒளி டிஜிட்டலாக்கிகள் அல்லது கணினியால் இயங்கும் இட இயல்பு விளக்கம் போன்ற 3D ஸ்கேனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜடப்பொருளை அளக்கலாம். பொதுவாக, அளந்தறியப்பட்ட விவரம் தெளிவற்ற குறிப்பாக இருந்து, இட விவரங்களை முழுமையக அளிக்காததால், அவ்விவரம் மேலும் பயன்படும் வடிவில் உருவாக்கப்பட்டு முக்கோண முகப்புள்ளி வலை, NURBS பரப்புத் தொகுப்பு அல்லது ஒரு CAD மாதிரி போன்ற மாதிரிகளாகின்றன.

பின்னோக்குப் பொறியியல் முறை, தற்போதுள்ள ஜடப்பொருளின் அமைப்பினை கணினி டிஜிட்டல் சூழலில் கொண்டுவருதல், உற்பத்திப் பொருள்களின் 3D எண் ஆவணங்களை உருவாக்குதல் அல்லது போட்டியாளார்களின் உற்பத்திப் பொருள்களைப்பற்றி தெரிந்துகொள்ளுதல் ஆகிய வணிகச்செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பு எவ்வாறு வேலை செய்கிறது, அது எந்த வேலையைச் செய்கிறது, அதில் என்னென்ன உட்பொருள்கள் உள்ளன ஆகியவற்றை பகுத்தறிதலிலும் விலையை மதிப்பீடு செய்யவும் சாத்தியமுள்ள காப்புரிமை சட்டமீறிய செயல்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.

இதனோடு தொடர்புடைய பயன்மதிப்புப் பொறியியலும் வணிகத்தில் பயன்படுத்தப்படுகிறது. அது தயாரிப்புப் பகுத்தறிதலை மேற்கொள்ளுகிறது. ஆனால் விலை குறைப்பதற்கான வாய்ப்புகளைக் காண்பதே அதன் நோக்கமாகும்.

மென்பொருளின் பின்னோக்குப் பொறியியல்[தொகு]

மென்பொருளின் பின்னோக்குப் பொறியியல் முறை என்பது வெவ்வேறான மக்களுக்கு வெவ்வேறான விஷயங்களாகும். பல்வேறு பயன்பாடுகளைப் பற்றி ஆய்ந்து தாவர/விலங்குகளின் அறிவியல்பூர்வமான பாகுபாட்டினை வரையறை செய்து எழுத சிக்கோப்ஸ்கை, க்ராஸ் ஆகியோரைத்தூண்டியது. அவர்கள் எழுதிவைத்திருப்பதாவது, "பின்னோக்குப் பொறியியல் முறை என்பது மறைபொருளாக உள்ள ஒன்றின் பிரதியாக உருவாக்க, ஒரு பொருளின் தொகுப்பிணை பகுத்தறியும் முறையாகும்."[4] அது வளர்நிலைவாயிலாக பின்னோக்கிச் செல்லுதல் என்பதையும் காணலாம்.[5] இந்த மாதிரியில், மரபுசார் நீர்வீழ்ச்சி மாதிரியின் பின்னோக்கு/தலைகீழ் செயல்போல உட்படுத்தும் கட்டத்தின் வெளிப்பாடு (கருத்து வடிவில்) பகுப்பு கட்டத்திற்கு பின்னோக்கி இயக்கப்படுகிறது. பின்னோக்குப் பொறியியல் முறை என்பது கூர்ந்தாராய்வு முறையே. கருத்திற்கொள்ளப்பட்டுள்ள மென்பொருள் அமைப்பு மாற்றியமைக்கப்படுவதில்லை. (அதை மறுபொறியியலாக்கம் செய்யும்) உரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் மென்பொருளால் இயங்கும் அமைப்புகளின் பின்னோக்குப் பொறியியல் முறை, மீள்பொறியியல் ஆகியவற்றைக் தீர்மனிக்க மென்பொருள் சிதைவுபெறா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு முக்கிய வகைகள், பின்னோக்குப் பொறியியல் முறையில் தோன்றி செயல்பாட்டில் உள்ளன. முதலாவதாக மென்பொருளுக்கான மூலக்குறியீடு ஏற்கனவே உள்ளது. ஆனால் திட்டத்தின் மேல் மட்ட குணாதிசயங்கள் தரமற்ற ஆவணங்களாக உள்ளன அல்லது மேற்கொண்டு பயன்பெறா ஆவணங்களாக உள்ளன. இரண்டாவதாக, மென்பொருளுக்கான மூலக் குறியீடு கிடைக்கப்பெறாமல் மென்பொருளுக்கான ஏதேனும் ஒரு மூலக் குறியீட்டைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளுதல் பின்னோக்குப் பொறியியல் முறையாகக் கருதப்படுகின்றன. இரண்டாம் முறையின் பயன்பாடு பலரிடமும் பிரபலமாக உள்ளது. மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறை பதிப்புரிமை மீறலைத் தடுக்க, தூய அறை அமைப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

சார்ந்த குறிப்பாக, பொதுவாக மென்பொருள் பொறியியலில் கருப்புப் பெட்டி ஆய்வு பின்னோக்குப் பொறியியல் முறை மிகுதியாக உள்ளது. ஆய்வர் வழக்கமாக API பெற்றிருப்பர். ஆனால் அவர்களது இலக்கு, தன்னம்பிக்கையற்று உற்பத்திப் பொருள்களை வெளியிலிருந்து அனுப்புவதன்மூலம் ஏற்படும் கணினி குறைகள், பதிவுறா ஆவணங்களின் தன்மைகள் ஆகியவற்றைக் கண்டறிதலாகும்.

பின்னோக்குப் பொறியியல் முறையின் மற்ற நோக்கங்களில் பாதுகாப்புத் தணிக்கை, நகல் பாதுகாப்புக் களைதல் ("க்ராக்கிங்"), நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், இயந்திர மேலாண்மைத்திட்டம் போன்ற உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், வீட்டில் பழுதுபார்த்தல் அல்லது பழையவற்றை பதித்தல், சில கிராபிக் நுண்தகடுகளைப் போன்ற விலை மலிவான ஊனமடைந்த வன்பொருளின் கூடுதல் பண்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

சான்றுபெற்ற பின்னோக்குப் பொறியியல் முறை பகுப்பாளர் (CREA), என்பது IACRB ஆல் பின்னோக்குப் பொறியியல் முறை மென்பொருளில் திறன் உடையவர் என அளிக்கப்பட்ட சான்றாகும்.

பைனரி மென்பொருள்[தொகு]

இம்முறை பின்னோக்குக் குறியீட்டுப் பொறியியல் அல்லது RCE என குறிப்பிடப்படுகிறது.[6] எடுத்துக்காட்டாக, Java பணித்தளத்திற்கான பைனரிகளைப் தொகுப்புநீக்கத்தை Jad ஐப் பயன்படுத்திச் செய்யலாம். பின்னோக்குப் பொறியியல் முறையில் புகழ்பெற்ற ஒன்று, பல ஆண்டுகளாக கணினி வன்பொருள் உலகில் மேலோங்கியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த IBM PC இணக்கத்தன்மை கொண்ட தொழிற்சாலையை துவங்கிய, முதல் PC BIOS ன் IBM அல்லாத செயல்பாடு ஆகும். "பின்னோக்குப் பொறியியல் முறையின் சவால்" என்பதைக் குறிக்கும் CORE என்பதே பின்னோக்குப் பொறியியல் முறை மென்பொருள் குழுவினரின் மகிழ்வதற்கான கண்டுபிடிப்புக்கான ஓர் உதாரணம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டம் (DMCA) சில கோப்பு அமைப்பு, மரபு முறை உள்வாங்கும் திறனை நோக்கமாகக் கொண்டுள்ள பின்னோக்குப் பொறியியல் முறையின் சில செயல்பாடுகளை, ஏமாற்றுத்தடுப்பிலிருந்து விலக்களிக்கிறது. ஆனால், இணைப்புக்கன்றி, உபயோகத்திற்காக ஏமாற்றுக்கட்டுப்பாடுகளை ஏற்கலாம் என்பதால், முக்கியமான வழக்குகளில் நீதியரசர்கள் இச்சட்டத்தை புறக்கணித்துள்ளனர்.[7] ஏமாற்றுக் கட்டுப்பாடுகளைத் தவிர, மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறை, பதிப்புரிமைச் சட்டத்தில் நடுநிலை உபயோகத்திற்கான தவிர்ப்பால், அமெரிக்காவில் பாதுகாக்கப்படுகிறது.[8] Windows இல்லாத கணினி அமைப்புகள் பின்பற்ற, Windows கோப்புகள் பகிர்ந்து செயல்படத்தேவையான விவரங்கள் வெளியிடப்படாததால், Windows இல்லாத கணினி அமைப்புகள், Windows உள்ள கணினி அமைப்புகளின் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் உருவாக்கப்பட்ட சாம்பா மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறைக்கான சிறந்த உதாரணமாகும்.[9] வைன் திட்டம், Windows APIக்காக இதே வேலையைச் செய்கிறது. OpenOffice.org Microsoft Office கோப்பு அமைப்புகளுக்காகப் பணிசெய்யும் ஒரு பிரிவினர். GPL திறந்தவெளி-கருத்து பங்கேற்பில், தூய்மையான பின்னோக்குப் பொறியியல் முறையில் விண்டோஸ் செயலாற்ற எழுதப்பட்ட மென்பொருள் மற்றும் சக்தியைப் பயன்படுத்தி, NTபிரிவின் Windows OSகளுடன் உள்ள பைனரிகளை (ABI மற்றும் API) அளிக்க முயற்சிப்பதால், ReactOS திட்டம் அதன் இலக்குகளில் அதிக ஆர்வமாக உள்ளது.

பைனரி மென்பொருள் நுட்பங்கள்[தொகு]

மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் பல்வேறுமுறைகளில் நிறைவேற்றப்படலாம். மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறையின் மூன்று முக்கியப்பிரிவுகள்:

  1. எடுத்துக்காட்டுக்கு பஸ் அல்லது கணினி பஸ் அல்லது கணினி நெட்வொர்க் இணைப்பை அணுகுவதற்கும் போக்குவரத்து தரவுகளைத் தெரியப்படுத்துவதற்குமான பஸ் பகுப்பான்கள், பேக்கட் ஸ்னிஃபெர்கள் ஆகியவை தொடர்புடைய தகவல்களை அவதானித்து பகுப்பாய்வு செய்தல் என்பது நெறிமுறை பின்னோக்குப் பொறியியலில் மிகவும் பிரபலமான உள்ளது. பஸ் அல்லது நெட்வொர்க்கின் குணாதிசியத்தைக் குறைப்பதற்கு அதைப் போன்றே தனித்தியங்கக்கூடிய செயல்படுத்தலை உருவாக்க அவற்றைப் பகுப்பாய்வு செய்யலாம். இது குறிப்பாக பின்னோக்குப் பொறியியல் முறை சாதன இயக்கிகளுக்கு உபயோகமாக உள்ளன. சிலநேரங்களில், JTAG போர்ட்கள் அல்லது அவற்றின் பிழைநீக்க அம்சங்கள் போன்ற, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்புகளால், உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் துணைபுரியப்படுகிறது. SoftICE போன்ற, கீழ்மட்ட கணினி பிழைநீக்கிகள், Microsoft Windows இல் பிரபலமடைந்துள்ளன.
  2. பிரிப்பான்களைப் பயன்படுத்தி பிரித்தல் என்பது, இயந்திரமொழி நினைவூட்டு வாசகத்தின் உதவி மூலம் மட்டும், திட்டத்தின் கச்சா (புதிய) இயந்திரமொழி படித்து புரிந்துகொள்வதாகும். இது எந்த கணினி திட்டத்திலும் வேலை செய்கிறது. ஆனால் குறிப்பாக இயந்திர குறியீட்டைப் பயன்படுத்தாதவற்றிற்கு சிறிது கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும். குறிப்பாக, இடைசெயல்தன்மை கொண்ட பிரிப்பான் ஒரு பிரபலமான சாதனமாகும்.
  3. தொகுப்புநீக்கியீன் மூலம் தொகுப்பு நீக்கல் என்பது, பல முடிவுகளைக்கொண்டு, இயந்திரக்குறியீடு அல்லது சிறு துணுக்குத் தகவல் குறியீடு மூலம் மட்டும் கிடக்கும் ஒரு மேல்மட்ட மொழியில் உள்ள திட்டத்தின் மூலக்குறியீட்டினை மீள உருவாக்கும் முறையாகும்.

மூலக் குறியீடு[தொகு]

பல UML கருவிகள், UML வரைபடங்களை பின்னோக்குப் பொறியியல் முறையாக உருவாக்க, மூலக்குறியீட்டினை இறக்குமதி செய்யும் முறையைக்குறிக்கின்றன. UML கருவிகள் பட்டியலைக் காண்க.

பின்னோக்குப் பொறியியல் of ஒருங்கிணைந்த சுற்றுகள்/ஸ்மார்ட் கார்டுகள்[தொகு]

பின்னோக்குப் பொறியியல் என்பது ஒரு ஸ்மார்ட் கார்டைப் பகுப்பாய்வு செய்தலின் பரவலான மற்றும் அழிவு ரீதியான வடிவமாகும். தாக்குதல் நடத்துபவர் ஸ்மார்ட் கார்டின் ஒவ்வொரு அடுக்காக அறிந்துகொள்கிறார், பின்னர் ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியால் படங்களை எடுத்துக்கொள்கிறார். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு ஸ்மார்ட் கார்டின் முழு வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளைத் தெரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தும் எவ்வாறு செயல்படுகின்றன என அறிவதற்கு அவற்றை சரியான வரிசையில் கொண்டமைப்பதே தாக்குதல் நடத்துபவருக்கான பெரிய சிக்கல் ஆகும். பொறியாளர்கள், உதாரணமாக, பஸ்ஸ்க்ராம்ப்லிங் போன்ற முறைகளின் மூலமாக நினைவுப்பகுதிகளை கலப்பதன் மூலம் திறவுகோல்களையும் முக்கிய செயல்பாடுகளையும் மறைக்க முயற்சிக்கின்றனர்.[10][11] சில சந்தர்ப்பங்களில், ஸ்மார்ட் கார்டு இயக்கத்தில் இருக்கும்போதே கூட மின்னழுத்தங்களை அளவிட ஒரு சோதனை அம்சத்தை இணைப்பதும் சாத்தியமே. இந்த தாக்குதலைக் கண்டறியவும் தடுக்கவும் பொறியியலாளர்கள் சென்சார்களைப் பயன்படுத்துகின்றனர்.[12] பணத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டை சிதைப்பது மிகவும் கடினமாகும், மேலும் அந்த தொழில்நுட்ப உபகரணம் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். கூடுதலாக, நிழல் கணக்குகள் போன்ற பிற பாதுகாப்பு இயங்கமைப்புகளின் காரணமாக இதன் நன்மை குறைவாகவே உள்ளது.

இராணுவப் பயன்பாடுகளுக்கு பின்னோக்குப் பொறியியல்[தொகு]

இராணுவ வீரர்களால் வழக்கமாக அல்லது நுண்ணறிவு நடவடிக்கைகளின் மூலமாக போர்க்களங்களில் கைப்பற்றப்பட்ட பிற நாடுகளின் தொழில்நுட்பங்கள், சாதனங்கள் அல்லது தகவல்கள் போன்றவற்றை நகலெடுக்க பின்னோக்குப் பொறியியல் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போரின் போது அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. WWII மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் போதான நன்கறியப்பட்ட எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:

  • ஜெர்ரி கேன்: பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகள், ஜெர்மானியர்கள் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் அமைந்திருந்த கேசலின் கேன்களைக் கவனித்தனர். அந்த கேன்களின் நகல்களை பொறியியலாக்கம் செய்தனர். இந்த கேன்கள் பிரபலமாக "ஜெர்ரி கேன்கள்" என அழைக்கப்படும்.
  • டுபோலெவ் Tu-4: மூன்று அமெரிக்க B-29 குண்டு வீச்சு விமானங்கள் ஜப்பான் மீதான தாக்குதலின் போது USSR இல் தரையிறங்க வேண்டியதாயிற்று. அது போன்ற திட்ட அம்சம் கொண்ட குண்டு வீச்சு விமானத்தைக் கொண்டிருக்காத சோவியத்துகள் B-29 ஐ நகலெடுக்க முடிவெடுத்தனர். சில ஆண்டுகளுக்குள், அவர்கள் அதன் கிட்டத்தட்ட நெருங்கிய முழுமையான நகலான Tu-4 ஐ உருவாக்கினர்.
  • V2 ராக்கெட்: V2 க்கான தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை மேற்குக் கூட்டணி போரின் முடிவில் கைப்பற்றியது. சோவியத் மற்றும் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய பொறியியலாளர்கள், அந்த R-1 ராக்கெட்டின் மற்றொரு நகலை உருவாக்குவதற்காக கைப்பற்றப்பட்ட வன்பொருளைக் கொண்டு தொழில்நுட்ப ஆவணங்களையும் திட்டங்களையும் மீண்டும் உருவாக்க வலியுறுத்தப்பட்டனர், இதனால் R-7 உருவாகக் காரணமாக அமைந்த போருக்குப் பிந்தைய சோவியத் ராக்கெட் திட்டத்தையும் விண்வெளி பந்தயத்தையும் தொடங்கியது.
  • K-13/R-3S ஏவுகணை (NATO அறிக்கை ரீதியான பெயர் AA-2 'Atoll ) ஆனது AIM-9 சைடுவைண்டரின் பின்னோக்குப் பொறியியலாக்கம் செய்யப்பட்ட ஒரு நகலாகும், இதை தைவானிஸ் AIM-9B ஒரு சைனீஸ் MiG-17 ஐ மோதி வெடிக்காமல் போனதை அடுத்து உருவாக்க முடிந்தது; அதிசயமாக அந்த ஏவுகணை காற்றிலேயே சிறிது நேரம் தொங்கிக்கொண்டிருந்தது, ஆனால் விமானி தரைக்கு வந்துவிடுவார், இதை ரஷிய விஞ்ஞானிகள் ஏவுகணை உருவாக்கத்தில் ஒரு பல்கலைக்கழகப் படிப்பு என விவரிப்பர்.
  • BGM-71 TOW ஏவுகணை: 1975ம் ஆண்டு மே மாத்தில், TOW மற்றும் மாவேரிக் ஏவுகணைகளை இணைந்து உருவாக்குவது தொடர்பான ஈரான் மற்றும் ஹையஸ் மிஸைல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கிடையேயான பேரங்கள் விலையமைப்புகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தள்ளிப்போடப்பட்டன, அதையடுத்த 1979 புரட்சி அது போன்ற அனைத்து இணை உருவாக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஈரான் அந்த ஏவுகணையினை பின்னர் வெற்றிகரமாக பின்னோக்குப் பொறியியலாக்கம் செய்தது, தற்போது டூஃபேன் எனும் தனது சொந்த நகல்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
  • போர் விமானங்கள் முதல் ஏவுகணைகள் மற்றும் HMMWV கார்கள் வரையிலான மேற்கத்திய மற்றும் ரஷிய வன்பொருள் பலவற்றை சீனா பின்னோக்கு உருவாக்கம் செய்துள்ளது.

சட்டப்பூர்வமாக்கம்[தொகு]

அமெரிக்காவிலும் பிற பல நாடுகளிலும் ஒரு விமானம் அல்லது செயலாக்கம் வர்த்தக இரகசியங்களால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கூட விமானம் அல்லது செயலாக்கத்தின் பின்னோக்குப் பொறியியலாக்கம் சட்டப்பூர்வமான அனுமதியுடன் செய்யப்படும் வரை மட்டுமே சட்டத்திற்குட்பட்டதாகும். மற்றொருபுறம் காப்புரிமைகளைப் பொறுத்த வரை ஒரு கண்டுபிடிப்பின் பொதுமக்களிடையேயான வெளிப்படுத்தல் அவசியமாகிறது, மேலும் இதனால் காப்புரிமை பெறப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்வதற்கு அவற்றை பின்னோக்குப் பொறியியலாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஒரு போட்டியாளரின் தயாரிப்பில் காப்புரிமை மீறல்கள் அல்லது பதிப்புரிமை மீறல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவதே பின்னோக்குப் பொறியியலாளர்களின் ஒரு பொதுவான நோக்கமாகும்.

(எடுத்துக்காட்டுக்கு, ஆவணமாக்கப்படாத கோப்பு வடிவமைப்பு அல்லது ஆவணமாக்கப்படாத வன்பொருள் பாகங்களை ஆதரித்தல் போன்ற) இடைசெயல்தன்மை போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட பின்னோக்குப் பொறியியல் மென்பொருள் அல்லது வன்பொருள் பெரும்பாலும் சட்டப்புர்வமானதாகவே இருப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் காப்புரிமையாளர்கள் ஏதேனும் காரணத்திற்காக இதைப் போட்டியாக எடுத்து அவர்களின் தயாரிப்பு சார்ந்த பின்னோக்குப் பொறியியலாக்கம் ஏதேனும் அதில் உள்ளதா என கண்டறிய முயற்சிக்கின்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. இ. ஜே. சிக்கோஸ்ஃப்ஸ்கி அண்ட் ஜே. எச். க்ராஸ், II, “ரிவர்ஸ் எஞ்சினீயரிங் அண்ட் டிசைன் ரெகவரி: அ டேக்சானமி,” IEEE சாஃப்ட்வேர், தொகுப்பு. 7, எண். 1, pp. 13-17, ஜனவரி 1990.
  2. அ சர்வே ஆஃப் ரிப்வர்ஸ் எஞ்சினீயரிங் அண்ட் ப்ரோக்ராம் காம்ப்ரஹென்ஷன். மைக்கேல் எல். நெல்சன், ஏப்ரல் 19, 1996, ODU CS 551 - சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங் சர்வே
  3. டி. வேரடே, ஆர். ஆர். மார்ட்டின், ஜே. காக்ஸ், ரிவர்ஸ் எஞ்சினீயரிங் ஆஃப் ஜியாமெட்ரிக் மாடல்ஸ்—அன் இண்ட்ரடக்ஷன், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் 29 (4), 255-268, 1997.
  4. Chikofsky, E.J.; J.H. Cross II (January 1990). "Reverse Engineering and Design Recovery: A Taxonomy in IEEE Software". IEEE Computer Society: 13–17. 
  5. Warden, R. (1992). Software Reuse and Reverse Engineering in Practice. London, England: Chapman & Hall. பக். 283–305. 
  6. Chuvakin, Anton; Cyrus Peikari (January 2004). Security Warrior (1st ). O'Reilly. 
  7. "US Code: Title 17,1201. Circumvention of copyright protection systems". பார்க்கப்பட்ட நாள் 2006-05-25.
  8. See Pamela Samuelson and Suzanne Scotchmer, "த லா அண்ட் எக்கனாமிக்ஸ் ஆஃப் ரிவர்ஸ் எஞ்சினீயரிங்", 111 யேல் லா ஜர்னல் 1575-1663 (மே 2002).
  9. "Samba: An Introduction". 2001-11-27. பார்க்கப்பட்ட நாள் 2009-05-07.
  10. வொல்ஃப்கேங்க் ரேங்கில், வொல்ஃப்கேங்க் எஃபிங், ஸ்மார்ட் கார்டு ஹேண்ட்புக் (2004)
  11. டி. வெல்ஸ்: ஸ்மார்ட் கார்ட்ஸ் அஸ் மெத்தட்ஸ் ஃபார் பேமெண்ட் (2008), செமினார் ITS-செக்யூரிட்டி ரூர்-யுனிவெர்சிட்டி போக்கம், "http://www.crypto.rub.de/its_seminar_ws0708.html[தொடர்பிழந்த இணைப்பு]"
  12. டேவிட் சி. மஸ்கர்: ப்ரொட்டக்டிங் & எக்ஸ்ப்ளாயிட்டிங் இண்டெலெக்ச்சுவல் ப்ராபெர்ட்டி இன் எலக்ட்ரானிக்ஸ், IBC கான்ஃபரன்சஸ், 10 ஜூன் 1998

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னோக்குப்_பொறியியல்&oldid=3925388" இலிருந்து மீள்விக்கப்பட்டது