நாவல் குறூப்வைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறூப்வைஸ்
உருவாக்குனர்நாவல்
அண்மை வெளியீடு7.0 (SP3) / மார்ச் 14, 2008
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைகூட்டிணைவு மென்பொருள்
உரிமம்Proprietary
இணையத்தளம்நாவல் குறூப்வைஸ்

நாவல் குறூப்வைஸ் நாவல் நிறுவனத்தில் பல் இயங்குதள மின்னஞ்சல், நாட்காட்டி, நிகழ்நிலைத்தூதுவன் மற்றும் ஆவணங்களைக் கையாளக் கூடிய கூட்டிணைந்து செயற்படும் மென்பொருளாகும்.

சுருக்கம்[தொகு]

குறூப்வைஸ் பல சேவர் (வழங்கி) மற்றும் கிளையண்ட் (வாங்கி) பல இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. சேவரின் இயங்குதளங்கள் நாவல் நெட்வேர், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் கிளையண்ட் விண்டோஸ் இயங்குதளத்திலும் மற்றும் சற்றே வசதி குறைவான ஜாவா இயங்குதளத்தினூடக இயங்கக் கூடிய லினக்ஸ் மற்றும் மாக்ஓஸ் X இயங்கக்கூடியது. 2007 ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் போன்சாய் என்கின்ற பதிப்பில் பாரியமாற்றங்கள் எதிர்பார்க்கபடுகின்றன [1]. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மென்பொருளுடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய

குறூப் வைஸ் வெப்பக்ஸஸ் உலாவிகளைப் போன்றே இணையத்தை அணுக முடிகின்றது. இவை கணினி உலாவிகள் மாத்திரம் அன்றி கையடக்கக் கருவிகள்(Handheld/PDA) மூலமாகவும் மின்னஞ்சலை அணுகலாம்.

குறூப்வைஸ் இதன் 6.5 ஆவது பதிப்பில் இருந்து நிகழ்நிலைத் தூவனை உள்ளடக்கியுள்ளது.

இதன் 7 வது பதிப்பானது சுசேலினக்ஸ் எண்டபிரைஸ் சர்வர் பதிப்புடன் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பானது குறூப்வைஸ் மென்பொருளை மேலதிக செலவு ஏதும் இன்றி இயக்கப்பயன்படுத்தலாம்.

வரலாறு[தொகு]

குறூப்வைஸ் 1986 இல் வேர்ட் பேபெக்ட் இன் ஓர் நீட்சியாகவே அறிமுகம் ஆனது. அச்சமயத்தில் இது வேர்ட் பேபெக்ட் லைபரரி 1.0 என்றழைக்கப்பட்ட இது டேட்ட ஜெனரல் மற்றும் அமிகா இயங்குதளங்களில் இயங்கியது.

எதிர்காலம்[தொகு]

மைக்ரோசாப்ட் இன் எக்ஸ்சேஞ் சர்வருடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாவல் பல வருடங்களாகத் தொடர்ச்சியாக நாவல் குறூப்வைஸ் மென்பொருளை விருத்திசெய்ய உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. போன்சாய் லினக்ஸ் இயங்குதளத்தில் பரணிடப்பட்டது 2009-02-02 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது 5 பெப்ரவரி 2007 (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவல்_குறூப்வைஸ்&oldid=3370284" இலிருந்து மீள்விக்கப்பட்டது