பேச்சு:மு. கா. சித்திலெப்பை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. கா. சித்திலெப்பை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையின் நடை கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாமல் இருக்கின்றது; மேலும், ஏதோ ஒரு பத்திரிகையிலிருந்து வெட்டி ஒட்டியுள்ளது போல் தெரிகின்றது. இது விக்கிக் கொள்கைக்கு ஒவ்வாதது. --பரிதிமதி 18:06, 4 மார்ச் 2010 (UTC)

முரண்பாடு[தொகு]

//ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலான அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியவர்.// என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

ஆனால் இங்கோ : அசன்பே சரித்திரம்

இவ்வாறு உள்ளது:

//அசன்பே சரித்திரம் என்பது 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது. இதை இலங்கை எழுத்தாளர் முகம்மது காசீம் சித்தி லெப்பை என்பவர் எழுதினார்.//
அறிந்தவர்கள் முரண்பாடற்றவாறு மாற்றவேண்டுகின்றேன். --சி. செந்தி 00:26, 18 பெப்ரவரி 2011 (UTC)
ஈழத்தின் முதல் நாவல், தமிழின் இரண்டாவது நாவல், முரண்பாடு உள்ளது போல் தெரியவில்லையே. --Natkeeran 00:27, 18 பெப்ரவரி 2011 (UTC)
அசன்பே சரித்திரம் - எழுதப்பட்டுள்ளது ஈழத்தில் என்று நோக்கினால் முரண்பாடாகும்; உலகத்தில், தமிழில் என்று நோக்கினால் அந்த உரையே பொய்க்கின்றது.
  • தகவலுக்கு: கி.பி.1879-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழில் எழுந்த முதல் புதினமாகும். இரண்டாவது தமிழ்ப் புதினம் பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் என்பதாகும் (கி.பி.1896). மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது ; பெண் கல்வியை

வலியுறுத்துவது. ஆதாரம்: http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031113.htm

வாழ்வியற் களஞ்சியத்தில் அசன்பே சரித்திரமே இரண்டாவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டு ஆண்டைக் கண்டறிந்தால் உதவும். --Natkeeran 01:12, 18 பெப்ரவரி 2011 (UTC)
  • தமிழில் வெளியான புதினங்களைக் கால வரிசைப்படுத்துவதில் பெரிய குழப்பம் நிலவுகிறது. கீழ்வரும் இணைப்பைக் காண்க:

Modern Indian Literature, An Anthology, Volume 1 Surveys and Poems by K. M. George (Jun 1, 1992), pp. 382-383. --பவுல்-Paul 02:14, 18 பெப்ரவரி 2011 (UTC)