பேச்சு:மெய்கோள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது உறுதி செய்யப்படாத தலைப்பு. Axiom என்பதற்கு தமிழில் பற்பலவாறு கூறலாம். எது சிறந்ததென்று தேர்ந்து கொள்ள வேண்டும். மெய்யெனக் கொள்ளும் முதற்கோள்கள் என்பதே பொருள். அடிமெய்மை, அடிமெய்க்கோள், மெய்கோள், மெய்க்கோள், மெய்யாணி, ஆணிமெய் (ஆணி என்பது refernce against which others are measured/derived என்று பொருள். ஆணிப்பொன் என்றால் பொன்னை மதிப்பிடும் முதல்தரப் பொன். பேச்சு வழக்கிலும் ஆணித்தரமாகக் கூறினார்/பேசினார் என்றால் authoritatively, with impeccable reference என்பன போன்ற பொருள் தரும். ஆணி என்பது முதன்மையான, மற்றவை ஒப்பிடப் பயன்படும் முதல் என்னும் பொருள் கொண்டது. எனவே ஆணிமெய் என்பது Axiom தான். முதலுண்மை எனலாம். முதற்கோள் உண்மை, தன்னுண்மை என்று பல சொற்களால் குறிக்கலாம். முதற்கோள் எனலாம், ஆனால் assumption என்பதற்கும் முதற்கோள் என்கிறோம். Assumption என்பது பின்னர் ஏற்க வொண்ணாதது என்று களையலாம், ஆனால், Axiom என்பது அப்படிப்பட்டதல்ல. சில கருத்துகளை இப்போதைக்கு இங்கு இட்டிருக்கின்றேன். நாளை வந்து மீள்பார்வை இடுகின்றேன்.--செல்வா 06:20, 17 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெய்கோள்&oldid=318790" இலிருந்து மீள்விக்கப்பட்டது