உடுநுவரை

ஆள்கூறுகள்: 7°13′35″N 80°34′44″E / 7.22639°N 80.57889°E / 7.22639; 80.57889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுநுவரை

உடுநுவரை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°13′35″N 80°34′44″E / 7.2264°N 80.5789°E / 7.2264; 80.5789
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
66.8  ச.கி.மீ

 - 568 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - மக்களடர்த்தி
98879

 - 1480/ச.கி.மீ
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20620
 - +9481
 - CP

உடுநுவரை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். கெலிஒயா இப்பிரிவில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

உடுநுவரை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 568 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்[தொகு]

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 98879 72297 1382 1737 23093 134 236
கிராமம் 97858 72040 1357 1003 23088 134 79
தோட்டப்புறம் 1021 257 25 734 5 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 98879 71736 2373 23630 713 402 25
கிராமம் 97858 71467 1670 23625 701 370 25
தோட்டப்புறம் 1021 269 703 5 12 32 0

கைத்தொழில்[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுநுவரை&oldid=1761804" இலிருந்து மீள்விக்கப்பட்டது