பேச்சு:சிவப்புக் காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவக்குமார், இக்கட்டுரையின் தலைப்பை, சிவப்புக் காடு அல்லது சேக்காடு என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், செங்காடு என்பது செம்மையான, செழிப்பான காடு என்னும் பொருள் தரவல்லது. சிவப்பு, செக்கர், சே (சேப்பு = சிவப்பு; சேதாம்பல் = சிவப்பாம்பல்) தோம்பு என்றாலும் சிவப்பு. சேப்பு என்னும் சொல் இன்றும் பல குடும்பங்களில் பேச்சு வழ்க்கில் உள்ள சொல். --செல்வா 17:46, 11 டிசம்பர் 2008 (UTC)

செம்மண் உடைய காடுகளையும் செங்காடு என்பர். கட்டுரையின் தலைப்பை மாற்றினால் நலம். --குறும்பன் 19:58, 12 டிசம்பர் 2008 (UTC)

சிவப்புக் காடு என்பது சட்டெனப் புரியுமாறு எளிதாக இருப்பதால் சிவப்புக்காடு என மாற்றி விடுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 20:04, 12 டிசம்பர் 2008 (UTC)
செங்காடு என்பது வழக்கத்தில் இருக்கும் ஒரு தமிழ் சொல். கூகிளில் போட்டுப் பாருங்கள். சிவப்புக் காடு செயற்கையாய் இருக்கிறது, நேரடி மொழி பெயர்ப்பு. --Natkeeran 20:27, 12 டிசம்பர் 2008 (UTC)
தமிழ்நாட்டில் செங்காடு என்ற பெயரில் ஒரு கிராமமே உள்ளது போல் தெரிகிறது. அது பற்றிய கட்டுரை வேண்டும்.--Kanags \பேச்சு 21:56, 12 டிசம்பர் 2008 (UTC)
ஒரு சில தமிழ்திரைப் பாடல்களிலும் செங்காடு இடம்பெற்றுள்ளது. செங்களம், செங்கோட்டை என்றும் சொற்கள் உண்டு. --Natkeeran 22:12, 12 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவப்புக்_காடு&oldid=317560" இலிருந்து மீள்விக்கப்பட்டது