விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 29, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிமன வெளிப்பாட்டுவாதம் (Surrealism) என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் நம்பினர். இதை மனிதனது அடிமனத்தின் கற்பனா சக்தியைச் செயற்படுத்துவதன் மூலம் அடைய முடியும் என்று அடிமன வெளிப்பாட்டுவாதம் வலியுறுத்தியது. இயல்புநிலையிலும் மெய்மையான இந்த நிலை, தனிமனித, பண்பாட்டு மற்றும் சமூகப் புரட்சியையும், கட்டற்ற வாழ்க்கையையும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் என்றும் இக் கொள்கையினர் நம்பினர். இந்தக் கருத்துருவை முதன் முதலில் முன்வைத்த அண்ட்ரே பிரெட்டன் (André Breton) என்பவர், இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்ட உண்மை அழகியல் சார்ந்தது என்றார். அடிமன வெளிப்பாடு என்ற இந்தக் கருத்துருவைப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் பயன் படுத்தியபோது இது அடிமன வெளிப்பாட்டுவாத இயக்கம் எனப்பட்டது.

மேலும் சிறப்புப் படங்கள்...