பேச்சு:இணக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"இணக்கி" என்கிற சொல் தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்டது.

- ராஜ் (தொழில்நுட்பம்) 9-4-2010

பரிந்துரைகள்[தொகு]

modulator - பண்பேற்றி ;
demodulator - பண்பிறக்கி ;
modem - பண்பிணக்கி
AC Adapter - மாறுதிசை மின்னழுத்த இணக்கி (மா.மி இணக்கி).

இவை எனது பரிந்துரைகள் . --இராஜ்குமார் 08:15, 9 ஏப்ரல் 2010 (UTC)

ஆங்கிலத்திலும் MODEMக்கு மாறாக Modem என்கிற சொல் வடிவமாக பயன்படுகிறது. இணக்கி என்கிற சொல் Microsoft நிறுவன பரிந்துரைகளிலும் (Microsoft Bhasha) தென்பட்டது (இப்போது அந்த வலைப்பக்கம் காண்பதில்லை). தமிழக அரசாங்கம் சில வருடங்களாக ஆங்கில சொல் விரிவாக்கத்தின் நேரடி தமிழாக்கங்களைத் தவிர்த்து நேரடியான ஒரே தமிழ் சொற்களை பரிந்துரைக்கிறது. (இது அண்மையில் மக்கள் தொலைக்காட்சியிலும் கூறப்பட்டது). இதன் பொருட்டு தான் இணக்கி என்கிற சொல் ஆங்கில Modemஐ வகைக்குறிக்கும் வகையில் பயன்பட துவங்கியுள்ளது. என்னைப் பொறுத்த வரை தமிழக அரசாங்க பரிந்துரைகள் (சொல் எவ்வளவு தான் 'தவறு' என தோன்றினாலும்) ஆழ்ந்த ஊடுருவலைக் கொண்டுள்ளது. இணையதளங்களில் காணாத அச்சு இதழ்களில் அரசாங்க தாக்கம் அதிகம் உள்ளது. TamilComputer, அறிவியல் ஒளி, சித்தர் அறிவியல் மருத்துவம் போன்ற எண்ணற்ற இதழ்கள் இணையத்தில் சுவடு இல்லை. இவை பெரும்பாலும் அரசு சொற்களையே பயன்படுத்துகிறன. Adaptorக்கு ஏற்பி என்கிற சொல் புழக்கத்தில் உள்ளது. இணையதளங்களின் பார்வையை விட அச்சு பிரதிகளின் விற்பனை பல பல மடங்கு அதிகம்.

பொருந்தா பயன்படு சொல் பொருந்தும் பயன்படா சொலைப் பயன்படுத்துவதே நலம் என நினைக்கிறேன்.

ராஜ் (தொழில்நுட்பம்) - 9-4-2010

தங்கள் கருத்து சரியானது தான் . modulator , demodulator என்பனவற்றுக்கும் தங்களை பரிந்துரை செய்ய அழைக்கிறோம் . --இராஜ்குமார் 09:48, 9 ஏப்ரல் 2010 (UTC)

ஐயா இது என்னுடைய பரிந்துரை அல்ல. தமிழ்நாடு அரசாங்க சொற்கள், நான் வெறும் 'நகல் - ஒட்டு' வேலை செய்பவன்;

Modulator : பண்பேற்றி

Demodulator : பண்பிறக்கி

நான் முன்பு Modemக்கு ஆங்கிலத்தில் போல் பண்பேற்றிறக்கி என பயன்படுத்தி வந்தேன், இணக்கி என்கிற அரசு பரிந்துரை தெரிந்ததும், அவ்வாறே பயன்படுத்துகிறேன். www.tamildict.tk அகராதியும் பெரும்பாலும் 'நகல் - ஒட்டு' வேலை தான். சொல்லியைபு மட்டும் தான் என்னுடை விருப்பம்.

இங்ஙனம் ராஜ் (தொழில்நுட்பம்) - 9-4-2010

இணக்கி என்று மொட்டையாக இடாமல் , பண்பிணக்கி என்று குறிப்பிட்டால் , அதன் பொருள் நன்கு விளங்கும் அல்லவா ? அதனால் நான் இதனை பரிந்துரைத்தேன். www.tamildict.tk என்ற இணைய தளத்தை கண்டேன். அனைத்து சொற்களையும் தரப்படுத்தல் வேண்டும் என்று நான் நினைகிறேன். -- இராஜ்குமார் 10:26, 9 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் சொல்லும் கருத்து சரிதான். நீங்கள் அளித்தச் சொல் "பண்பிணக்கி" அழகாக உள்ளது... இது அரசாங்கத்தில் நுழைந்தால் எனக்கு மிக மகிழ்ச்சி. அரசாங்க சொல் சிலது மிகவும் வியப்பு அளிக்கும். இப்போது வந்துள்ளது MP3 Player - நீள் இசைக் கருவி = நீண்ட இசைக்கருவி = Long Musical Instrument.!!.எத்தனை விளம்பிரங்கள்?!!!! (தமிழ் Wikipedia போட்டி பரிசு)! இவர்கள் என்ன செய்தாலும் இவர்கள் தாக்கம் அதிகம் !!! ---தொழில்நுட்பம் 10:49, 9 ஏப்ரல் 2010 (UTC) (இப்போது தான் கையோப்பன் போட கற்றிருக்கிறேன்)

இணக்கி[தொகு]

modem - இணக்கி , புழக்கத்தில் உள்ள இடங்கள் :

கலைச்சொல் பற்றிய கருத்துகள்[தொகு]

இங்கே தொழில்நுட்பம் என்னும் பயனர் கூறும் கருத்துகளுடன் உடன்பாடு இல்லை. கலைக்களஞ்சியத்தில் முறையான சொற்கள் பயன்படுத்துவது தேவை. பிறைக்குறிகளுக்குள் பிற சொற்களை வழங்கலாம், வழிமாற்றுகள் த்ரலாம். ஆனால் தவறான சொற்கள், பொருந்தாத சொற்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது சரியான போக்கு அல்ல. MP3 Player என்னும் சொல்லின் வரலாறும் எப்படி வந்ததென்று தெரியும், ஆனால் அதெல்லாம் இங்கு கூறத்தேவை இல்லாதது. அப்பெயர் பொருந்தாது என எடுத்துரைத்தவன் நான் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். கலைச்சொல் பயன்பாட்டில் இபப்டியான இசலாட்டங்கள் சில நடக்கும்தான், ஆனால் முறைப்படி அலசி இங்கு நமக்குத் தேவையானபடி, நற்பயன் தரக்கூடிய சொற்களை ஆள்வதே நல்லது. அரசுடன் இது பற்றி நேரடியாக எடுத்துரைப்போம். --செல்வா 15:25, 9 ஏப்ரல் 2010 (UTC)

ஐயா எனக்கும் பொருந்தாத சொற்களைப் பயன்படுத்தும் ஆசை இல்லை. மேற்சொன்னப் படி சொல்லியைபு என்னுடைய விருப்பம். ஏனைய மேல் மொழிகளில் சொல்லியைபு ஏற்பட்டுள்ளது தமிழில் இன்னும் தோல்வி நிலையில் உள்ளது. தமிழை தவிற்று இந்தியாவில் ஏனைய மொழிகள் வடமொழி மூலத்தைப் பயன்படுத்துகின்றன. இவைகளில் சொற்கள் ஓரளவு நிலையாக உள்ளன. இவைகளில் பாடநூல்களுக்கும் விக்கிபீடியாவிற்கும் சொல்லியைபு உள்ளது. தமிழில் இதுவரை அவ்வாறு அமைய வில்லை. அண்மைய அரசு விளம்பரத்தில் MP3 Player ஒரு சிறிய உதாரணம். இதன் தாக்கம் மிகவும் அதிகம். விக்கிபீடியா சொற்கள் : Motor: தமிழ் விக்கிபீடியா - இயக்கி ; பாடநூல்களில் மின்னோடி..Electron, Electronics, Galaxy, ....பல இவ்வாறு உள்ளன... நான் சொன்னது போல் அச்சு நூல்கள், பாட நூல்கள், மாத இதழ்கள் இலட்சக் கணக்கானோர் திறந்துப் படிப்பர். விக்கிபீடியா நூல்/இதழ்களின்/ கலைச்சொற்களை ஓரளவாவது பிரதிபலிப்பது நன்று என நினைக்கிறேன். 'திருத்தங்கள்' அச்சை எட்டாவிடில் 'பொருந்தா' சொற்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். தமிழ் விக்கிபீடியாவை நாடுவோர் வெளியாகும் நூல்களின் புழக்கத்திற்கு சற்றும் ஒப்பிட இயலாது. நூல்களில் பயன்படா சொற்கள் அல்லது புதிய சொற்கள் விக்கிபீடியாவில் மட்டும் தோன்றினால் குழப்பங்கள் ஏற்படும் என்பது தான் என் கருத்து. --தொழில்நுட்பம் 17:04, 15 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் ராஜேஷ் தொழில்நுட்பம் . இயக்கி (Motor) , மின்சார இயக்கி ( Electrical Motor) ,மின்னிலை இயக்கி (Electrostatic Motor) என்று நாங்கள் வரையறை செய்கிறோம். நீங்கள் சொல்வது உண்மைதான் . பாட நூல்களில் மின்னோடி என்று பெயரிட்டு இருகிறார்கள் . 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் அங்கு இது போன்ற அனைத்து மோட்டார் (இயக்கி) களுக்கும் படிக்க வேண்டியதோ ? வரையறை செய்வதோ அவசியம் இல்லை . ஆனால் நாம் பட்டப் படிப்பிற்கு செல்லும் பொழுது தான் இதை பற்றிய ஒரு வரையறை தேவைபடுகிறது . நாம் இங்கு எழுதுவதைத்தான் பிற்காலத்தில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பது நிச்சயம் இல்லை . மாற்றங்கள் நிகழும் . மோட்டார் என்பதற்கு ஓடி என்று எப்படி பெயர் வைப்பது . நீங்களே சொல்லுங்கள் . மின்சார ஓடியை , முன்னோடியாக சுருக்குகிறோம் . மின்சார இயக்கியை மின்னியக்கியாகவும் சுருக்கலாம் . டீஸல் ஓடி (diesel motor) என்று பெயரிடவும் வேண்டிவரும் . நாங்கள் கலந்துரையாடிய வரையில் , ஓடியை விட , இயக்கி என்ற சொல் பொருத்தமாக உள்ளது . அனைத்து மொடோர்களுக்கும் பொருந்துவதாகவும் அமைகிறது . -- இராஜ்குமார் 07:06, 16 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணக்கி&oldid=2155921" இலிருந்து மீள்விக்கப்பட்டது