பூ மலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ மலை தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் பூ மலை பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வட்டப்பாதை வழித்தடத்தில் இது பதினெட்டாவது தொடருந்துநிலையமாகும். இது ஃபேரர் சாலை தொடருந்து நிலையம் மற்றும் கால்டிகாட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

நகர்மையம் வழித்தடத்தில் இது எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது டான் காஹ் கீ தொடருந்து நிலையம் மற்றும் ஸ்டீவன்ஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_மலை_தொடருந்து_நிலையம்&oldid=899679" இலிருந்து மீள்விக்கப்பட்டது