பேச்சு:மகாவலி ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கமம் தமிழ்ச்சொல் என்ன? விவசாயம் தமிழ்ச்சொல்லா?--ரவி 20:58, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

கடலில் சேர்கின்றது, கடலில் கலக்கின்றது என்று கூறலாம். விவசாயம் என்பது தமிழ்ச்சொல் இல்லை. வேளாண்மை, பயிர்த்தொழில், மேழித்தொழில், உழவுத்தொழில் என பல சொற்கள் இருக்கும் பொழுது விவசாயம் என்னும் சொல் தேவையில்லாமல் ஆட்சியில் உள்ளது. பயிர்த்தொழில் வழி வரும் செல்வம் பற்றி உள்ள பழமொழி மேழிச்செல்வம் கோழைப்படாது.--செல்வா 02:35, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
விவசாயம் வடமொழி என்பது மட்டுமல்ல, அதன் பொருள் வடமொழியில் தொழில் என்பதாகும்! உழவுத்தொழில் தமிழருக்கு என்ன புதிதா? எத்தனைச் சொற்களை செல்வா சுட்டியுள்ளார் பாருங்கள். :-) -- Sundar \பேச்சு 03:38, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
சங்கமத்திற்கு கூடல் என்றும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். கூடல் நகராம் மதுரை அல்லவா? :-) -- Sundar \பேச்சு 03:40, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி, சுந்தர், செல்வா. வெளிப்படையாகத் தெரியாமலேயே இது போல் இன்னும் எத்தனைச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன என்று அறியவே மலைப்பாய் இருக்கிறது !!--ரவி 16:20, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாவலி_ஆறு&oldid=242532" இலிருந்து மீள்விக்கப்பட்டது