பயனர் பேச்சு:பாலாஜி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது![தொகு]

இதைப் படிப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னைப் பொருத்தவரை தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது என நினைக்கிறேன். மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டம் சிறப்பாக வளர்ந்து வரும் சூழலில் அதையே இங்கும் செய்வதனால் இணைத்தமிழுக்கு எந்தவொரு பயனுமில்லை. மாறாக தமிழ் ஆர்வளர்களின் கால மற்றும் முயற்சி விரயமே! மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டத்தில் பங்காற்றுவதோ, தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதுவதோ இதைவிட பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கு விக்கிபீடியா 22000 கட்டுரைகளை தாண்டிவிட்ட நிலையில் நாம் 5000 கூட எழுதாதது வருத்தமளிக்கிறது.

பாலாஜி. 19 அக்டோபர் 2006

தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கை குறித்த ஆய்வை அறிய பார்க்கவும் - Wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு, Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006). இவ்வாய்வுகளை படித்தால், தமிழ் விக்கிபீடியா சரியான திசையிலும் வேகத்திலும் செல்கிறது என்று அறியலாம்.

தமிழ் விக்கிமூலம் குறித்த உங்கள் கருத்தை தவறாக எடுக்க ஒன்றும் இல்லை. உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மதுரைத் திட்டம் அனைவரும் அறிந்ததே என்றாலும் அதில் பல குறைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, அது திறந்த முயற்சி இல்லை. அனைத்து தமிழ் நூல்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு தலைவரின் கீழே செயல்பட வேண்டி இருக்கிறது. பங்காளிப்பாளர்கிடையே திறந்த ஒருங்கிணைப்பு இல்லை. என்னை பொறுத்தவரை, அந்த திட்டத்தின் execution modelஐ விட விக்கிமூலத்தின் விக்கி வழிமுறை நீண்ட கால நோக்கில் வெற்றி பெறத் தக்கதும் அதிக பயன் தரத்தக்கதும் ஆகும். மதுரைத் திட்டத்தில் உள்ள நூட்களை விக்கிமூலத்தில் சேர்ப்பதற்கு அதிக நேரம் ஆகாது. அதை தானியக்கம்மாக கூடச் செய்யலாம்.

ஏற்கனவே இங்கு பங்களிப்பவர்களின் தமிழார்வத்துக்கு நீங்கள் தந்த பாராட்டுக்கு மகிழ்ச்சி. நீங்களும் இணைந்து பங்காற்ற வந்திருப்பதற்கு மகிழ்ச்சி. user:Gbalaji82 நீங்கள் தான் என்றால் தெரியப்படுத்தவும்.

தமிழ் விக்கிபீடியா முதற்பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. உங்கள் கருத்துக்கள் நிச்சயம் பயனுள்ளவை. ஆங்கில விக்கிபீடியா பற்றிய விழிப்புணர்வு அளவுக்கு, தமிழ் சமூகத்தில் விக்கிபீடியா பற்றிய விழிப்புணர்வு இல்லை.எனவே ஓரளவாவது விரிவான அறிமுகம் முதற்பக்கத்தில் தேவை. மேலதிக கருத்துக்களை முதற்பக்க பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறேன். --ரவி 08:15, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா முதற் பக்கம்[தொகு]

முதற் பக்கத்தில் செய்திகளும், தெரியுமாவும் இடம்பெற ரவி அவர்களின் பரிந்துரையை நான் ஆமோதிக்கிறேன். மேலும் முதற் பக்கத்தில் பாதிக்குமேல் ஆக்கிரமித்திருக்கும் விக்கிபீடியா பற்றிய முன்னுரையும், பிரிவுகள் பற்றிய சாளரமும் சிறியதாக ஆங்கில முதற் பக்கத்தில் இருப்பது போல மாற்றப்பட வேண்டுமென நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா தளத்தை தேடி வருபவரகள் விக்கிபீடியா பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களாகவே இருப்பர். ஆகயினால் முன்னுரையை சிறிதாக்கியோ கிழே நகர்த்தியோ முதற்பக்க கட்டுரைகளை மேலும் பிரதானமாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

பாலாஜி. 19 அக்டோபர் 2006

நன்றி![தொகு]

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--Kanags 07:07, 10 அக்டோபர் 2006 (UTC)

பாலாஜி, உங்களுக்கு தமிழ் விக்கிபீடியா எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிந்து கொள்ள ஆவல். --Sivakumar \பேச்சு 06:27, 12 அக்டோபர் 2006 (UTC)


பாராட்டுக்கள்

பாலாஜி, ஆர்வத்துடன் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தரலாமே! அத்துடன் உங்களுக்கு விக்கிபீடியா அறிமுகமானவிதம் பற்றியும் கூறுங்களேன். --கோபி 16:16, 18 அக்டோபர் 2006 (UTC)

நல்வரவு! பணி தொடர வாழ்த்துக்கள். பெயர் இட மெலே உள்ள கையப்ப பொத்தானை அமுக்குவது இலகு வழி. நன்றி. --Natkeeran 15:44, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

stub and translate[தொகு]

Please add the {{stub}} at the bottom of the article, just above the category tag. Also, the traslate tag is usually appropriate if considerable translation is needed. Adding too many tags can produce a bad user experience. Just some suggestions. --Natkeeran 18:21, 31 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

புள்ளி விபரங்கள் பக்கம்[தொகு]

>> இங்கே மொத்தமாக 10 பக்கங்கள் பார்க்கப்பட்டதுடன்

What does this mean? -பாலாஜி.

balaji, that was due to a mediawiki feature for page count that did not function any more. now i have rectified the page. u can check. thanks for pointing out. that page needed fix for a long time. see Wikipedia:கையெழுத்து to know how to sign in talk pages--Ravidreams 13:34, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பகுப்புக்கள்[தொகு]

பாலாஜி, பகுப்புக்களை மாற்றுவதில் அவசரப் பட வேண்டாம். சில தவறுகள் விடுகிறீர்கள். --கோபி 17:23, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பகுப்பு:ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும் என்பது சுருக்கமாக இருக்கும். மேலும் பகுப்பு:ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும் என்ற பகுப்பு அவசியமற்றது. --கோபி 17:26, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பகுப்பு:ஆஸ்திரேலியா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்பதுள் முழுமையான பகுப்புக்களை இடுவது பொருத்தமற்றது. அப்பகுப்புக்குள் அடங்கும் கட்டுரைகள் அனைத்தும் குறுங்கட்டுரைகளாகவே இருக்க வேண்டியதில்லை. --கோபி 17:28, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆஸ்திரேலியா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் அவசியமான பகுப்பே. உருவாக்கியமைக்கு நன்றிகள். இதனுள் முழுமையான பகுப்புக்களை இடாமல் தனித்தனியே குறுங்கட்டுரைகளை இடுவதே பொருத்தமானது. ஏனெனில் முழுமையான பகுப்புக்களுள் வளர்ச்சியடைந்த கட்டுரைகளும் இருக்கலாம். பின்னர் வளர்ச்சியடையலாம். இல்லையா? --கோபி 18:20, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கையொப்பமிட[தொகு]

த. வி. யில் நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடர்ந்து பணியாற்றுங்கள். பேச்சுப்பக்கங்களில் ~~~~ என இட்டால் உங்கள் கையெழுத்து தானாக இடப்படும். அல்லது மேலேயுள்ளவற்றில் வலமிருந்து இரண்டாவதை அழுத்தியும் கையொப்பமிடலாம். நன்றி. --கோபி 17:44, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

Ravi and Gopi, thanks for the info on signature. Was plain lazy to look for it!

Gopi, I agree with your views on Australia Categories. I thought the geo-stub category is just two three clicks away from the front page. Apparently the one following 'Nations' category is also three clicks away. Thanks for correcting the categories.-பாலாஜி 21:51, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


பாலாஜி, பேச்சுப் பக்கங்களில் கருத்து தெரிவிக்கும்போது மறக்காமல் நேரம், தேதியுடன் கையெழுத்து இடுங்கள். குழுப்பத்தை தவிர்க்கவும் அதிகாரப்பூர்வமாக இருக்கவும் இது முக்கியம். பிறகு, பேச்சுப் பக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் தமிழில் எழுதிப் பழகலாம். புதுப்பயனர்களை நாங்கள் தொடக்கத்தில் தமிழில் எழுத வற்புறுத்துவதில்லை என்றாலும், போகப் போக நீங்கள் தமிழில் எழுதத் தொடங்குவீர்கள் என்று எதிர்ப்பார்கிறோம். (ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர் ஆங்கிலம் அறிந்திருக்க வாய்ப்பில்லை...) நிர்வாகிப் பணிகளுக்கு தமிழ் விக்கிபீடியாவில் ஆட்கள் மிகக் குறைவு. அதற்குத் தொடர்ந்து உதவுவதற்கு நன்றி. --Ravidreams 23:26, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

காலநிலை[தொகு]

பாலாஜி, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. காலநிலை என்பது ஈழ வழக்கு. கல்வித் திட்டத்தில் பயன்படுகிறது. இது ஒரு நல்ல பொருத்தமான சொல்லாகவும் உள்ளது. வானத்தின் நிலை வானிலை என்பது போல காலத்தின் நிலை காலநிலை. தட்பவெப்பம் என்பதில் தட்பம் என்பது தண்மையுடன் தொடர்புபட்டதென்றால் (எனக்குச் சரியாகத் தெரியவில்லை) தட்பவெப்பம் என்பது வெப்பநிலையுடன் மட்டுமே தொடர்புடையதாகிறது. பருவகாலங்கள், வசந்த காலம் போன்ற காலத்துடன் தொடர்புடைய சொற்களின் பயன்பாடு உள்ளதால் காலநிலை என்ற சொல் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும். அது ஒரு பொருத்தமான சொல்லாக இருப்பதால் அதையே பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். நன்றி. கோபி 15:45, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

காலநிலை அளவுக்கு நாளாந்த பாவனையில் இல்லாததால் 'standard time (as in IST or UTC)என்பதற்கான ஈழ வழக்கை உங்களுக்குக் கூற முடியாதுள்ளமைக்கு மன்னிக்கவும். இத்தகைய சொற்களை பாடநூல்களில் இங்கு காணலாம். தாய்மொழிக் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட காலத்தில் தமிழக, ஈழக் கலைச் சொல்லாக்கங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவையேதும் உணரப்படாததால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் வேறுபட்டுள்ளன. (உ-ம்: management -மேலாண்மை, முகாமைத்துவம்) இணையத்தின் வருகை இதனை உணர வைத்துள்ளது. இரு வழக்குகளிலும் நல்ல சொற்கள் உள்ளன. தமிழக அளவு காரணமாக ஈழத்தின் நல்ல சொற்களும் மறக்கப்படும் ஆபத்தை உணர்வதால் விக்கிபீடியா போன்ற இடங்களில் கருத்துச் சொல்ல வேண்டியுள்ளது. நல்ல சொற்கள் பேணப்பட வேண்டுமென்பதே நோக்கம். ஆதலால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:43, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் காலநிலை, பருவ நிலை, தட்பவெப்ப நிலை, ஆகிய அனைத்தும் climateக்குப் பொருளாகத் தரப்பட்டுள்ளது. geology பிரிவில் காலநிலை என்றே தரப்பட்டுள்ளது. எனவே இது கூடுதல் பொருத்தமாக இருக்கும். --Ravidreams 18:31, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மிகச்சிறிய கட்டுரைகள்[தொகு]

மிகச்சிறிய கட்டுரைகளை (< 500 பைட்டுகள்) மட்டும் பார்ப்பதற்கு வழியிருக்கிறதா? பாலாஜி 17:36, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மிகவும் சிறிய ஆயிரம் கட்டுரைகளைப் பார்க்கலாம். [1] குறும்பக்கங்கள். --கோபி 17:56, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

[2] சிறப்புப் பக்கங்களில் குறும்பக்கங்கள், நீளமான பக்கங்கள், தொடராப் பக்கங்கள் முதலிய பல தொடுப்புக்கள் உள்ளன. உங்களது பங்களிப்புக்கு பயன்படும். 512 பைட்டு அளவைவிடச் சிறிய பக்கங்கள் 143 உள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும் நீங்கள் பங்களிக்கலாம். உங்களது தொடர்ச்சியான பங்களிப்புக் கண்டு மிக்க மகிழ்ச்சி. --கோபி 17:59, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி! பாலாஜி 16:31, 21 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றியுடன் நின்று விடாதீர்கள் பாலாஜி :-) 512 பைட்டு அளவினை விடச் சிறிய கட்டுரைகள் சில மாதங்களின் முன்னர் 250 ஐ விட அதிகமாயிருந்தது. சில பயனர்களின் முயற்சியால் மிகவும் சிறியவை நீக்கப்பட்டு சில விரிவாக்கப்பட்டு 140 வரை குறைந்துள்ளது. நீங்களும் பங்களித்தால் பக்கவழிமாற்றற் பக்கங்களைவிட வேறெவையும் 512 பைட்டு அளவை விடச் சிறியனவாக இல்லாததை உறுதி செய்யலாம். நன்றி. --கோபி 16:41, 21 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
இந்த முயற்சியை ஏற்கனவே துவங்கிவிட்டேன்! பாலாஜி 16:48, 21 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. --கோபி 16:52, 21 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

திரைப்படங்கள்[தொகு]

நல்லது பாலாஜி. நிரோ, என்னுடன் சேர்ந்து திரைப்படக் கட்டுரைகளை கவனமெடுக்க நீங்களும் வந்துட்டீங்க. ஆமா, படங்களை பதிவேற்றாம படிம இணைப்புகள நீங்கள் தர்ற மாதிரி இருக்கே??எடுத்துக்காட்டுக்கு jenilia, asin கட்டுரைகள். அப்புறம் WP:MOS பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் படிமங்களுக்குத் தமிழில் பெயரிடலாமா என்று ஒரு உரையாடல் இருக்கிறது. அங்கு உங்கள் கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும்.--Ravidreams 06:42, 6 டிசம்பர் 2006 (UTC)

பாலாஜி, திரைப்பட நடிகர்கள் படங்களை விரைவில் பதிவேற்றுற idea இருக்கா? குறிப்பிட்ட பக்கங்களில் படிம இணைப்புகள் சிகப்பாக இருப்பது அவ்வளவு நன்றாக இல்லை :( படத்தை பதிவேற்றிய பிறகு கட்டுரையில் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்--Ravidreams 17:57, 6 டிசம்பர் 2006 (UTC)

படிமங்கள்[தொகு]

படிமங்களைப் பற்றி தற்போதுதான் சற்று கூடிய அக்கறை எடுத்து வருகின்றோம். commercial websites இருந்து எடுக்கும் படங்களுக்கு அனேகமாக பதிப்புரிமை இருக்கும். அவதானமாக இருக்கவும். கூடியவரை பொதுவிலும், Creative Commons, GNU GPL படிமங்களை மட்டும் சேர்த்தால் நன்று. மேலும், படிமங்களை வகைப்படுத்தினாலும், நன்று. விரைவில், இதைப்பற்றி நடைமுறைகள் விரிபடத்தப்படவேண்டும். நன்றி. --Natkeeran 01:07, 8 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை[தொகு]

த.வி. பல முனைகளில் பங்களித்து வருகின்றீர்கள். உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. நன்றி. --Natkeeran 01:44, 8 டிசம்பர் 2006 (UTC)

2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்[தொகு]

கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிபீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.

--Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்[தொகு]

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

விக்கி மாரத்தான்[தொகு]

நினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. பிலு மோடி பற்றி எழுதியிருக்கிறேன். பாலாஜி 05:52, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:22, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் பாலாஜி,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பாலாஜி&oldid=837706" இலிருந்து மீள்விக்கப்பட்டது