தொல்லியல் அருங்காட்சியகம், சகேசுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், சகேசுவர், இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிற்பங்களை வைப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கொட்டகை, 2000 ஆவது ஆண்டில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இது இப் பகுதியில் இருக்கும் சகேசுவர் குழு, தண்டேசுவர் குழு, குபேரர் குழுக் கோயில்களிலிருந்து கிடைத்த 174 சிற்பங்களைக் கொண்டுள்ளது. இவை கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்தவை.

இரண்டு காட்சிக் கூடங்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் முதல் காட்சிக் கூடத்தில் 36 சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உமாமகேசுவரர் சிற்பமும், சூரியன், நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்களும் சிறப்பு வாய்ந்தவை. இரண்டாம் காட்சிக் கூடத்தில், 18 சிற்பங்கள் உள்ளன. இக் காட்சிக்கூடத்தில் உள்ள சிற்பங்களுட் சில இந்தப் பகுதிக்குத் தனித்துவமான கலைப்பாணியில் அமைந்தவை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]