வ. முனியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. முனியன் (பிறப்பு: சூலை 13 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜி, வதனி, வீயெம் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், வழக்கறிஞரும், முன்னாள் கல்வியதிகாரியும், ஆசிரியருமாவார். மேலும், இவர் கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், முத்தமிழ்ப் படிப்பகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள். கட்டுரைகள் மற்றும் தொடர் பயணக் கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "விழிக்க மறுக்கும் இமைகள்" (சிறுகதைத் தொகுப்பு 2004).

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1979);
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (2002);
  • செம்பருத்தி திங்களிதழ் குறு நாவல் போட்டியில் பரிசு;
  • தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வு (2003).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._முனியன்&oldid=3227669" இலிருந்து மீள்விக்கப்பட்டது