கிளாடு மோனெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடு மோனெ
Claude Monet
கிளாடு மோனெவின் உருவப்படம், நாடார் மூலம் வழங்கப்பட்டது, 1899.
பிறப்புஒஸ்கார் - கிளாடு மோனெ
14ம் திகதி நவம்பர் மாதம் 1840 ஆண்டு
பரீஸ், பிரான்ஸ்)
இறப்பு5ம் திகதி திசெம்பர் மாதம் 1926 ஆண்டு
கிவேர்னி, பிரான்ஸ்
தேசியம்பிரான்ஸியர்
கல்விஇயூஜின் பௌதின் (Eugène Boudin)
அறியப்படுவதுஓவியக்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்உணர்வுப்பதிவு, சூரியோதயம்
Patron(s)கஸ்டேவ் கைலேபொட்டே, ஏர்னெஸ்ட் ஹொஷெடே, ஜியோர்ஜ்ஸ் கிளெமென்கியூ
கிளாடு மோனெ தன்னுடைய தோட்டத்தில் நின்று எடுத்த படம், இப்படத்தில் கிளாடு மோனெ வலது பக்கத்தில் உள்ளார், இப்படம் 1922 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இப்படம் ஜிவேர்னியில் (Giverny) எடுக்கப்பட்டது.
1867ல் கிளாடு மோனெவினால் வரையப்பட்ட ஓர் அழகான ஓவியம்
தோட்டத்தில் உள்ள ஓர் பெண், 1867ல் இந்த ஓவியத்தை கிளாடு மோனெ வரைந்தார். இப்படத்தில் அப்பெண்ணினதும், அருகிலுள்ள மரத்தினதும் நிழல் அழகாக வரையப்பட்டுள்ளது.
நீல அல்லிகள் மற்றும் ஜப்பானிய பாலமும், இப்படத்தை கிளாடு மோனெ 1899 இல் வரைந்தார்,
தனது முதல் மனைவியான கமீலே டொன்சியுக்ஸ் பச்சை நிற ஆடை அணிந்திருக்கும் படம், இப்படத்தை கிளாடு மோனெ 1866இல் வரைந்தார். இப்படமே இவருக்கு வரவேற்பைத் தேடித் தந்தது.
கிளாடு மோனெ தனது தோட்டத்தின் குளத்தில் உள்ள நீலஅல்லிகளை படமாக வரைந்தார், அப்படம் தான் இது, இதை கிளாடு மோனெ 1915 இல் வரைந்தார்.
சூரிய ஒளி மற்றும் மூடுபனியினால் பிரகாசிக்கும் இலண்டன் பாராளுமன்றம், இப்படத்தை கிளாடு மோனெ 1904 இல் வரைந்தார்.

கிளாடு மோனே (Claude Monet) (நவம்பர் 14, 1840 - டிசம்பர் 5, 1926) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியராவார். இவர் ஆஸ்கார் கிளாடு மோனே அல்லது குளோட் ஒஸ்கார் மொனே எனவும் அறியப்பட்டவர். இவர் உணர்வுப்பதிவுவாத (impressionist) இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்னும் பெயரிடப்பட்ட ஓவியமே அந்த ஓவிய இயக்கத்துக்கும் அப்பெயர் வரக் காரணமாயிற்று.[1][2][3]

வாழ்க்கை[தொகு]

தன் உருவப்படம், கிளாடு மோனெவினால் வரையப்பட்டது.

மோனே பாரிஸ் நகரில் பிறந்தார். ஆனால் இவருக்கு ஐந்து வயதானபோது இவரது குடும்பம், நோர்மண்டியிலுள்ள லெ ஹாவ்ரே என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. இவரது தந்தையார் ஒரு பலசரக்கு வணிகர். தன்னைத் தொடர்ந்து ஆஸ்கார் கிளாடு மோனேயும் தங்கள் குடும்ப வணிகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் மோனே ஒரு ஓவியராவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

தொடக்கத்தில் ஒரு கேலிச் சித்திர ஓவியராகவே இவர் உள்ளூர் மக்களுக்குப் அறிமுகமானார். அவர் கரிக் கோலினால் வரையப் பட்ட கேலிச் சித்திரங்களை விற்று வந்தார். நோர்மண்டியின் கடற்கரைகளில் இயூஜீன் பௌதின் (Eugène Boudin) என்னும் இன்னொரு ஓவியருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. மோனே இவரிடமிருந்து எண்ணெய் ஓவியங்களை (oil paints) வரைவதற்குப் பயின்றதுடன் வெளிப்புற ஓவிய நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.

மோனே, த லுவர் (The Louvre) என அழைக்கப்பட்ட அரும்பொருட் காட்சியகத்தைப் பார்வையிட பாரிஸ் சென்றபோது அங்கே பல ஓவியர்கள் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் போலவே தாங்களும் வரைவதை அவதானித்தார். ஆனால் மோனே தான் காண்பதை வரைவதிலேயே ஆர்வம் காட்டினார்.

மோனெ ஏழு ஆண்டுகளுக்கான படைத்துறை (இராணுவ) சேவையை ஏற்றுக்கொண்டு 1860 இல் அல்ஜீரியாவில் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நோய்வாய்ப்படவே இவரது உறவினரொருவரின் தலையீட்டின் பேரில் படைத்துறையில் இருந்து வெளியே வர முடிந்தது. இதற்காக பல்கலைக்கழகமொன்றில் ஓவியப் பயிற்சி நெறியொன்றை மேற்கொள்வதாக இவர் ஒத்துக்கொண்டார். ஆனாலும் மரபு சார்ந்த ஓவியப் பயிற்சியில் ஆர்வம் இல்லாமையால், 1862 இல் பாரிஸிலிருந்த சார்ல்ஸ் கிளேயர் என்பவரின் ஓவியக்கூடத்தில் (studio) சேர்ந்தார். அங்கேதான் இவருக்கு பியரே-ஒகஸ்ட்டே ரெனோயர் (Pierre-Auguste Renoir), பிரெடெரிக் பஸில்லே (Frederic Bazille), அல்பிரட் சிஸ்லே (Alfred Sisley) போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஓவியம் வரைவதில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்தனர். இதுவே பின்னர் ஓவியத்தில் உணர்வுப்பதிவுவாதம் (impressionism) என அறியப்படலாயிற்று.

1866 இல் மோனே, தனது முதல் மனைவியான கமீலே டொன்சியுக்ஸ் என்பவரை வைத்து வரைந்த பச்சை ஆடை உடுத்திய பெண் (The Woman in the Green Dress) என்று பெயரிடப்பட்ட ஓவியமே இவருக்கு வரவேற்பைத் தேடித் தந்தது.

கிளாடு மோனெவின் மனைவி கமைல் மோனேவின் இறப்பு[தொகு]

1876 ஆம் ஆண்டு கமைல் மோனே காச நோயால் பீடிக்கப்பட்டாள். கமைல் மோனேவின் இரண்டாவது மகன், மைக்கேல், 1878 பங்குனி 17 ஆம் திகதி பிறந்தான். இந்த இரண்டாவது குழந்தைக்கு ஏற்கனவே சுகாதார மறைதல் ஏற்பட்டிருந்தது, அது அவரை மேலும் பலவீனப்படுத்தியது. கமைல் மோனேவின் குடும்பத்தினர் (Vétheuil) எனப்படும் கிராமத்தில் உள்ள கலைகள் கற்ற ஓர் பல்பொருள் அங்காடி உரிமையாளர் வீட்டில் தங்கினர். 1878 ஆம் ஆண்டு கமைல் மோனே கருப்பை புற்று நோயால் பீடிக்கப்பட்டார். அவள் முப்பத்தி இரண்டு வயதில் 5 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 1879 ஆம் ஆண்டில் இறந்தாள்.

கிளாடு மோனெவின் இறப்பு[தொகு]

கிளாடு மோனெ 1926 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 5 ஆம் திகதி தனது 86 வது வயதில் நுரையீரல் புற்று நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார். கிளாடு மோனெ ஜிவேர்னி (Giverny) தேவாலயத்தின் கல்லறையில் புதைக்கப்பட்டார். கிளாடு மோனெ தனது இறப்பு விழாவை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் சுமார் ஐம்பது பேரே கிளாடு மோனெவின் இறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Claude Monet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. House, John, et al.: Monet in the 20th century, page 2, Yale University Press, 1998.
  2. P. Tucker Claude Monet: Life and Art, p. 5
  3. Patin, Sylvie. "Monet: un œil... mais, bon Dieu, quel œil!" Découvertes Gallimard, Number 131, série Arts. p. 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடு_மோனெ&oldid=3890097" இலிருந்து மீள்விக்கப்பட்டது