ஓட்டோ வாக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்டோ வாக்னர்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்Austro-Hungarian
பிறப்புஓட்டோ கொலொமன் வாக்னர்
(1841-07-13)13 சூலை 1841
வியன்னா, ஆத்திரியப் பேரரசு
இறப்பு11 ஏப்ரல் 1918(1918-04-11) (அகவை 76)
வியன்னா, ஆத்திரியா-அங்கேரி
பணி
கட்டிடங்கள்Floodgate, Nußdorf, Vienna

Karlsplatz Stadtbahn Station
Majolica House
Postal Office Savings Bank Building

Kirche am Steinhof
Rumbach Synagogue
திட்டங்கள்வியன்னா Wiener Stadtbahn

ஓட்டோ வாக்னர் எனப் பரவலாக அறியப்படும் ஓட்டோ கொலொமன் வாக்னர் (Otto Koloman Wagner) (ஜூலை 13 1841ஏப்ரல் 11 1918) ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் வியன்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பென்சிங் (Penzing) என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின், வியன்னா ஆகிய இடங்களில் கல்வி கற்றார். 1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். 1880களின் நடுப்பகுதியிலும் இறுதியிலும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக்கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார். இந்தக் கோட்பாடு தொடர்பான நிலைப்பாட்டினாலேயே அவர் வரலாற்று வடிவங்களில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. 1894 ஆம் ஆண்டில் வியன்னா நுண்கலை அக்கடமியில், கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆனபோது, வரலாற்றியக் கட்டிடக்கலைக்கு எதிரான அவரது நிலைப்பாடு மேலும் வலுப்பெற்றிருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டோ_வாக்னர்&oldid=3263827" இலிருந்து மீள்விக்கப்பட்டது