பகுப்பு பேச்சு:கணினி உதவு வடிவமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி உதவு வடிவமைப்பு என்பது சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேராமல் தனித்துத் தெரிகிறது. இத்தலைப்பை கணினி வழி வடிவமைப்பு என மாற்றம் செய்யலாமே?.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:30, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆம். நானும் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:33, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
கணினி வழி வடிவமைப்பு என்பது சரியான பொருள் தருவதாகத் தெரியவில்லை. வடிவமைப்புச் செய்வதற்குக் கணினியை உதவியாகக் கொள்கிறோமே அன்றிக் கணினி வழியாக வடிவமைப்புச் செய்வதில்லை. வேறு பொருத்தமான சொல் கிடைத்தால் மாற்றலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 18:17, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
  • கணினி வழி வடிவமைப்பு எனும் தலைப்பு பொருந்தாத நிலையில் "கணினி உதவியிலான வடிவமைப்பு" என்பது சரியாயிருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி. 02:39, 3 ஆகஸ்ட் 2010 (UTC)