பேச்சு:கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திகை (நாள்மீன் கூட்டம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நட்சத்திரம் என்பதற்கு மாறாக அல்லது கூடவே நாள்மீன் அல்லது விண்மீன் என்று கூறுவது நல்லது. தமிழுக்கு முதலிடம் தருவது முறையாகும். நட்சத்திரம் என்பதையும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குறிக்கலாம். ஆனால் நாள்மீன் என்ப்தனையும் விண்மீன் என்பதனையும் முதன்மைப்படுத்துதல் வேண்டும். நாள்மீன் என்பதால் நாள் என்னும் சொல்லுடன் உள்தொடர்பு வலுக்கும், விண் என்றால் அச்சொல்லோடும் உள்தொடர்பு வலுக்கும். பொருள் உள்ளத்துள் ஆழப்படும். நட்சத்திரம் என்பது தற்காலத்தில் பரவலாக ஆளப்பட்டாலும், நாள்மீன், விண்மீன் என்னும் சொற்களும் தமிழ்நூல்களில் வழங்கி வந்துள்ளன. --செல்வா 23:38, 29 ஜூன் 2007 (UTC)

இரவில் மணியறியும் முறையில் அது எந்த இடத்திற்கான முறை (உஜ்ஜயினியா, கரூரா ..) என்பது தெளிவாக்குதல் வேண்டும் என நினைக்கிறேன். --செல்வா 00:16, 30 ஜூன் 2007 (UTC)

செல்வா, நன்றி. யாராவது இந்தக்கேள்வியை எழுப்பவேண்டுமென்று தான் காத்துக்கொண்டிருந்தேன். இந்த சூத்திரங்களின் அழகே அது தான். 6 மணிக்கு சூரியன் உதயமாவதாகவும், 6மணிக்கு மறைவதாகவும் எடுத்துக்கொள்வதைத்தவிர, வேறு எந்தவித நிபந்தனை இல்லை. இதுவே அப்படியொன்றும் இடத்தைக்கட்டுப்படுத்தும் நிபந்தனை இல்லை என்பதையும் உலகத்திலுள்ள எல்லா இடங்களுக்கும் இந்த சூத்திரங்கள் உண்மை என்பதையும் நன்கு விளக்கம் கொடுத்து எழுதுகிறேன். நான் இப்பொழுது என் ஊரைவிட்டு வெளியூரில் இருப்பதால் இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து பார்க்கக்கோருகிறேன். நல்ல கேள்வியை எழுப்பினதற்கு நன்றி. --Profvk 11:27, 30 ஜூன் 2007 (UTC)