எம்டிவி ரோடீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MTV Hero Honda Roadies
வேறு பெயர்'MTV Roadies'
வகைReality show
வழங்கல்Cyrus Sahukar Season 1
Rannvijay Singh Season 2 onwards
நாடு இந்தியா
மொழிHindi
பருவங்கள்7
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புRaghu Ram
படப்பிடிப்பு தளங்கள்India Season 1 to 4
India, Thailand, Malaysia Season 5
India, Australia - Season 6 Remote parts of India and Parts of Africa - Season 7
ஒளிபரப்பு
அலைவரிசைMTV India
முதல் ஓட்டம்2003
வெளியிணைப்புகள்
இணையதளம்

எம்டிவி ரோடீஸ் என்பது எம்டிவி இந்தியா என்ற அலைவரிசையில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான இளைஞர் தொடர்புடைய, முன்னேற்பாடின்றி நடைபெறும் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் தயாரிப்பாளர் ரகு ராமைக் கேட்டபோது "ரோடீஸ் நிகழ்ச்சி, பயணம், வீரச்செயல்கள், நாடகம், துளி வாயரிசம் (voyeurism)[1] ஆகியவற்றைக் கொண்டது என்றார்.

தேர்வு முறை[தொகு]

ரோடீஸ் தேர்வுகள் பல்வேறு முக்கிய இந்திய நகரங்களில் நடைபெறுகின்றன. ஆன்லைன் படிவங்களை நிரப்புவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழு விவாதத்தில் ஈடுபடுவர். இதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் பின்னர் எம்டிவி குழுவினரால் நடத்தப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எம்டிவி குழுவில் எம்டிவியைச் சேர்ந்த வல்லுனர்கள் உறுப்பினர்களாக இருப்பர். முதல் இரண்டு பருவங்களில் 7 ரோடீகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்றாம் பருவத்திலிருந்து 13 ரோடீகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறாம் பருவத்தில் 20 ரோடீகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

படிவம்[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட ரோடீகளுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்க ஹீரோ ஹோண்டா கரிஸ்மா போன்ற பைக்குகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் (episode) வாக்கெடுப்பு (vote-out) நடைபெறும். இதன் இறுதியில் பெயர் அறியப்படாத வாக்கு (anonymous vote) மூலம் சக ரோடீசுகளில் ஒருவர் விலக்கப்படுவார்.

ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகள் (tasks) அல்லது அறைகூவல்களை (challenges) அவர்கள் செய்து முடிக்க வேண்டும். இப்பணிகள் பணம் ஈட்டும் பணிகளாகவோ ("Money tasks") அல்லது தடைகாப்புப் பணிகளாகவோ ("Immunity tasks") இருக்கும். பணம் ஈட்டும் பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் ரோடீயின் கணக்கில் பணம் சேர்ந்து கொண்டிருக்கும். தடைகாப்புப் பணிகளை முடிக்கும் குழு அல்லது ரோடீக்கு தடைகாப்பு கிடைக்கும். தடைகாப்பு பெறும் குழு அல்லது ரோடீக்களை குறிப்பிட்ட பகுதியில் வாக்கெடுப்பு (vote-out) மூலம் வெளியேற்ற முடியாது. மேற்காணும் பணிகள் குழு அடிப்படையிலோ (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களினிடையே நடைபெறுவது) அல்லது தனியாள் அடிப்படையிலோ (ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவது) நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட பயணத்தின் முடிவில் எஞ்சியிருக்கும் ரோடீ வென்றவராக அறிவிக்கப்படுவார். பணப் பணிகளை முடித்ததன் மூலம் ஈட்டிய பணத்தோடு அவர் வெளியேறுவார்.

ஐந்தாம் பருவத்தில் முதன் முறையாக சிறப்புப் பணி ("Advantage task") அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வெல்வோருக்கு பன்மடங்கு வாக்குகள் கிடைக்கும் அல்லது வாக்கெடுப்பில் அவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெறுவர்.

இக்காட்சியின் இந்தியப் பதிப்பு, 1995 ஆம் ஆண்டு [2] தொடங்கப்பட்ட எம்டிவி உண்மைநிலை நிகழ்ச்சியான ரோடு ரூல்ஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

வென்றவர்கள்[தொகு]

பருவம் 1 : எவருமில்லை. வேறுபட்ட முறையில் அமைந்திருந்தது. இதில் போட்டி இருக்கவில்லை.

பருவம் 2 : ஆயுஷ்மன் குரானா, சண்டிகர்

பருவம் 3: பருல் ஷாஹி, டெல்லி

பருவம் 4: அந்தோணி யே, கொல்கத்தா

பருவம் 5: அஷுதோஷ் கௌஷிக், சஹாரான்பூர்

பருவம் 6: நாமன் சேட், பெங்களூர்

பருவம் 7: நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ...

ரோடீசுக்குப் பிந்தைய வாழ்க்கை[தொகு]

ரன்விஜய் சிங், ரோடீஸ் முதல் பருவத்தில் பங்கு பெற்றவர் தொடர்ந்து வந்த அனைத்து ரோடீஸ் பருவ நிகழ்ச்சிகளையும் வழங்குபவரானார். எம்டிவியின் விஜே (VJ) ஆனார்.

ஆயுஷ்மான் குரானா, இரண்டாம் பருவத்தில் வெற்றி பெற்றவர். இவர் எம்டிவியில் MTV Wassup!, Stripped and Fantastic 5 ஆகிய நிகழ்ச்சிகளை வழங்குபவர். India's Got Talent என்ற நிகழ்ச்சியையும் இணைந்து வழங்கினார்.

ரோடீஸ் 5.0 ஐ வென்ற அஷுதோஷ் கௌஷிக், பிரபலமான இந்திய தொலைக்காட்சி உண்மைநிலை ஷோவான Bigg Boss நிகழ்ச்சியில் housemate ஆகி, அதிலும் வென்றார்.

நான்காம் பருவத்தில் இடம் பெற்ற ரிஷப் தீர் எம்டிவி தயாரிப்புக் குழுவில் சேர்ந்து ரோடீஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

சாம்பவி ஷர்மா, ஏக்தா கபூர் மற்றும் சுனில் ஷெட்டியால் தயாரிக்கப்பட்ட The Little Godfather இல் நடிக்க வாய்ப்பு பெற்றார்.[3][4] . மற்றொரு போட்டியாளரான அன்மோல் சிங், ஏக்தா கபூரின் குச் இஸ் தரா [5] என்ற படத்தில் அர்சிதா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் இருவரும் எம்டிவியின் ஹெவென்@7-இல் 'ஜி டாக்' என்னும் நிகழ்ச்சியை வழங்கினர்.

வருண் சைனியும் விஷாலும் (எம்டிவி ரோடீஸ் பருவம் 4 இல் பங்கு பெற்றோர் ஆவர்) எம்டிவி ச்பிளிட்ச்வில்லா என்னும் மற்றொரு உண்மைநிலை ஷோவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஷால் பாக்யவிதாதா என்னும் வண்ண நிகழ்ச்சியிலும் (color show) தோன்றுகிறார்.

அண்மையில் ஆயாஸ், 'காட்பரி செலப்ரேஷுன்ஸ் என்னும் விளம்பரப் படத்தில் பிட்சா பையனாகத் தோன்றினார். இவர் 'ஏக்தா கபூரின் கிதனி மொஹப்பத் ஹை படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

குர்பானி ஜட்ஜ் அல்லது பானி ஜே எனப்படும் எம்டிவி ரோடீசின் நான்காம் பருவத்தின் இறுதிப் போட்டியாளர், எம்டிவி இந்தியாவில் பெப்சி எம்டிவி வாசப் (Wassup) நிகழ்ச்சியை வழங்குகிறார்.

ராஜ் ராய், எம்டிவி ரோடீஸ் பருவம் நான்கில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர். இவர் யூடிவி பிந்தாசுடன் இனணந்து சிபிஎப் ஸ்டான்னர் 10 என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து டிஜே தொழிலை மேற்கொண்டதுடன் ஒடிசி திருவிழாவில் டிஜெக்களுக்கான போட்டியிலும் வென்றார்.

நாமன் சேட் (ஆறாம் பருவத்தில் வென்றவர்) தனது இரட்டைச் சகோதரருடன் எம்டிவி கனக்டடில் (MTV Connected) தோன்றினார். மேலும் தனது இரட்டைச் சகோதரரான சல்மான் சேட்டுடன் கோயி ஆனே கோ ஹை என்னும் தொடரிலும் தோன்றினார்.

ஷலீன் பலோட் (இரண்டாம் பருவத்தில் தோன்றியவர்) தற்போது பிரபலமான தொலைக்காட்சி நடிகர். தனது தோழியான தல்ஜீத் கௌருடன் சேர்ந்து நாச் பலியே நிகழ்ச்சியில் வென்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. Liza George (2006-09-08). "Tough guys last the course". Hindu newspaper. Archived from the original on 2008-01-10. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Funenclave.com
  3. "MTV Roadies finalist drives her way to Bollywood". IANS. 2008-04-19. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
  4. "MTV 'Roadies' finalist Shambhavi steps into Bollywood". IANS. 2008-04-19. Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
  5. "Anmol Singh Enters Kuchh Is Tara As Archita". பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Roadies

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்டிவி_ரோடீஸ்&oldid=3908862" இலிருந்து மீள்விக்கப்பட்டது