பேச்சு:தமிழர் தற்காப்புக் கலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரப்பா சிலம்படிக்க உக்கி தெண்டம் பதிவான ஆதியந்த மார்தான் காண்பார்

நேரப்பா தினந்தோறும் பழக்க மானால்
நின்புசமும் கால்பிலமும் நிலக்கு மப்பா
ஆரப்பா உனக்குநிகர் ஒருத்த ரில்லை
ஆகாத சத்துருதான் வந்தெதிர்த் தா னாகில்
காரப்பா கைதனிலே சோட்டா வாங்கி
கருச்சான வீச்சுபோல் காலைக் காணே!
காணவே கால்வாங்கி பக்கஞ் சென்று
கையிலிருந்த சோட்டாவால் கண்ணைப் பார்த்து
ஊணவே குதிரைமுக மூஞ்சி தன்னை
யுடைத்துவிடு கீழ்விழுந்து உதைத்துக் கொள்வான்!

- அகத்தியர் பூரண காவியம்.

தமிழர் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒர் அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. சிலம்பம், வர்மக்கலை, களர்ப்பயிற்று, குத்து வரிசை, அடிதட, மல்லாடல் ஆகியவை தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும். சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள் பட்டை, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி, முச்சாண், பீச்சுவா, மடுவு, சுருள் கொம்பு போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. இக் கலைகளை கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி, பதார்த்த குண சிந்தாமணி, அகத்தியர் பூரண காவியம் போன்ற ஓலைச்சுவடிகள் விபரிக்கின்றன. இன்று தமிழர் வாழும் பல நாடுகளில் தமிழர் தற்காப்புக் கலைகளில் சிலர் ஆர்வத்தோடு பயிற்சி எடுத்துவருகிறார்கள்.