பேச்சு:1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறுபட்ட செய்திகள்

"யாழ்ப்பாணத்தில் இவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் அமர்வின் போது நான் அங்கு இருந்து அவதானித்தேன். பொலீசார் அந் நகரத்தில் மக்களைக் கண்டபடி துன்புறுத்தினார்கள். இருப்பினும் மக்கள் மேல் சுடப்படவில்லை. சுட்டு எவரும் மரணிக்கவில்லை. பொலீசாரால் எச்சரிக்கைக்காக வானத்தை நோக்கி சுடப்பட்டபோது மின்சார கம்பி அறுந்து அங்கு காணப்பட்ட பைப் இனூடாக மின்சாரம் கசிந்த போது மக்கள் அதில் முட்டியதால் கிட்டத்தட்ட 8 பேர் மரணமானார்கள்." - ரத்னஜீவன் ஹூல் [1]

மேற் குறிப்பிடப்பட்ட செய்தியின் சரியான ஆதாரத்தை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் குறிப்பிட்ட இணைப்பு ஆதாரமானது அல்ல.--−முன்நிற்கும் கருத்து 213.184.255.12 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேற்கோள் தேவை வார்ப்புருவை இணைத்துள்ளேன்.--Kanags \உரையாடு 00:27, 21 மார்ச் 2010 (UTC)
"வேறுபட்ட செய்திகள்" என்னும் தலைப்பின் கீழுள்ள செய்தியின் அடிப்படைக் கருத்து "நுட்ப அடிப்படையில்" (Technically) உண்மைதான். ஆனால் அச் செய்தியின் தொனி நடந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்வதாகத் தெரியவில்லை. காரணம் எதுவாக இருப்பினும், இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சுட்டதுதான் (மேல்நோக்கி ஆயினும்) என்பதில் ஐயம் கிடையாது. மேலும், இதற்கு மேலுள்ள பகுதியில் இதற்கு முரண்பாடாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இப் பகுதியை நீக்கிவிடவேண்டும் என்பது எனது கருத்து. மேலும் இது, விசாரணையை நேரடியாகப் பார்த்தவர் சான்று கொடுக்க வேண்டிய விடயமும் அல்ல. முழு விடயங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தவையே. மேற்காட்டிய சாட்சியை விட அவற்றுக்கு நம்பகத்தன்மை அதிகம். வேண்டுமானால். இறந்தவர்கள் என்னென்ன காரணங்களால் இறந்தார்கள் என்பதைப் பத்திரிகைகளையோ வேறு நூல் மூலங்களையோ சான்றுகாட்டி இக் கட்டுரையில் பட்டியல் இடலாம். மயூரநாதன் 05:35, 22 மார்ச் 2010 (UTC)