பொன்விழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்விழி
உருவாக்குனர்சிடாக்
இயக்கு முறைமைவிண்டோஸ்
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஒளிவழி எழுத்துரு அறிதல்
இணையத்தளம்www.ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm

பொன்விழி (ஆங்கிலம்: Ponvizhi) என்பது ஒரு தமிழ் ஒளிவழி எழுத்துரு அறிதல் மென்பொருளாகும். பொன்விழி மென்பொருளை விண்டோஸ் 95இலிருந்து அதன் பல பதிப்புக்கள் வரை பயன்படுத்த முடியும். படிம வருடி மூலம் பெறப்பட்ட பிட்மேப் படங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.[1] ஆரம்பத்தில் பணத்துக்கு விற்கப்பட்ட இந்த மென்பொருளானது சிடாக் மென்பொருள் இறுவட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. இது ஒரு மூடிய மூல மென்பொருளாகும்.[2]

சிறப்பம்சங்கள்[தொகு]

பிட்மேப் கோப்புகளிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் பிரித்தெடுப்பதற்கு இந்த மென்பொருள் உதவுகின்றது. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவுக்காகப் பயிற்சி வழங்கக் கூடிய வசதியும் பொன்விழி மென்பொருளில் உள்ளது. சில பகுதிகளை மட்டும் உபயோகிக்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம். உடனடித் திருத்தத்துக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்விழி&oldid=3931770" இலிருந்து மீள்விக்கப்பட்டது